ரெயில்வே அமைச்சகம்

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் – கலிலாபாத் இடையே புதிய ரயில் பாதைக்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 OCT 2018 1:18PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் – கலிலாபாத் இடையே புதிய ரயில் பாதைக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு  ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய அகல ரயில்பாதையின்  மொத்த நீளம் 240.26 கி.மீ-ஆக இருக்கும்.

   இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ.4939.78 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2024-25 வாக்கில் நிறைவுபெறும். வடகிழக்கு ரயில்வேயைச் சேர்ந்ததாக இது இருக்கும். ரயில்பாதைக் கட்டுமானத்தின்போது 57.67 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

  இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ரயில் வசதி கிடைப்பதோடு, சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும். நிதி ஆயோக் அடையாளம் கண்டுள்ள முன்னேற விரும்பும் 115 மாவட்டங்களில் இந்த ரயில்பாதை அமையும் பகுதியையொட்டி, பஹ்ராய்ச், பல்ராம்பூர், ஷ்ரவஸ்தி, சித்தார்த் நகர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

***********


(रिलीज़ आईडी: 1550590) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English