மத்திய அமைச்சரவை

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் உறுப்பினராக சேரும் வாய்ப்பு அளிப்பதற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 NOV 2018 11:39AM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் உறுப்பினராக சேரும் வாய்ப்பு அளிப்பதற்காக  சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக இந்தக் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் ஏற்கனவே செய்யப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பலன்கள்:

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் உறுப்பினராகும் வாய்ப்பை பல நாடுகளுக்கு விரிவாக்குவதன் மூலம் சூரிய சக்தி சர்வதேச குறிக்கோளாக மாறும். இதன் மூலம் சர்வதேச அளவில் சூரிய சக்தியின் மேம்பாடு மற்றும் பயன்பாடு அதிகரிக்கும். இந்த திருத்தம் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பில் உறுப்பினராக சேரும். உறுப்பினர்கள் அதிகமாவதால்  சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பலன்கள் உலகமெங்கும் சென்றடையும்.

*****



(Release ID: 1551508) Visitor Counter : 150