பிரதமர் அலுவலகம்

பிரதமர் 30.09.2018 அன்று ஆற்றிய 48-வது மன் கீ பாத் உரையின் ஆங்கில மொழியாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2018 11:50AM by PIB Chennai

எனது அருமை நாட்டு மக்களே, வணக்கம். நமது ஆயுதப் படைகள், நமது ராணுவ வீர்ர்கள், நமது படை வீர்ர்கள் ஆகியோரை பற்றி பெருமிதம் கொள்ளாத இந்தியர்களே இல்லை எனலாம்.  ஒவ்வொரு இந்தியனும், தான் சார்ந்த மண்டலம், சாதி, மதம், பிரிவு, மொழி என எந்த பாகுபாடுமின்றி, நமது ராணுவ வீரர்களுக்கு தங்களது உறுதிபாட்டை வெளிப்படுத்துகின்றனர். நாட்டில் உள்ள  125 கோடி இந்திய மக்களும், நேற்று வீர தீரத்தை பறைசாற்றும் விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் நாம் அனைவரும் 2016-ல் பயங்கரவாதம் என்ற பெயரில் மறைமுகப் போரை   தொடுத்தவர்களுக்கு நமது வீரர்கள் துல்லியத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்ததை நினைவு கூர்ந்தோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதப்படையினர் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலம் மிக அதிகபட்சமான குடிமக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு நமது நாட்டின் பலம் குறித்து எடுத்துரைத்தனர். நாம் எவ்வளவுத் திறன் பெற்றவர்கள், நாட்டு மக்களை பாதுகாக்க நமது வீரர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது உழைக்கின்றனர் என்பதையும் எடுத்துக் காட்டினர். நமது ராணுவத்தின் பெருமைமிகு பாரம்பரியத்தை இளைஞர்களுக்கு இதுபோன்ற வீரதீர விழாக்கள் மூலம் நினைவுக்குக் கொண்டு வருகின்றனர். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிப் பாதுகாக்க அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. வீரமிகு ராஜஸ்தானில் ஜோத்பூரில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். நமது நாட்டின் அமைதி, முன்னேற்றச் சூழலைக் குலைக்க எவர் முயன்றாலும், அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் அமைதியில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டுள்ளோம். :  அமைதியை முன்னெடுத்துச் செல்வதில் நாம் உறுதியுடன் உள்ளோம்…. ஆனால், நமது நாட்டின் சுயமரியாதையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுத்து அல்ல. இந்தியா அமைதியில் மிக தீவிரமான உறுதிப்பாட்டை கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாம்  உலகபோர்களில்  ஒரு லட்சத்திற்கும் கூடுதலான நமது வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்: அதிலும் நாம் எந்த வகையிலும் சம்பந்தப்படாத போரில் இந்த தியாகத்தை செய்தனர். நாம் எந்த காலத்திலும் வேறு ஒருவரின் நிலப்பரப்பை அபகரிக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. இதுவே நாம் அமைதியின்பால் கொண்டுள்ள உறுதிபாடும், அர்ப்பணிப்பு ஆகும். சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 23ஆம் தேதி, இஸ்ரேல் நாட்டின் ஹாய்ஃபா யுத்தத்தின் நூற்றாண்டு தினத்தன்று, நாம் நமது மைசூர். ஹைதராபாத்,  ஜோதுபூர் ஈட்டிப்படை ஆகியவற்றை சேர்ந்த வீர்ர்கள். ஹாய்ஃபாவை அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்ததை நினைவு கூர்ந்து அந்த வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். அமைதியை நோக்கிய நமது பாதையில் நமது வீரர்கள் ஆற்றிய இந்த வீரச்செயலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இன்றும்கூட இந்தியா, ஐ.நா. அமைதி காப்புப் படைகளின் பல்வேறு பகுதிகளில் பெருமளவில் வீரர்களை அனுப்பி பங்கேற்பு செய்து வருகிறது. பல பத்தாண்டுகளாக நீல நிற தலைக்கவசம் அணிந்த நமது வீர்ர்கள் உலக அமைதியை பராமரிக்க தங்களது உறுதியான பங்கு பணியை ஆற்றி வருகிறார்கள்.

