PIB Headquarters

இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் – முதன்மைச் செயல் அலுவலராக திருமதி பத்மஜா சுந்துரு பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2018 6:18PM by PIB Chennai

                                                                         

இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக திருமதி பத்மஜா சுந்துரு செப்டம்பர் 21ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண் இயக்குநராக (உலகச் சந்தை) பணி புரிந்து வந்தார்.

 

திருமதி பத்மஜா 1984ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் பணியைத் தொடங்கினார். வங்கிப் பணியின்போது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முப்பது ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2014ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அமெரிக்காவில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியத் தலைவராக பணிபுரிந்துள்ளார்.

 

-------

ரெசின்


(வெளியீட்டு அடையாள எண்: 1547126) வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க: English