சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பத்திரிகை குறிப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான நலக்குழு

இடுகை இடப்பட்ட நாள்: 27 SEP 2018 5:59PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேஷ் சிங் தலைமையில் இயங்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் நல்வாழ்வுக்கான  நாடாளுமன்றக் குழு, யூனியன் பிரதேசங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவைகளுக்கும், பதவிகளுக்குமான வேலைவாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் மேல்நிலையில் உள்ள பொருளாதார மற்றும் சமூக வாய்ப்பில் உள்ளவர்கள் குறித்து தற்போது ஆய்வு நடத்தி வருகிறது.

இந்தக் குழு இது தொடர்பான ஆலோசனைகளையும், கருத்துக்களையும், தனிநபர், நிபணர்கள், சங்கத்தினர், அமைப்பினர்  ஆகியோரிடமிருந்து வரவேற்கிறது.

இதுதொடர்பாக, மனுக்களை இந்தக் குழுவுக்கு அனுப்ப விரும்புவோர், அவற்றை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ, இந்தப் பத்திரிகை குறிப்பு வெளியான நாளிலிருந்து 20 நாட்களுக்குள்,  இயக்குநர், மக்களவைச் செயலகம், அறை எண்.131, நாடாளுமன்ற இல்ல இணைப்பு, புதுதில்லி-110 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  மின்னஞ்சல் முகவரி: comobc-Iss@sansad.nic.in

--------


(வெளியீட்டு அடையாள எண்: 1547754) வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க: English