  எனது அருமை நாட்டு மக்களே, வானம் பல வண்ணங்களின் அபூர்வக் காட்சிகளை வழங்குகிறது. இந்திய விமானப்படை, குடிமக்கள் ஒவ்வொருவரின் கண்மணி போன்றது என்பதை நிரூபித்து வருகிறது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தனது வலுவை ஆகாயத்தில்  சாகசச் செயல்களை செய்து இந்திய விமானப்படை சாதித்து வருகிறது. இந்தப் படை நம்மிடையே ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தின அணிவகுப்பின்போது, பார்வையாளர்கள் அனைவரும் ஆவலோடு காண காத்திருக்கும் குறிப்பிடத்தக்க அம்சம் விமானப்படையின் மாபெரும் வண்ணமிகு சாகசக்  காட்சிகளாகும். அப்போது இந்த விமானங்கள் ஆகாயத்தில் செய்யும் சாகசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

  நாம் விமானப்படை தினத்தை அக்டோபர் 8ம் தேதி  கொண்டாடுகிறோம். 1932-ல் ஆறு விமானிகள், 19 விமான உதவியாளர்கள் ஆகியோருடன் எளிமையாக தொடங்கிய நமது விமானப்படை 21-ம் நூற்றாண்டில் இன்று உலகின் மிக வலுவான, மிக வீரம்கொண்ட விமானப்படையாக உருவெடுத்துள்ளது. நாட்டிற்கு சேவையாற்றிய இந்த விமானப்படை போர் வீர்ர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த  பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1947-ல் பாகிஸ்தான் படைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் தாக்குதல் நடத்தியபோது, யுத்த களத்தில் இந்திய வீரர்களுக்கு, ஆயுதங்கள் சென்றடைவதை விமானப்படைதான் உறுதி செய்தது. 1965 போரின்போதும் இந்திய விமானப்படை தகுந்த பதிலடிக் கொடுத்தது. 1971 பங்களாதேஷ் விடுதலைப் போர் குறித்து அறியாதவர்கள் யாரும் இல்லை.  இந்திய விமானப்படை 1999-ல் ஊடுருவல்காரர்களை பின்வாங்க செய்ததில் முக்கியப் பங்காற்றியது.  இதன் மூலம் கார்கில் பகுதியை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்தது. டைகர் மலைப் பகுதியில் எதிரியை தோற்கடித்த இந்திய விமானப்படை 24 மணிநேரமும் எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. உதவி நிவாரணப் பணிகள், பேரிடர் நிர்வாகம் போன்றவற்றில் விமானப்படை வீர்ர்கள் ஆற்றிய பாராட்டத்தக்க செயல்களுக்கு நாடு நமது விமானப்படைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. புயல், சூறாவளி, வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்  சமயங்களில் இந்திய விமானப்படையினர் தங்கள் தனித் திறன்களை வெளிப்படுத்தி  நாட்டு மக்களுக்கு முழுமையாக உதவியுள்ளனர்.  பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் இந்திய விமானப்படை உதாரணமாக திகழ்கிறது. இந்திய பெண்மணிகளுக்கு தனது கதவை விமானப்படையில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் பெண்களுக்கு குறுகிய கால அதிகாரிகள் பதவிகளுடன், நிரந்தர அதிகாரிகள் பதவிகளும் வழங்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை சென்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து நான் வெளியிட்டேன்.

  நமது ஆயுதப்படைகளில் ஆண் வீரர்களின் சக்தி  மட்டுமன்றி பெண் வீராங்கனைகளின் சக்தியும் சம அளவு பங்கு பெறுகிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்ளலாம். பெண்கள் ஏற்கனவே அதிகாரம் பெற்றுள்ளனர், தற்போது ஆயுதப்படைகளிலும் பணியாற்றுகின்றனர்.

