உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ஜர்சுகுடா விமான நிலையத்தை பிரதமர் துவக்கி வைத்தார் ஜர்சுகுடா – ராய்ப்பூர் மார்க்கத்தில் உடான் விமான சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
23 SEP 2018 1:04PM by PIB Chennai
ஒடிசாவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஜர்சுகுடா விமான நிலையத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் திரு. கணேசி லால், முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், மத்திய வர்த்தக, தொழில்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜுவல்ஓரம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஜர்சுகுடா – ராய்ப்பூர் மார்க்கத்தில் உடான் விமான சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.
ஒடிசா மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையமான ஜர்சுகுடா செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், உடான் திட்டத்தின் மூலம், இந்த விமான நிலையத்திலிருந்து புவனேஷ்வர், ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியோடு விமான சேவைக்கு வழியேற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில், ஜர்சுகுடா தவிர, மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு விமான சேவையை ஏற்படுத்துவதற்கு வசதியாக, மேலும் 3 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 370 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜர்சுகுடா விமான நிலையத்தை, இந்திய விமான நிலைய ஆணையம், மாநில அரசோடு இணைந்து 210 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது. எல்லா கால நிலையிலும், விமானங்களை இயக்கும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.320 ரக விமானங்களை இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கலாம்.
இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை 2 ஆயிரத்து 390 மீட்டர் நீளம் கொண்டது. விமான நிலைய முனையத்தில், 5 பயணிகள் சோதனை கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, சூரிய ஒளி மின்சார அமைப்பு மற்றும் விமான நிலையத்திற்கு வரும் சாலைகள் பசுமைவழிச் சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது உட்பட பல சிறப்பு அம்சங்கள் இந்த விமான நிலையத்தில் உள்ளன.
-------
(रिलीज़ आईडी: 1546996)
आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English