பாதுகாப்பு அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
02 OCT 2018 1:59PM by PIB Chennai
தில்லி கண்டோன்மென்ட் வளாகத்தில் இன்று (02.10.2018) நடைபெற்ற 'தூய்மையே சேவை' இயக்கத்தை பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, மத்திய அரசின் 'தூய்மையே சேவை' இயக்கத்தை முன்னெடுத்து செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக கூறினார். 2014 அக்டோபர் 2-ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட மாபெரும் அரசு திட்டமான தூய்மை இந்தியா இயக்கத்தில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து பங்கு பெற்றதாக அவர் தெரிவித்தார். தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் கனவை நிறைவேற்றும் வகையில், அவரது 145-வது பிறந்த நாளில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 'சுதந்திரத்தைவிட துப்புரவு மிகவும் அவசியம்' என காந்தியடிகள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பாபுஜியின் தொலைநோக்கு சிந்தனையில் காந்தியடிகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் கூட, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் தனிநபர் தூய்மை பற்றி மத்திய அரசால் இதற்கு முன்பும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பிறகும், துப்புரவு, தூய்மை பணிகளில் போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, தூய்மையான இந்தியாவை காண விரும்பிய மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே தூய்மை பாரதம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் திருமதி.நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறையின் கட்டடங்கள் பராமரிப்புப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் திரு. சுரேஷ் நாகர், அங்கு கூடியிருந்த சுமார் 2000க்கும் மேற்பட்டோருக்கு தூய்மை உறுதிமொழி செய்து வைத்தார். பாதுகாப்புத் துறையின் கட்டடங்கள் பராமரிப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் திருமதி தீபா பாஜ்வா, பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் திரு. சுபாஷ் சந்திரா, தில்லி பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஆசித் மிஸ்திரி, பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், குடியரசுத் தலைவரின் கண்டோன்மென்ட் வாரியர் பிரிகேடியர் ராஜேஷ் சச்தேவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
---------
(Release ID: 1548261)
Visitor Counter : 223