பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடலோர காவல்படையின் 17 டோர்னியர் ரக விமானங்களை ரூ.950 கோடி செலவில் உயர் ரக தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்த பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல்
Posted On:
27 OCT 2018 4:02PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் தலைமையில் புதுதில்லியில் இன்று (27.10.2018) நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) 17 டோர்னியர் ரக விமானங்களை அதி நவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ.950 கோடி செலவில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய நலனைக் கருதி இந்திய கடலோரக் காவல்படை இந்திய கடல் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. கடல் பகுதியில் சுமார் 2.01 மில்லியன் சதுர கிலோமீட்டரைக் கொண்ட இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை (இஇஇசட்) பாதுகாத்து வரும் இந்திய கடலோர காவல்படையின் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் டோர்னியர் விமானங்களை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
******
(Release ID: 1550982)