பிரதமர் அலுவலகம்

10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்

प्रविष्टि तिथि: 26 JUL 2018 11:55PM by PIB Chennai

ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ்:

4ஆவது தொழில் புரட்சியில் உள்ளடக்கிய வளர்ச்சி

மற்றும் பங்களிப்போடு கூடிய வளத்திற்கான இணைப்பு

சான்ட்டன் கூட்டரங்கம்

ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா 25 – 27 ஜூலை 2018

10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு

ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்

முன்னுரை

  1. பிரேசில் கூட்டாட்சி குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, இந்திய குடியரசு, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளின் தலைவர்களாகிய நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் ஜூலை மாதம் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற 10வது மாநாட்டில் கலந்து கொண்டோம். பிரி்க்ஸ் அமைப்பின் வரலாற்றில் ஒரு மைல் கல்லான 10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ்; 4ஆவது தொழில் புரட்சியில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பங்கீட்டோடு கூடிய வளத்துக்கான இணைப்புஎன்பதை முக்கிய கூறாக கொண்டிருந்தது.

  1. நெல்சன் மண்டேலாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் அவரது கொள்கைகள், மனித இனத்தின் சேவைக்கு அவரது அர்ப்பணிப்பு, சர்வதேச அளவில் ஜனநாயக போராட்டத்தில் அவரது பங்களிப்பு மற்றும் உலகெங்கிலும் அமைதிக்கான கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்வது ஆகிய அவரது கொள்கைகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

  1. ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாட்டில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் மயமாதல் மற்றும் வளர்ச்சி, உள்ளடக்கிய மற்றும் பரஸ்பர வளத்திற்கென நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எங்களது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  1. பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களாகிய நாங்கள் அமைதியை நிலைநிறுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பின் சாதனைகள், இவ்வமைப்பின் ஒற்றுமைக்கு ஒரு வலுவான வெளிப்பாடாக இருப்பதற்கு எங்களது திருப்தியை தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு, சுமூகமான பங்களிப்போடு கூடிய வளர்ச்சி மற்றும் பலம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவது பற்றி பேசியுள்ளோம்.

  1. பரஸ்பர மரியாதை, இறையாண்மையோடு கூடிய சமத்துவம், ஜனநாயகம், உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் இணைப்பின் வலிமை ஆகிய கொள்கைகள் மீதான எங்களது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அடுத்தடுத்து நடக்கும் பிரிக்ஸ் மாநாடுகளின் காரணமாக அமைதியை முன்னெடுத்து செல்வதன் மூலம் எங்களது மக்கள் பயனடைவதற்கான பங்களிப்பை வலுப்படுத்த உறுதிகொள்கிறோம். நியாயமான சர்வதேச அமைப்பு, தொடர் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, பொருளாதாரம், அமைதி, பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான மூன்று தூண்களின் அடிப்படையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் உறுதி கொண்டுள்ளோம்.

  1. உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எங்களைது உறுதியை வலியுறுத்துவதோடு, .நா.வின் மையப்பங்களிப்பு, .நா.பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் மற்றும் கொள்கைகள், சர்வதேச சட்டம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். பலதரப்பட்ட எங்களது உறுதியை மீண்டும் வலியுறுத்துவதோடு, 2030ஆம் ஆண்டு தொடர்ந்த வளர்ச்சி இலக்குகளின் செயல்பாட்டிற்காக ஒன்றிணைந்து பணியாற்ற பிரதிநிதித்துவத்தோடு கூடிய ஜனநாயகமான சமத்துவமான, நியாயமான, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார முறைக்காக பாடுபடுகிறோம்.

  1. பலதரப்பட்ட நிலை மற்றும் சர்வதேச உறவுகளில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நியாயமான, சமத்துவமான, ஜனநாயகம் சார்ந்த, பிரதிநிதித்துவத்தோடு கூடிய சர்வதேச அமைப்பை வலுப்படுத்த ஒருங்கிணைப்போடு பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

  1. பலதரப்பட்ட சர்வதேச விவகாரங்களில் ஐ.நா.சபையின் மைய பங்களிப்புக்கும் எங்களது ஆதரவை உறுதி செய்கிறோம். அதோடு ஐ.நா. பிரகடனத்தின் கொள்கைகளின் அடிப்படையிலான நியாயமான, சமத்துவத்தோடு கூடிய சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டம் மீதான மதிப்பு, ஜனநாயகம், சர்வதேச உறவுகளில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொதுவான பாரம்பரியத்தோடு கூடிய மற்றும் பாரம்பரியம் சாராத, பாதுகாப்பு சவால்களை சந்திக்கவும் முன்வந்துள்ளோம்.