  எனது அருமை நாட்டு மக்களே, சில தினங்களுக்குமுன் நமது கப்பற்படையின் அதிகாரி அபிலாஷ் டோமி, உயிருக்கு போராடிய நிலை ஏற்பட்டது. அவரை காப்பாற்ற நாடு முழுமையுமே அக்கறைச் செலுத்தியது. அபிலாஷ் டோமி மிக தைரியமான வீரமுள்ள கப்பற்படை அதிகாரி என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் நவீனத் தொழில்நுட்பம் ஏதுமில்லாத சிறிய படகில் உலகை சுற்றும் வீரச் செயலை மேற்கொண்டிருந்த முதலாவது இந்தியர் ஆவார். கடந்த 80 தினங்களாக கோல்டன் குளோப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் தெற்கு இந்துமா கடலில் விரைவாக சென்றுக்கொண்டிருந்தார்.  அப்போது திடீரென பலத்த சூறாவளி புயல் தாக்கி, அவர் இன்னலுக்கு உள்ளானார். எனினும், இந்த வீர மனம் கொண்ட கப்பற்படை அதிகாரி நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்துக் கொண்டிருந்தார். உணவு, தண்ணீர் ஏதுமின்றி மிதந்துகொண்டு இருக்க மிகுந்த முயற்சி மேற்கொண்டிருந்தார். தோல்வியை ஏற்க அவர் தயாராக இல்லை. எதிரி மரணமாக இருந்தாலும், அவர்  போராடினார். இது தைரியம், மன உறுதி, உடல்வலு, வீர்ம் ஆகியவற்றின்  அபூர்வமான உதாரணமாகும். அபிலாஷ்  பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக கரை சேர்ந்தவுடன், நான் அவருடன் தொலைபேயில் பேசினேன். இத்தகைய கடுமையான நிலைமையை எதிர்நோக்கி இருந்தபோதிலும், அவர் இதேபோன்ற மேலும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்பியது அவரின் மன உறுதியை தெளிவாக காட்டியது. அவர் நமது இளைய சமுதாயத்தினருக்கு மன எழுச்சியை ஏற்படுத்தக் கூடியவர். டோமியின் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரது வீர தீரமும் வெற்றிபெற இறுதிவரைப் போராடும் திண்ணமும் நமது இளைய சமுதாயத்தினருக்கு உத்வேகம் அளிக்கும் என்பது உறுதி.

  எனது அருமை நாட்டு  மக்களே, நமது நாட்டில் அக்டோபர் 2-ஆம் தேதியின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு குழந்தையும் நன்கு அறியும்.  இந்த ஆண்டின் அக்டோபர் 2ஆம் தேதி தனிச் சிறப்பு வாய்ந்தது. தற்போதிலிருந்து அடுத்த இரண்டாண்டுகளுக்கு உலகெங்கும் மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளோம். மகாத்மா காந்தியின்  தத்துவங்கள் மொத்த உலகுக்கும் வழிகாட்டியாக விளங்குகின்றன. 

