ஜவுளித்துறை அமைச்சகம்
6வது சர்வதேச பட்டு கண்காட்சி – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி துவக்கி வைத்தார்
Posted On:
16 OCT 2018 6:34PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று பிரகதி மைதானத்தில் ஆறாவது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் ஃபாம் சான் ஷவ் கலந்து கொண்டார்.
இந்த மூன்று நாள் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 108 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிக்கு வைக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலிருந்து 10 நிறுவனங்களும், ஜம்மு-கஷ்மீரிலிருந்து 9 நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன. பல்வேறு நாடுகளிலிருந்து 147 வாடிக்கையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். வியட்நாம், இலங்கை, ஆஸ்திரேலியா, குவைத் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் அதிகளவில் பட்டு மற்றும் பட்டு சார்ந்த பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
சீனாவிற்கு அடுத்ததாக உலகளவில் பட்டு உற்பத்தி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்து, மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, வியட்நாம் மற்றும் இலங்கையில் இந்திய பட்டு பொருட்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
இந்த மூன்றுநாள் கண்காட்சியில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
(Release ID: 1549910)
Visitor Counter : 206