  1. ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உருவாகி வரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளோடு, பிரிக்ஸ் ஆப்பிரிக்க தகவல் மற்றும் 2ஆவது பிரிக்ஸ் கூடுதல் ஒத்துழைப்பு, (இஎம்பிசி) கூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

  1. இந்த உச்சிமாநாட்டில் நடைபெற்ற அமைச்சர்கள் நிலையிலான கூட்டங்கள் வெளிகொணர்ந்த கருத்துக்களுக்கு திருப்தி தெரிவிப்பதோடு, 2018ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்காட்டியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக எஞ்சிய கூட்டங்களையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

II.  பன்முகத்தன்மையை வலுப்படுத்தி, சர்வதேச ஆளுமையில் சீர்திருத்தம் செய்வதுடன், பொதுவான சவால்களை எதிர்கொள்ளுதல்.

11. ஐநா சபைக்கு நாம் அளித்துள்ள உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, சர்வதேச பன்முக அமைப்பிடம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொறுப்பையும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

12. ஐநா சாசனத்தில் வகுக்கப்பட்டுள்ள நோக்கம் மற்றும் கொள்கைகளில் நமது உறுதிப்பாட்டை நிலைநாட்டும் விதமாக, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொறுப்பையும், நீடித்த வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதை உறுதி செய்வதுடன், அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பும், சர்வதேச அரசாங்களுக்கு இடையிலான அமைப்பான ஐநா சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

13. சர்வதேச ஆளுமை அமைப்புகள், சர்வதேச சவால்களை விரிவாக எதிர்கொள்ளும் வகையில் பன்னாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவது என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது அவசியம்.  

14. விரிவான பன்னாட்டு அமைப்பின் நோக்கங்களுக்கு ஆதரவாக மண்டல அளவிலான முன்முயற்சிகளுக்கான உள்ளார்ந்த வலிமையை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

15.  .நா. சாசனத்தில் வகுக்கப்பட்டுள்ள சர்வதேச கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் நடுநிலைத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா. சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச சட்ட நெறிமுறைகள் அடிப்படையிலான, சர்வதேச நடைமுறை ஒன்றின் அடிப்படையில் செயல்பட வேண்டியதன்  அவசியத்தை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அப்படி செய்தால்தான், பல்முனை ஒழுங்குடன் கூடிய ஒத்துழைப்பு மற்றும் நிலைப்பாட்டை ஏற்படுத்த முடியும். அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக ஐ.நா. சபையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

16. நமது ஒத்துழைப்பு தேவைப்படும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில், மனித குலத்திற்கு பயனளிக்கக் கூடிய பிரதிநிதித்துவத்துடன் கூடிய பல்முனை சர்வதேச ஒழுங்குமுறையை மேலும் நியாயமான முறையில் வடிவமைக்க நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்ய  வேண்டியுள்ளது.  இந்த நடைமுறையின்படி, படைப்பிரயோகத்தை  பொதுவாக தடைசெய்வது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், ஐ.நா. சாசனத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்பின் பிரிக்கப்படாத தன்மையை வலியுறுத்துவதுடன், எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் தங்களது பாதுகாப்பை அதிகரிக்கக் கூடாது.

17. 2005 ஆம் ஆண்டு உலக மாநாட்டின் முடிவுகளை கருத்தில் கொள்வதுடன், பாதுகாப்பு சபை உட்பட, ஐ.நா. சபையில் விரிவான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலமே வளரும் நாடுகளுக்கு வலுவான திறமையான கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க முடியும். அப்படி செய்தால்தான், உலகளாவிய சவால்களை ஐ.நா. சபையால் உடனுக்குடன் எதிர்கொள்ள முடியும். சர்வதேச விவகாரங்களில், பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சீனாவும், ரஷ்யாவும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்திருப்பதுடன், ஐ.நா. சபையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற இந்த நாடுகளின் விருப்பத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளன.

