வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ரஷிய முதலீட்டுக்கு விரைவான நடைமுறை: வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு

Posted On: 05 OCT 2018 3:35PM by PIB Chennai

                                

புது தில்லியில் இந்திய ரஷிய வர்த்தக உயர்நிலைக் கூட்டத்தில் அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு பேசுகிறார்

 

 

இந்தியாவில் ரஷியா முதலீடு செய்வதற்கான நடைமுறையை விரைவுபடுத்தும் வகையில் ஒற்றைச் சாளர நடைமுறை தொழில்கொள்கை, மேம்பாட்டுத் துறைச் செயலர் தலைமையில் உருவாக்கப்படும் என்று மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

தில்லியில் இன்று நடைபெற்ற இந்திய – ரஷிய வர்த்தக உயர்நிலைக் கூட்டத்தில் அவர் பேசினார். தொழில் வர்த்தக அமைச்சகத்தின் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையும் (DIPP) இந்திய தொழிலகக் கூட்டமைப்பும் (CII) இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

******

 



(Release ID: 1548769) Visitor Counter : 122