தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியாவின் எதிர்கால எல்லைகளுக்கு வழிவகுக்கும் டிஜிட்டல் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் : மனோஜ் சின்ஹா
Posted On:
27 OCT 2018 3:51PM by PIB Chennai
பன்னாட்டு நிறுவனங்களின் கைபேசிகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்தியா மொபைல் காங்கிரசின் மூன்று நாள் கண்காட்சி மற்றும் மாநாடு புதுதில்லியில் இன்று (27.10.2018) நிறைவடைந்தது.
இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா கடந்த ஆண்டு பார்சிலோனவில் நடைபெற்ற உலக கைபேசி மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதாக தெரிவித்தார். அதனைக் காட்டிலும் தில்லியில் நடைபெற்று முடிந்த இந்த கண்காட்சி மற்றும் மாநாடு, மிகவும் சிறப்புமிக்கதாக அமைந்திருந்ததாக அவர் பாராட்டினார். இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று கைபேசி கண்காட்சி சர்வதேச அளவில் புதுதில்லியில் நடத்தப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா கூறினார்.
புதுதில்லியில் நடைபெற்று முடிந்த 3 நாள் கைபேசி கண்காட்சி மற்றும் மாநாட்டை மத்திய இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், வீட்டு வசதி மற்றும் நகரப்புற விவகாரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் முன்னிலையில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
****
(Release ID: 1550980)