  டாக்டர் மார்டின் லூதர் கிங், திரு. நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் காந்திஜியின் கொள்கைகளிலிருந்து மக்களிடையே சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நீண்ட போரில் பங்கேற்று போரிடும் தைரியத்தைப் பெற்றனர். இன்றைய மனதின் குரல் உரையில், மதிப்பிற்குரிய மகாத்மா காந்தியின்  மற்றொரு முக்கியமான பணி குறித்து பேச விரும்புகிறேன். இதனை அதிகபட்சமான மக்கள் அறியவேண்டும். 1941ல் மகாத்மா காந்தியடிகள் ஆக்கப்பூர்வ திட்டங்கள் வடிவில் தனது சிந்தனைகள்  சிலவற்றை எழுத தொடங்கினார். பின்னர், 1945-ல் சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்தபோது, இந்த கருத்துக்களின் திருத்தப்பட்ட பிரதியை அவர் தயாரித்தார். விவசாயிகள், கிராமங்கள், தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாப்பது, தூய்மை, கல்வி மேம்பாடு போன்ற பல்வேறு பொருட்கள் குறித்து மதிப்புமிகு மகாத்மா காந்தி, தமது கருத்தை வெளியிட்டார்.  இந்த திருத்தப்பட்ட ஆவணம் காந்தி சாசனம் என்று அழைக்கப்பட்டது. மதிப்புமிகு மகாத்மா காந்தி, மக்களின் தோழர், மக்களுடன் தொடர்புகொள்வது, மக்களை தன்னுடன் இணைப்பது ஆகியன மகாத்மா காந்தியின்  சிறப்பு பண்புகள். அது அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அவரது ஆளுமையில் இது மிகவும் தனித்தன்மை கொண்டது  ஒரு பண்பு என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் தாம்  மிகுந்த முக்கியமானவர்கள் நாட்டிற்கு மிகவும் தேவையானவர்கள் என்று உணரச் செய்தவர் அவர். சுதந்திரப் போராட்டத்தில் அவரது மிகப்பெரிய பங்களிப்பு, அவர் அந்த போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக  மாற்றியதுதான்.  சுதந்திரப் போராட்டத்தின்போது அனைத்து தரப்பு, அனைத்து சமயங்களைசேர்ந்த மக்கள், மகாத்மா காந்தியின் அழைப்புக்கு அர்ப்பணிப்புடன் உடன்பட்டனர். பாபு அவர்கள், நம் அனைவருக்கும் மன எழுச்சி மந்திரத்தை அளித்தார். அதுவே காந்திஜியின் தாயத்து என்று அறியப்பட்டது. இதுதொடர்பாக காந்தியடிகள் சொன்னார், “  நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை தருகிறேன், உங்களுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம், அல்லது உங்களது ஆணவம், உங்கள் ஆளுமையை வெற்றி கொள்ளும்போதோ, இந்த சோதனையை செய்யுங்கள்”  நீங்கள் பார்த்த மிகவும் ஏழையான அல்லது மிகவும் நலிந்த நபரின் முகத்தை நினைவுக்கு கொண்டு வந்து உங்கள் உள்மனத்திடம் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை இந்த நபருக்கு  எவ்வாறு உதவும் என்று கேட்டுப்பாருங்கள். இத்திட்டம் எவ்வகையிலாவது அவருக்கு உதவுமா!  உங்கள் நடவடிக்கை மூலம் இந்த நபர் தனது வாழ்க்கை அல்லது விதியை கட்டுப்படுத்த உதவுமா! இத்தகைய பட்டினியாக உள்ள அதிருப்தி அடைந்த ஆன்மாக்களை கொண்ட  பல லட்சக்கணக்கான மக்கள் சுயராஜ்யம் அடைய இது உதவுமா! அப்படியானால், உங்களுடைய ஐயப்பாடு மறைந்துவிடும். உங்களது ஆணவம் அடங்கிவிடும்.”