18. .நா. சபையை மேலும் வலுவான, திறமையான அமைப்பாகவும், கடமைகளை செயல்படுத்தக் கூடிய அமைப்பாகவும் மாற்றத் தேவையான நீடித்த முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நிர்வாகம் மற்றும் செலவினம் தொடர்பாக, ஐ.நா சபையை நிதி ஆதாரம் மிகுந்த அமைப்பாக மாற்றுவதில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் உறுப்பு நாடுகளால் இயக்கப்படும் ஐ.நா. அமைப்பின் தன்மையை பாதுகாப்பதுடன், அந்த அமைப்பு அதன் கடமைகளிலிருந்து விலகிச் செல்லாத வகையிலும், வலுவான அமைப்பாக மாற்றுவதையும் உறுதி செய்யலாம்.

19. பன்னாட்டுப் பிரச்சினைகளில், பரஸ்பர நலன் ஏற்படுத்தக் கூடிய அம்சங்களில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு தொடர ஆதரவு அளிக்கப்படும்.

20. சமமான, உள்ளார்ந்த, வெளிப்படையான, அனைத்து துறைகளிலும் புதிய கண்டுபிடிப்பு சார்ந்த, பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களின் அடிப்படையிலான நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான, 2030 ஆம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.  இந்த உறுதிப்பாடு, 2030 ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பது என்ற உறுதியான இலக்கை அடைய,   ஏற்றத்தாழ்வுகளற்ற, ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். உறுப்பு நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கான வளர்ச்சித் திட்டத்துடன் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நா. சபையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நீடித்த வளர்ச்சிக்கான உயர்மட்ட அரசியல் அமைப்பு உள்ளிட்ட இடங்களில் ஐ.நா. சபை முக்கிய பங்கு வகிப்பதற்கான ஆதரவு உறுதிபடுத்தப்படுகிறது. தாங்கள் உறுதியளித்தபடி, வளர்ச்சிக்கான உதவி நிதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக வழங்குவதுடன், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு கூடுதல் உதவி அளிப்பதென்ற உறுதிமொழியை நிறைவேற்றுமாறு வளர்ந்த நாடுகளை வலியுறுத்துகிறோம்.

21. பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, பாரீஸ் உடன்படிக்கையின்படி, பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதோடு, 2018 டிசம்பரில் போலந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கைக்கான 24-வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளைத் தொடர ஆதரவு அளிக்கப்படும். பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரீஸ் உடன்படிக்கையை முழுமையாக அமல்படுத்தும்படி உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், மாறுபட்ட பொறுப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் திறமை அடிப்படையிலான பொதுவான கொள்கைகளின்படி இதனை அமல்படுத்துவதோடு, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப மற்றும் திறன் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், வளரும் நாடுகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஆதரவு அளிக்க வேண்டும்.

22. எரிசக்தித் துறையில் பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த, குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சர்வதேச நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு ஏற்ற எரிசக்தி  முறைக்கு மாறுவதற்கும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சி மற்றும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மக்களின் சமூகப் பொருளாதார நலன் பயக்கும் அம்சங்களில் கூட்டாக செயல்படவும் தீர்மானிக்கப்படுகிறது. உலகளாவிய எரிசக்தி அணுகுமுறை, எரிசக்தி பாதுகாப்பு, குறைந்த கட்டணத்தில் எரிசக்தி கிடைக்கச் செய்தல், புகை மாசுவை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது. எரிசக்தி வழங்குவதற்கான ஆதாரங்களை மாற்றியமைத்தல், புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைவான கரிம எரிபொருட்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல், எரிசக்தி மற்றும் எரிசக்தி கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்தல், எரிசக்தி தொழில் மற்றும் சந்தை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், அடிப்படை எரிசக்தி ஆதாரங்களை அணுகுவதில் பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பைத் தொடரவும், எரிசக்தி பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்யப்படுகிறது.

23. எரிசக்தி சிக்கனத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்வதோடு, சிக்கனமான எரிசக்தி பயன்பாடுடைய வாழ்க்கை முறையை பிரபலப்படுத்தவும், எரிசக்தி பாதுகாப்புக்காக பாடுபடவும், தொழில் போட்டி, புகை மாசின் அளவைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிற துறைகளிலும் உரிய பங்களிப்பை செலுத்துவது.

