இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2018 11:11AM by PIB Chennai
தரவரிசையில் மேலிருக்கும் மாநிலம், மாவட்டம் மற்றும் அதிகபட்ச குடிமக்கள் பங்கேற்பு அடிப்படையில் தெரிவு செய்யப்படும் மாநிலம் ஆகியவற்றுக்கு மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள 2018-க்கான தேசிய தூய்மை சுற்றாய்வு கிராமின் விருதுகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டின் நிறைவு அமர்வில், பிரதமரால் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தூய்மை சுற்றாய்வு கிராமின் 2018 மேற்கொண்ட ஆய்வின்படி, ஹரியானா தரவரிசையில் சிறந்த மாநிலமாகவும், மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் தரவரிசையில் சிறந்த மாவட்டமாகவும் தெரிவு செய்யப்பட்டன. அதிகபட்ச குடிமக்கள் பங்கேற்புக்காக உத்தரப் பிரதேசத்திற்கு விருது வழங்கப்பட்டது.
தூய்மை சுற்றாய்வின் பகுதியாக நாடு முழுவதும் உள்ள 685 மாவட்டங்களில் 6,786 கிராமங்கள் இடம்பெற்றன. இந்த 6,786 கிராமங்களில் பள்ளிகள், அங்கன்வாடிகள், பொது சுகாதார மையங்கள், கடைவீதிகள், வழிப்பாட்டுத் தலங்கள் போன்ற 27,963 பொது இடங்களை ஆய்வுக்காக சுயேச்சையான முகமை பார்வையிட்டது. தூய்மை இந்தியா கிராமின் தொடர்பாக கிராமங்களில் இருந்து கருத்துக்களை அறிய சுமார் 1,82,531 குடிமக்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.
தென்னிந்தியாவில் தெலங்கானாவில் உள்ள பெட்டப்பள்ளி தரவரிசையில் முதலாவது மாவட்டமாகவும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி இரண்டாவது மாவட்டமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
********