பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமது எகிப்து நாட்டின் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தார்

Posted On: 23 SEP 2018 5:04PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், எகிப்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்த மாதம் 20ஆம் தேதி எகிப்து புறப்பட்டுச் சென்றார்.  

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், எகிப்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜென்ரல் முஹமது அஹமது ஜாக்கி முஹமது ஆகியோர் பாதுகாப்புத் துறையில் சீராக வளர்ந்து வரும் இருநாடுகளின் உறவு குறித்து, திருப்தி தெரிவித்தனர். மேலும், பாதுகாப்புத் துறையில் தற்போது நடைபெற்று வரும் இருநாடுகளின் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய வாய்ப்புகள் குறித்து அவர்கள் மறுஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்புத் துறையில் முக்கிய வாய்ப்புகள், உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், அவற்றைப் பரிமாறிக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்புத் தொழில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, பாதுகாப்பு தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்வது ஆகியவற்றில் ஒத்துழைப்புகளை மேம்படுத்த இருநாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் முடிவு செய்தனர். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், கடற்படை ஒத்துழைப்பு, கடல்சார் அதிகார விழிப்புணர்வு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் உறுதி செய்யப்பட்டது.

எகிப்து நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரை, இந்தியாவுக்கு வருமாறு திருமதி. நிர்மலா சீதாராமன் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார்

முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. எகிப்து நாட்டின் மறைந்த அதிபர் அனவர் அல் சதாத் சமாதிக்கும், ராணுவ வீரர் நினைவுச் சின்னத்திற்கும் திருமதி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

-----

 



(Release ID: 1547001) Visitor Counter : 116


Read this release in: English