எனது அருமை நாட்டு மக்களே, காந்திஜியின் மந்திரங்களில் ஒன்று, இன்றும் பொருத்தமுள்ளதாக உள்ளது. உயர்ந்து வரும் பொருளாதார ஆற்றல் கொண்ட, உயர்ந்துவரும் வாங்கும் திறன்கொண்ட நாட்டில் பெருகி வரும் நடுத்தரப் பிரிவினர் பொருட்கள் வாங்கச் செல்லும்போது ஒரு நொடி  மகாத்மா காந்தியை நினைத்துப் பார்ப்பார்களா,  மகாத்மா காந்தியின் இந்த மந்திரத்தை நாம் நினைத்துப் பார்ப்போமா. “ ஒரு பொருளை வாங்கும்போதும், இதன் மூலம் நம் நாட்டின் உள்ள  எவர் பயனைடைவர் என ஒரு நொடி சிந்தித்துப் பார்க்கலாமா;  உங்களது வாங்குதல் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனடைந்து அதனால், முகம் மலருபவர் எவர்!  எனது வாங்குதல் ஏழைகளில் மிகவும் ஏழையான ஒருவருக்கு பயனளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். “  இந்த காந்திஜியின் மந்திரத்தை பொருள் வாங்கும்போது மனதில் கொண்டு,  நமது நாட்டு மக்களில்  பணம் முதலீடு செய்த அல்லது உடல் உழைப்பை முதலீடு செய்த, தனது திறனை பயன்படுத்திய  எவரையாவது பயனடையும் செய்யும் வகையில் அது அமைந்திருக்க காந்திஜீயின் 150 வது  பிறந்த நாளின்போது நாம் உறுதி ஏற்கவேண்டும். இதுதான், காந்திஜியின் மந்திரமாகும். இதுதான் காந்திஜியின் செய்தியாகும். உங்களது மிக சிறிய இத்தகைய நடவடிக்கை மிகவும் ஏழையான, மிகுந்த வாய்ப்பு வசதிகளற்ற ஒருவரின் வாழ்க்கையில் பெரிய பயனை அளிக்கும் என்று நான் உறுதியுடன் நம்புகிறேன்.

 எனது அருமை நாட்டு மக்களே, தூய்மையை பேணினால் சுதந்திரம் கிடைக்கும் என்று காந்திஜி சொன்னபோது, இது எவ்வாறு நடக்கும் என்பதை அவர் அறியாது இருந்திருக்கலாம். ஆனால், இது நடைபெற்றது பின்னர் இந்தியா விடுதலைப் பெற்றது. இதேபோல, இன்று ஒரு சிறிய பங்களிப்பின் மூலம் பொருளாதார மேம்பாட்டுக்கும், பொருளாதார அதிகாரமளித்தலுக்கும், ஏழ்மைக்கு எதிரான போரட்டத்தில் பெரிய அளவில் பங்களிக்கிறோம்,. இதன் மூலம் ஏழை மக்களுக்கு வலுவூட்டுகிறோம். என்பதை உணரவேண்டும். இதுவே உண்மையான நாட்டுப்பற்று என்று நான் கருதுகிறேன். இதுவே மகாத்மா காந்தியின் பணிகளுக்கு நாம் வழங்கும் அஞ்சலி. உதாரணமாக விழாக் காலங்களில் காதிப்பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் வாங்குவது குறித்து ஆலோசியுங்கள். இது மிக பல நெசவாளர்களுக்கு பயனளிக்கும். லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பழைய, கந்தலாகிபோன  கதர் துணிகளை பாதுகாத்து வைப்பார். இந்த துணிகள் தயாரிக்கும்போது தொழிலாளர்கள் செலுத்திய பணியும், கவனமும் இதில் உணரப்படுகிறது என்று அவர் கருதினார்.  இந்த கதர் துணிகள் அனைத்தும் கடுமையான உழைப்பின் பலன்கள் என்றும், இதன் ஒவ்வொரு நூலும் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் சொல்லுவாராம். நாட்டின்மீதும் நாட்டு மக்கள் மீதும் உள்ள இத்தகைய ஈடுபாடு, அந்த உயரம் குறைவான மாபெரும் மனிதரிடம் ஆழ்ந்து காணப்பட்டது.  இரண்டு நாட்களுக்கு பின்னர் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்துடன் சேர்த்து சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளையும் கொண்டாட உள்ளோம். இந்தியர்களாகிய நமது மனதில் சாஸ்திரியின் பெயர் நிரந்தரமான நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. அவரது மேன்மையான ஆளுமை ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதம் கொள்ள செய்கிறது.

