பாதுகாப்பு அமைச்சகம்

ஐக்கிய அரபு எமிரகத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் இணையமைச்சரின் இந்தியப் பயணம்

Posted On: 16 OCT 2018 5:25PM by PIB Chennai

ஐக்கிய அரபு எமிரகத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் இணையமைச்சர் திரு. முகமது அஹமது அல் போவார்டி அல் ஃபலாசி, பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அழைப்பின் பேரில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதுதில்லியில் இன்று அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துப் பேசினார். இரு அமைச்சர்களும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.  இருநாடுகளின் தலைவர்களும் விரிவாக்கப்பட்ட இந்திய-ஐக்கிய அரபு எமிரக பாதுகாப்பு கூட்டாண்மையில், மேலும் ஆழமான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருவதை இரண்டு அமைச்சர்களும் சுட்டிக்காட்டினார்கள்.

இந்தச் சந்திப்பின்போது, பல தரப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்த அமைச்சர்கள், மேம்படுத்தப்பட்ட ராணுவங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை, பயிற்சி, ராணுவ மருத்துவம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை உறவுகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

ஐக்கிய அரபு எமிரக பாதுகாப்பு இணையமைச்சர் நாளை (17.10.18) பெங்களுருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், விமானம் மற்றும் கணிணி அமைப்புகள் சோதனை நிறுவனம் ஆகியவற்றுக்குச் சென்று பார்க்கிறார்.

--------


(Release ID: 1549905)
Read this release in: English