இந்திய போட்டிகள் ஆணையம்
மலிவான சுகாதார சேவை திட்டத்திற்கான சந்தைகளை உருவாக்குவதில் இந்திய போட்டி ஆணையத்தின் கொள்கை குறிப்பு
प्रविष्टि तिथि:
24 OCT 2018 3:56PM by PIB Chennai
போட்டி சட்டம் 2002 அமலுக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் இந்திய போட்டி ஆணையம் மருந்து உற்பத்தி மற்றும் சுகாதாரச் சேவை துறைகள் சார்ந்த 52 புகார்களைப் பெற்றிருந்தது. இந்தப் புகார்கள் குறித்து ஆணையம் பரிசீலித்து முடிவெடுத்தபோது மருந்து உற்பத்தி மற்றும் சுகாதார சேவை துறைகளில் தகவல்கள் சமச்சீரற்றதாக இருப்பதால் நுகர்வோர்களின் தேர்வு குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கருதுகிறது.
இதைத் தொடர்ந்து மருந்து உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறைகளில் ஆணையம் கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக இந்தியாவில் சுகாதார சேவை மற்றும் மருந்து உற்பத்தித்துறையில் போட்டிப் பிரச்சினைகள் குறித்த தொழில்நுட்ப பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் இத்துறையில் தொடர்புடைய குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் மருந்து தொழில், சுகாதார சேவை அளிப்போர் சமூக தொண்டாற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கட்டுப்பாட்டாளர்கள், சுகாதார சேவை திட்ட வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இதில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்த பரிந்துரைகள் குறித்து, போட்டி ஆணையம் “மலிவான சுகாதார சேவை திட்டங்களுக்கான சந்தைகளை உருவாக்குதல்” என்ற தலைப்பில் கொள்கை குறிப்பாக பதிவு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைப்பக்கத்தைப் பார்க்கவும்
*****
(रिलीज़ आईडी: 1550910)
आगंतुक पटल : 325
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English