  லால் பகதூர் சாஸ்திரிக்கு ஒரு தனிப்பட்ட குணம் உண்டு, அவர் வெளியில் பார்க்கும்போது எளிமையான தோற்றம் கொண்டவர், ஆனால் மனதளவில் பாறை போன்ற உறுதி கொண்டவர். அவரது “ ஜெய் ஜவான், ஜெய் கிஷான்” முழக்கம் அவரது மாபெரும் ஆளுமையின் அடையாளம், அவர் நாட்டுக்கு ஆற்றிய தன்னலமற்ற சேவையின் விளைவு அது. மிகவும் குறுகிய ஒன்றரை ஆண்டு பதவி காலத்தின்போது அவர் நமது ராணுவ வீரர்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்த இந்த மந்திரம், வெற்றியின் உச்சத்தை அடைய உதவியது.

  எனது அருமை நாட்டு மக்களே, மகாத்மா காந்தியை  இன்று நாம் நினைவுகூறும் இந்த தருணத்தில் தூய்மையை பற்றி பேசாமல் விடுவது பொருந்தாது. இம்மாதம் 15ம் தேதி  “ தூய்மையே சேவை “  என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். தில்லியில் அம்பேத்கர் பள்ளியில் குழந்தைகளுடன் சேர்ந்து தூய்மை சேவை பணியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாபா சாஹேப் அடிக்கல் நாட்டிய இந்த பள்ளிக்குச் செல்லும்  வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் இந்த தூய்மை இயக்கத்துடன் தங்களை இணைத்துக்கொண்டனர். நிறுவனங்களும் தங்கள் பங்கினை உற்சாகத்துடன் ஆற்றின. பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படை, தேசிய சமூக சேவை அமைப்பு, இளைஞர் அமைப்புகள், ஊடக நிறுவனங்கள், கம்பெனிகள் அனைத்தும் தூய்மை சேவையில் பெரிய அளவில் பங்களித்தன. இந்த முயற்சிகளுக்காக தூய்மையை விரும்பும் நாட்டு மக்களுக்கு என் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வெளியிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பை கவனிப்போம்.

  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தூய்மை என்பதற்கு குறிப்பிட்ட அர்த்தமுள்ளது என்ற முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளீர்கள், அதற்கு மிகவும் நன்றி, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், உங்கள் வீட்டில் கழிவறை கட்டப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவருக்கும்  மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது உங்கள் அனைவருக்கும் கழிவறை வசதி உள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் குறித்து இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்கள், அறியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், கழிவறை இல்லாதபோது இவர்கள் சந்தித்த இன்னல்களை எவரும் புரிந்துகொள்ள இயலும். கழிவறை அமைக்கப்பட்டது உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  இது குறித்து இந்த தொலைபேசி அழைப்பை நீங்கள் செய்திருக்காவிட்டால், இந்த உணர்வுபூர்வ பிரச்சனை குறித்து இந்த இயக்கத்துடன் தொடர்புக்  கொண்டவர்கள் சிந்தித்திருக்க  வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. எனவே தொலைபேசி அழைப்புக்காக தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  எனது அருமை நாட்டு மக்களே, தூய்மை இந்தியா இயக்கம், நமது நாட்டில் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திலும் வெற்றி கதையாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொருவரும், இந்த இயக்கம் குறித்து பேசி வருகிறார்கள். இதுவரை உலகம் கண்டிராத மிகப்பெரிய சுகாதார மாநாடான மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார  மாநாட்டுக்கு இந்தியா ஏற்பாடு செய்து வருகிறது. உலகம் எங்கும் உள்ள நாடுகளில் சுகாதாரத்துறை அமைச்சர்கள், சுகாதார நிபுணர்கள் இதில் பங்கேற்று தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். மகாத்மா காந்தி  சர்வதேச சுகாதார மாநாடு 2018 அக்டோபர் 2ம் தேதி நிறைவடையும். அதேசமயம் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கும்.

