ரெயில்வே அமைச்சகம்

கட்கோரா முதல் தோங்கர்கட் வரையிலான 294.53 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை, சத்தீஸ்கரில் இதுவரை ரயில் சேவை இல்லாத பகுதிகளில் ரயில் போக்குவரத்துக்கு வகை செய்துள்ளது

Posted On: 26 SEP 2018 3:59PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கீழ்கண்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:-

  1. கட்கோரா முதல் தோங்கர்கட் வரை 294.53 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை, சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை ரயில் போக்குவரத்து இல்லாத பகுதிகளில் ரயில் சேவையை ஏற்படுத்த வகை செய்திருப்பதுடன், மும்பை-ஹவுரா வழித்தடத்தில் நெரிசல் மிகுந்த ஜர்சுகுடா – நாக்பூர் பிரிவில், பிலாஸ்பூர், சம்பா மற்றும் துர்க் ரயில் நிலையங்களை தவிர்த்து செல்வதற்கும் இப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும்.
  2. சத்தீஸ்கரில் உள்ள கொர்பா, பிலாஸ்பூர், முங்கேலி, கபீர்தாம் மற்றும் ராஜ்நந்தகவுன் மாவட்டங்கள், இந்த புதிய ரயில் பாதை மூலம் பலனடையும்.
  3. ரூ.5950.47 கோடி திட்ட மதிப்பிலான இந்தப் பணிகள், சத்தீஸ்கர் கட்கோரா- தோங்கர்கட் ரயில்வே நிறுவனம் என்ற சிறப்பு நிறுவனத்தின் மூலம் ரயில்வே துறை, சத்தீஸ்கர் மாநில அரசின் சத்தீஸ்கர் நிறுவனம் மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நிறைவேற்றப்படும்.

ராய்கர் மாவட்டத்தில் (ராய்கர் – மாண்டு) நிலக்கரி வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் மற்றும் பல்வேறு சுரங்கங்கள் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தின் நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன், விரைவில் ஆண்டுக்கு 150 மெட்ரிக் டன் அளவிலிருந்து 250 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை காணவும்.



(Release ID: 1547533) Visitor Counter : 157


Read this release in: English