விவசாயத்துறை அமைச்சகம்

2018-19 ஆம் ஆண்டு ரபிப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 03 OCT 2018 6:52PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்தும் வகையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2019-20 ஆம் ஆண்டு சந்தைப்படுத்துவதற்குரிய 2018-19 ஆம் ஆண்டு ரபிப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக கிடைக்கும் வகையிலும், விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்க உதவும் வகையிலும் குறிப்பிட்ட பயிர் வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.62,635 கோடி வருவாய் கிடைக்கும்.

கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ.105-ம் (ரூ.1840), சமையல் எண்ணெய் உற்பத்திக்கான சாஃபிளவருக்கு குவிண்டாலுக்கு ரூ.845-ம் (ரூ.4945), பார்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.30-ம் (ரூ.1440), சிவப்பு நிற துவரம் பருப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.225-ம் (ரூ. 4475), பயறு வகைகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.220-ம் (ரூ.4620), கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.200-ம் (ரூ.4200) குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அடைப்புக் குறிக்குள் இருப்பது உயர்வுக்குப் பிந்தைய விலை.

உற்பத்தி செலவை விட கூடுதலாக கிடைக்கும் தொகையின் சதவீத விவரம்:

கோதுமை-112.5, பார்லி-67.4, பயறு வகைகள்-75.2, சிவப்பு துவரம் பருப்பு-76.7, கடுகு-89.9, சாஃபிளவர்-50.1.



(Release ID: 1548461) Visitor Counter : 146


Read this release in: English , Urdu