ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராக (தண்டவாள வாகனங்கள்) திரு. ராஜேஷ் அகர்வால் பொறுப்பேற்றார்

Posted On: 01 OCT 2018 12:59PM by PIB Chennai

ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராகவும் (தண்டவாள வாகனங்கள்) மற்றும் மத்திய அரசின் அலுவல் சார்ந்த செயலராக திரு. ராஜேஷ் அகர்வால் செப்டம்பர் 28, 2018 பொறுப்பேற்றார்.

திரு. ராஜேஷ் அகர்வால்

 

திரு. ராஜேஷ் அகர்வால், 1980-ம் ஆண்டின் இந்திய ரயில்வே பணி இயந்திரப் பொறியியல் தொகுப்பை சேர்ந்தவர். இதற்கு முன்பு அவர் ரேபெரேலியில் உள்ள நவீன இணைப்பு பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளராக பணிபுரிந்தார். திரு. அகர்வாலுக்கு புத்துயிரூட்ட மேலாண்மை, திறன் மேலாண்மை, உற்பத்தி, தளவாடங்கள், பொறியியல் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் அனுபவம் உண்டு. உலக பாரம்பரியம், சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாச்சாரம், அருங்காட்சியகம், ஆற்றல் சேமிப்பு,  நீடித்த வளர்ச்சி, தொடர்புடையோர் கட்டமைப்பு, சமுக நலன் ஆகிய துறைகளில் யுனெஸ்கோவில் நிபுணராக பணிபுரிந்தார். அவர்  இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், உலோகத் தொழிற்கலை பொறியியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றுள்ளார்.

அவரின் நீண்ட பணிக் காலத்தின்போது, திரு. அகர்வால் ரயில்வேயின் எட்டு  மண்டலங்களிலும் நிர்வாக மற்றும் மேலாளர் பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். அவர் ரயில்வே வாரியம், நவீன இணைப்பு பெட்டி தொழிற்சாலை மற்றும் சி.ஆர்.ஐ.எஸ் ஆகிய இடங்களிலும் பணிபுரிந்துள்ளார். தேசிய ரயில் அருங்காட்சியகத்தின் இயக்குனர், தெற்கு ரயில்வேயின் கோட்ட மேலாளார், வடக்கு மலை பிராந்திய ரயில்வேயின் துணை பொது மேலாளர் மற்றும் தலைமை கண்காணிப்பு அலுவலர், மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை இயந்திரப் பொறியாளராகவும் பணிபுரிந்துள்ளார்.    

திரு அகர்வால் அகில இந்திய ரயில்வேயின் உலக பாரம்பரிய இடங்கள் பற்றிய நூல் ஆசிரியர் ஆவார்.    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு பயிற்சிகள் பெற்றுள்ள அவர் பலவேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.  

***


(Release ID: 1548168) Visitor Counter : 205


Read this release in: English , Hindi