வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

காலணி மற்றும் தோல் துறைக்கான மத்திய அரசின்’ சிறப்பு உதவி – தமிழ்நாட்டில் நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல்

Posted On: 11 OCT 2018 11:05AM by PIB Chennai

தோல் மற்றும் காலணித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கு வதற்கான ஒரு சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய துறைத் திட்ட அமலாக்கம் தொடர்புடைய இந்திய காலணி, தோல் & உப பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (ஐ.எஃப்.எல்.ஏ.டி.பி.) 2017 – 2020 ஆண்டுகளுக்கான செலவாக ரூ.2,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சூழல் நிலைப்புத்தன்மை ஆகியவற்றை செயல்படுத்த தொழிற்சாலைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் ஐ.எஃப்.எல்.ஏ.டி.பி-யின் கீழ் தமிழ்நாட்டில் தோல் தொழிலை ஊக்கப்படுத்த  ரூ.107.33 கோடி மொத்த ஒதுக்கீட்டுடன் நான்கு திட்டங்கள் அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 திருச்சியில் சி இ டி பி யை மேம்படுத்துதல், நாகல்கேணி குரோம் பேட்டையில் பல்லாவரம் சி இ டி பி, ராணிப்பேட்டையில் சிட்கோ கட்டம் – 1 சி இ டி பி, ஈரோட்டில் பெருந்துறை தோல் தொழிற்சாலைகள் எக்கோ செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவை தமிழ்நாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட  திட்டங்களாகும்.



(Release ID: 1549383) Visitor Counter : 225


Read this release in: English , Hindi , Marathi , Malayalam