 எனது அருமை நாட்டு மக்களே, சமஸ்கிருத மேற்கோள் ஒன்று உள்ளது. न्यायमूलं स्वराज्यं स्यात्’ (Nyayamoolam Swarajyam Syat)   என்ற இந்த மேற்கோளுக்கு சுயராஜ்யத்தின் அடித்தளத்தில் நீதி உள்ளது என்று பொருள். நீதி பற்றி பேசும்போது மனித உரிமைகள் என்பது உள்ளடங்கி வரும். மனித உரிமைகள் என்பது, சுரண்டப்பட்ட, பாதிப்புக்கு உள்ளான, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் மற்றும் அமைதிக்கு மிகவும் அவசியமானது. அவர்களுக்கு நீதியை உறுதி செய்வதும் அதுவே.

   டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டத்தில் ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க பல பிரிவுகள் உள்ளன. அவரது  தொலைநோக்கு நாள் எழுச்சி பெற்று 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. சில தினங்களுக்கு பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது 22 வது ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இந்த ஆணையம் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் மனித கண்ணியத்தையும் மேம்படுத்தி வந்துள்ளது. நமது மதிப்பிற்குரிய தலைவர் முன்னாள் பிரதமர்  திரு அடல்  பிகாரி  வாஜ்பாய், மனித உரிமைகள் என்பது நாம் அறியாத ஒரு கருத்து அல்ல என்று தெளிவாக கூறியுள்ளார்.

  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சின்னத்தில் வேத கால மந்திரமான "Sarve Bhavantu Sukhinah" என்பது பொறிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகள் குறித்த மிக பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த ஆணையத்தின் 25 ஆண்டு கால பயணத்தில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கைச் சூழலை அது உருவாக்கி உள்ளது. ஆரோக்கியமான சமுதாயத்திற்கும், உயரிய ஜனநாயக நெறிகளுக்கும் இது நம்பிக்கை அளிக்கும் முக்கியமான அம்சமாகும். இன்று தேசிய நிலையில் செயல்படும். இந்த ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள் இருபத்தாறுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. சமுதாயம் என்ற முறையில் மனித உரிமைகள் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதனை நடைமுறையிலும் கடைபிடிக்கவேண்டும். இதுவே அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பதன் அடிப்படையாகும்.

எனது அருமை நாட்டு மக்களே, அக்டோபர் மாதம் ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்தநாளையும், ராஜமாதா விஜயராஜே சிந்தியா அவர்களின் பிறந்த நூற்றாண்டின் தொடக்கத்தையும் குறிக்கும் மாதமாகும். இந்த பெரியோர்கள் நம்மிடையே உத்வேகத்தை ஊட்டியவர்கள். அவர்களுக்கு நமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம். அகடோபர் 31ம் தேதி சர்தார் சாஹிப்பின் பிறந்த நாளாகும். எனது அடுத்த மனதில் குரல் உரையில் இவரது பிறந்த நாள் குறித்து விரிவாக குறிப்பிட உள்ளேன். ஆனால் இன்று கடநத் சில ஆண்டுகளாக சர்தார் சாஹிப்பின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமைஓட்டம் என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு சிறு நகரம் மற்றும் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இந்தாண்டும்கூட ஒற்றுமைக்கான ஓட்ட நிகழ்ச்சியை பெருநகரம், சிறு நகரங்கள், கிராமங்கள்தோறும் நாம் நடத்தவேண்டும். சர்தார் சாகிப்பை நினைவுகூறுவதற்கு இதுவே மிக சிறந்த வழியாகும். அவர் நமது வாழ்நாள் முழுவதும் தேச ஒற்றுமைக்காக உழைத்தவர். அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி மூலம் நாட்டின் அனைத்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கும் நமது முயற்சியை வலுப்படுத்தவேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே சர்தார் சாஹிப்புக்கும் நாம் செலுத்தும் மிக சிறந்த அஞ்சலியாகும்.

  எனது அருமை நாட்டு மக்களே, நவராத்திரியாகட்டும் துர்க்கா பூஜையாகட்டும், விஜயதசமியாகட்டும், இந்த புனித விழாக்களை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு நன்றி,

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1548030) வருகையாளர் எண்ணிக்கை : 530
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , Assamese , English , Marathi , Bengali , Kannada , Malayalam