24. பிரிக்ஸ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டமைப்பை ஏற்படுத்த பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் மேற்கொண்ட முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், அந்த கூட்டமைப்பின் செயல்பாட்டு வரம்பு மற்றும் அந்த நோக்கத்தை அடைவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பது.

25. இந்தியாவால் 2016 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆதரவு அளிப்பது. ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும்  உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மைப் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை முக்கியத்துவத்தை பாராட்டுகிறோம்.  மாறிவரும் சூழலில் வேளாண்மை மற்றும் உணவு நடைமுறைகளை கூட்டாக விரிவுபடுத்துவதற்கு பிரிக்ஸ் நாடுகளிடையே வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகளை வலுப்படுத்த ஆதரவளிக்கப்படும். வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் குறிக்கோள் மற்றும் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை ஆதரிக்கிறோம். அடிப்படை வேளாண் தகவல் பரிமாற்ற நடைமுறை மற்றும் வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் செயல்பாட்டு வரம்புகள் அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.

26. நீடித்த பயன்பாடு மற்றும் உற்பத்தி என்ற அடிப்படையில், பிரிக்ஸ் நாடுகளிடையே சுற்றுப் பொருளாதாரம் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற நோக்கத்துடன் நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 4-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. சுற்றுப் பொருளாதார அணுகுமுறை, கழிவுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பாற்றக் கூடிய வகையில், பொருளாதாரத்தை மாற்றியமைக்கும்.

27. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப அமைப்பு, தூய்மையான நதிகளுக்கான அடிப்படைத் திட்டம் மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழலுக்கான நிலையான முன்முயற்சிகள் பற்றிய பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்ட முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பிரிக்ஸ் சுற்றுச்சூழல் ஒலி தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகள், செய்முறை மற்றும் முடிவு சார்ந்த மற்றும் பங்குதாரர்கள், அறிவியல் அமைப்புகள், பொதுமக்கள் அமைப்புகள், தனியார் மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படும்.

28.   வெள்ளப் பாதுகாப்பு, வறட்சி நிலை மேலாண்மை, தண்ணீர் விநியோகம் மற்றும் துப்புரவு, தண்ணீர் மற்றும் பருவநிலை, தண்ணீர் மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு  முறைப்படியான செயல்பாடு, நதி மற்றும் ஏரி சுற்றுச்சூழலை மீட்டல் மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீராதார மேலாண்மை  ஆகிய தண்ணீர் தொடர்பான நோக்கங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்த முறையில் நீடித்த வளர்ச்சி அடிப்படையில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்த உறுதியேற்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். 

29.   2018-2020–க்கான செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பஃபலோ நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் பேரிடர் நிர்வாகத் தலைவர்களின் கூட்டத்திற்கும், இந்தத் துறையில் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கு நடத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் கூட்டுப்பணிக் குழுவின் முதலாவது கூட்டத்திற்கும் நாங்கள் ஏற்பளிக்கிறோம்.

30.   பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு, நீடித்த பயன்பாடு மற்றும் சீரான அணுகுமுறை, உயிரின வளங்களின் பயனைப் பகிர்ந்து கொள்ளுதல்,  ஆபத்து விளைவிக்கும் உயிரினங்கள் உள்ளிட்ட  பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பான சர்வதேச மாநாடுகளிலும் நமது தேசிய பூங்காக்களின் ஆணையங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் விரிவுப்படுத்தும் விருப்பத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம்.

31.   கடல்வழிப் போக்குவரத்து உத்திக்கான பகுதிகள், கப்பல் கட்டுதல், கரைக்கு அப்பால் எண்ணெய் கண்டுபிடிப்பு, மீன்வளம், துறைமுக மேம்பாடு, ஆய்வு மற்றும் தொழில்நுட்பம், கடல்வளங்களை பாதுகாத்து நீடித்த முறையில் பயன்படுத்துதல், கடல்வழி மற்றும் கடற்கரையோர சுற்றுலா, நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள், கடலோர தொழில் மண்டல மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான கடல்சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் பெருமளவாக இருக்கும் திறனை நாங்கள் அங்கீகரிக்கிறோம். 

32.   2014-ல் மக்கள் தொகை விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2015-2020-க்கான  மக்கள் தொகை பற்றிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து  அமல்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.  ஏனெனில் பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொகையில் உள்ள வயது நிலை மாற்றங்கள் குறிப்பாக  பாலின சமத்துவமின்மை, பெண்கள் உரிமைகள், இளைஞர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பணிகளின் எதிர்காலம், நகரமயமாதல், குடிபெயர்தல், வயது போன்ற சவால்களையும், வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. 

