நிதி அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் சாலை மேம்பாட்டுக்கு 110 மில்லியன் டாலர் கடனுதவி - ஆசிய வங்கியுடன் இந்தியா உடன்பாடு

Posted On: 05 OCT 2018 1:31PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 110 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 816 கோடி) கடனுதவியில் பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்தின் (PMGSY) கீழ் 2,800 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் இன்று கையெழுத்தானது.

இரண்டாவது ஊரக இணைப்பு முதலீட்டுத் திட்டம் எனப்படும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலர் (பொருளாதார விவகாரம்) திரு. சமீர் குமார் காரே, ஆசிய வளர்ச்சி வங்கி (இந்தியா) உள்நாட்டு இயக்குநர் திரு. கெனிசி யோகோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஊரகச் சாலைகள் எல்லாப் பருவ காலத்துக்கும் ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

*****



(Release ID: 1548754) Visitor Counter : 129


Read this release in: English , Hindi