வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆந்திரா, ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு எளிய வாழ்க்கைக்கான சிறந்த விருது:மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி வழங்கினார்

Posted On: 24 SEP 2018 1:48PM by PIB Chennai

எளிய வாழ்க்கைக்கான குறியீட்டில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் பிடித்துள்ளன. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம், இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. புனரமைப்பு மற்றும் நகர்ப்புற சீரமைப்புக்கான அதல் இயக்கத்தின் சார்பில் இந்த மூன்று மாநிலங்களும் எளிய வாழ்க்கைக்கான மாநிலங்களாக தேர்வு செய்யப்பட்டு, இன்று நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி, தேசிய மற்றும் உலக அளவில் எளிய வாழ்க்கைக்கான நகரங்களை மதிப்பீடு செய்து, தேர்வு செய்வதற்கான முயற்சி இது என்று குறிப்பிட்டார். எளிய வாழ்க்கைக்கான குறியீடு, நகரங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என்றும், நகர்ப்புறத் திட்டம் மற்றும் மேலாண்மைக்கான சிறந்த அணுகுமுறை என்றும் அவர் பாராட்டினார்.

     மேலும் எளிய வாழ்க்கைக்கான பயிற்சிப் பாசறை அனைத்து மாநிலங்களுக்கும், தங்களது சிறந்த கருத்துகளை தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

********


(Release ID: 1547137) Visitor Counter : 152


Read this release in: English