33.   பிரிக்ஸ் நாடுகளில் சில உட்பட தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாவதை நாங்கள் காண்கிறோம்.  பயங்கரவாதத்தின்  அனைத்து வடிவங்களையும் அது எங்கே யாரால் நடத்தப்பட்டாலும், அதை நாங்கள் கண்டிக்கிறோம்.  சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஐநா கண்காணிப்பின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான முயற்சிகளுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.  பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராடுவதற்கு விரிவடைந்த தேவையான அணுகுமுறை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.   பயங்கரவாத செயல்களுக்கு தங்களின் பகுதிகளை பயன்படுத்தாமல் இருப்பதற்கும், பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைக்காமல் தடுப்பதற்கும் அனைத்து அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்.

34.   பயங்கரவாதத்திற்கு எதிராக மெய்யான, விரிவான, சர்வதேச கூட்டு அமைப்பு ஒன்றை நிறுவ சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஐநாவின் மத்திய ஒருங்கிணைப்பு உதவி தேவை என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.  ஐக்கிய நாடுகளின் சாசனம், சர்வதேச அகதிகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களின்படி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப்பட வேண்டும் எனறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஐநா-வில் அங்கம் வகிப்போருக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா கட்டமைப்பின்  தீவிர செயல்பாடு அதிகரிப்பதற்கு எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறோம்.  பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களின் தன்மையை தெரிவித்தல், உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குதல் ஆகியவற்றையும் நாங்கள் வற்புறுத்துகிறோம்.  ஐநா பொதுச் சபையால் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவடைந்த  மாநாடு பற்றி விரைந்து முடிவு செய்து ஏற்பளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

35.   ரசாயனம் மற்றும் உயிரிப் பொருட்களைப் பயன்படுத்தும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள பேரழிவு  குறித்த மாநாடு உட்பட ரசாயனம் மற்றும் உயிரிப் பொருட்களைப் பயன்படுத்தும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சர்வதேச மாநாடு நடத்தப்படுவது பற்றி பலதரப்பு பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துவதோடு அதற்கு நாங்கள் ஆதரவும் அளிக்கிறோம். 

36.   பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, ஏற்பாடு செய்வது அல்லது ஆதரவு அளித்ததற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்லவும் கடமைபட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  பயங்கரவாதத்தை முறியடிக்க தீவிரவாதம், அதற்கு ஆள்சேர்ப்பது, வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பயணம் ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகளுக்கும், கறுப்புப் பணப் புழக்கம், ஆயுதங்கள் விநியோகம், போதைப் பொருள் கடத்தல் மற்ற பிற குற்றச் செயல்கள், பயங்கரவாத முகாம்களை அழித்தல், நவீன தகவல் தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளால் இணைய தளம்  தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதன்மூலம் நிதி வரவுகளை அடைத்தல் ஆகியவற்றுக்கும்,  அனைத்து நாடுகளும் விரிவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

37.     தகவல் தொடர்பு, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுகளின் நடத்தையை பொறுப்பாக்கும் விதத்தை  ஐநா ஆதரவிலான விதிகள், வழிகாட்டுதல்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை விரிவுபடுத்துவதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். 

38.     தகவல் தொடர்பு, தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் குறிப்பாக நான்காவது தொழில் புரட்சி காரணமாக கிடைத்துள்ள மறுக்க முடியாத பலன்களையும், புதிய வாய்ப்புகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்.  இருப்பினும், இந்த முன்னேற்றங்கள் புதிய சவால்களையும், அச்சுறுத்தல்களையும் கூட கொண்டு வந்துள்ளன.  இதன் விளைவாக குற்றச் செயல்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை தவறான பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.  அரசு மற்றும் அரசு சாரா நபர்களால் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் தீங்கானவற்றுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.  இதுதொடர்பாக பயங்கரவாதிகளும் குற்றச் செயல் புரிவோரும், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  மேலும், ஐநா அமைப்புக்கு உட்பட்டு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை குற்றச் செயலுக்கு பயன்படுத்தாமல் முறியடிக்க  உலகளவில் ஒழுங்குமுறை அமைப்பு ஒன்றை உருவாக்குவது அவசியம் என்றும் வற்புறுத்துகிறோம்.   தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடைமுறை ஒத்துழைப்பின் பிரிக்ஸ் திட்டத்திற்கு அல்லது பரஸ்பரம் ஏற்கப்பட்ட பிற நடைமுறைக்கு  ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் செயல்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.    தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதிசெய்ய  பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.  இந்த விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றி பரிசீலிக்கவும், விரிவுப்படுத்தவும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் பணியாற்ற வேண்டும்.

III. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பிரிக்ஸ் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒன்றுபடுத்துவது

39. பல்வேறு தாவாக்களுக்கு அரசியல் மற்றும் ராஜாங்க வழிமுறைகளின் மூலமாக அமைதியான தீர்வு காணும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு எங்களது கடப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை  பராமரிப்பதில் ஐ.நா பாதுகாப்பு சபையின் முதன்மை பொறுப்பையும், பங்களிப்பையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

40. மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகும் சண்டைச் சூழல் மற்றும் உச்சக்கட்ட பதற்றம் குறித்த எங்களது அக்கறையை வெளிப்படுத்துகிறோம். எந்த பிரச்சினையிலும் வெளிதலையீடு அல்லது சட்ட விரோதமான பலப்பிரயோகத்திற்கும் இடமில்லை என்ற எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும், எல்லைகளின் முக்கியத்துவமும் மற்றும் சுதந்திரத்திற்கு உரிய மதிப்பு வழங்கிட, விரிவான உள்ளடக்கிய தேசிய பேச்சுவார்த்தை மட்டுமே இறுதியான, நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க முடியும் என்பதே எங்களது உறுதிப்பாடாகும். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு நாட்டின் குடிமக்கள் குறிப்பாக இஸ்ரேல் பாலஸ்தீன் நிலைமையில் தங்களது சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உள்ளவர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

41. மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவின் இதரப் பகுதிகளில் நிலவும் சண்டைச்சூழல் குறிப்பாக பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்சினைப் போன்று நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட கூடாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். .நா. தீர்மானங்கள், மாட்ரிட் கொள்கைகள் மற்றும் அரபு அமைதி முன்முயற்சிகளோடு முந்தைய ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான  ஒருங்கிணைந்த தீர்வைக் காணவும் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும், புதுப்பிக்கப்பட்ட ராஜாங்க முயற்சிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதி மற்றும் பாதுகாப்போடு, இஸ்ரேலுடன் சுதந்திர பாலஸ்தீனிய நாடு சாத்தியமாவதற்கான அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இறுதி அந்தஸ்த்து பிரச்சினைகள் என்று விவரிக்கப்படுபவைகளில் ஒன்றான ஜெருசலேத்தின் அந்தஸ்த்தை நாங்கள் மீண்டும் வலியுத்துகிறோம். காஸா நிலைமையை பொறுத்தவரை பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு மற்றும் ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்தை ஆதரிப்பதோடு, அதன் முழுமையான செயல்பாட்டிற்கும் எங்களது ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

42. கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமைக்கு நாங்கள் எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். 5.3 மில்லியன் பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதார கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை வழங்கும் இதன் முக்கியமான பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இப்பகுதியில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இவ்வமைப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுவதோடு, மேலும் போதிய முன் யோசனையோடு கூடிய தொடர்ந்த நிதி ஆதாரத்தை இந்த அமைப்பு பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

43. ஏமன் குடியரசில் நிலவும் சண்டைச் சூழலும் பெரும் அளவிலான மனிதாபிமான நெருக்கடியும், எங்களது அக்கறைக்கான காரணம் ஆகும். ஏமனில் அனைத்துப் பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவி இடையூறு இல்லாமல் சென்று சேர வேண்டும் என்று கூறுகிறோம் என்பதோடு, சர்வதேச சமுதாயம் இப்பகுதிக்கு தேவையான உதவியை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். ஏமன் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண ஏமன் தலைமையிலான உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நடப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும். சண்டைக்கான அணுகுமுறையைக் கைவிட்டு ஐ.நா.முயற்சியுடன் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

44. வளைகுடா பகுதியில் நிலவும் ராஜாங்க நெருக்கடியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகளின் மூலமாக தங்களது வேறுபாடுகளை கடந்து குவைத்தின் முயற்சிகளை வரவேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

45. தேசிய அமைதி மற்றும் சமாதான வழிமுறைகளுக்கான “ஆப்கான் தலைமையின், ஆப்கானுக்கு உரித்தான” வழிமுறைகளுக்கு எங்களது ஆதரவை வலியுறுத்துகிறோம். ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் நிலை குறிப்பாக ஆப்கான் தேசிய படைகள், அரசு மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கையும் வீரியமும் அதிகரித்து வருவதற்கு எங்களது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்.  அமைதி காண்பதற்கு ஆப்கான் அரசுக்கும் மக்களுக்கும் சர்வதேச சமுதாயம் உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலையும் நாங்கள் வரவேற்கிறோம்.

46. சிரியா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற எங்களது கடப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இது 2015ஆம் ஆண்டின் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் மற்றும் சோச்சியில் நடைபெற்ற சிரியா தேசிய கலந்துரையாடல் மாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில் சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம், எல்லைப்பாதுகாப்பு ஆகியவற்றின் சிரியா தலைமையிலான சிரியாவிற்கு உரித்தான வழிமுறைகளைக்கொண்டு எட்டப்பட வேண்டும். ஐ.நா.வின் ஜெனிவா வழிமுறை முறை மற்றும் சமரசத்திற்கு எங்களது ஆதரவை வலியுறுத்துகிறோம். அதோடு களத்தில் நேர்மறை முன்னேற்றத்திற்கான ஆஸ்தானா வழிமுறை என்ற இரண்டிற்கும் எங்களது ஆதரவை வழங்குகிறோம். சிரியா பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில் அரசியல் வழிமுறைகளுக்கு பங்களிப்பு வழங்காத ஐ.நா. பிரகடனம், ஐ.நா. பாதுகாப்புச்சபையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். சிரியாவில் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பின்பற்றுவதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டியுள்ளோம். எந்த சூழலிலும், எந்த காரணத்திற்காகவும், எத்தரப்பினரும், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இதுபோன்று நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து விரிவான, பாரபட்சமற்ற, சுதந்திர, வெளிப்படைத் தன்மைக்கொண்ட விசாரணையைக் கோருகிறோம். அவசர புனரமைப்புக்கான அவசியம் கருதி சிரியா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும்.

47. ஈரானின் அணு ஆயுதம் திட்டம் பற்றிய விரிவான கூட்டு நடவடிக்கைக்கான திட்டத்திற்கு (ஜேசிபிஓஏ) அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும் என்பதை நினைவு கூர்ந்து, சர்வதேச மாகாண அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இத்திட்டத்தின் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதில் அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

48. வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க கொரிய தீபகற்பத்தை அணுஆயுதங்கள் அற்ற பகுதியாக உருவாக்கும் சமீபத்திய நடவடிக்கைகளை வரவேற்கிறோம். இந்நிலைக்கு அமைதியான ராஜாங்க அரசியல் தீர்வுக்கான எங்களது கடப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

49. விண்வெளியில் ஆயுதப்போர் உருவாவது மற்றும் விண்வெளி ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு களமாக மாறுவதற்கான வாய்ப்பு  குறித்தும் எங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். விண்வெளியில் ஆயுதங்கள் உட்பட ஆயுதப்போட்டியை தடுப்பதன் மூலம் சர்வேதச அமைதிக்கும் பாதுகாப்புக்கிற்கான அபாயம் தடுக்கப்படும் என்று வலியுறுத்துகிறோம். விண்வெளியை அமைதிக்கு பயன்படுத்தும் தற்போதைய சட்டப்பூர்வமான நடவடிக்கை உறுதியோடு பின்பற்றப்படுவதற்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விண்வெளியில் ஆயுதங்கள் மீதான தடை உட்பட விண்வெளியில் ஆயுதப்போரை தடுப்பதற்கு சட்ட அதிகாரம் கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அரசு நிபுணர்களின் குழுவை நாங்கள் வரவேற்கிறோம். விண்வெளியில் ஆயுதங்களைத் தடுக்க நடைமுறையிலான வெளிப்படைத்தன்மை, மற்றும் நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளின் பங்களிப்பையும் வழங்க முடியும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒருதரப்பான அணுஆயுத தடுப்பு பேச்சுவார்த்தை பேரவை, விண்வெளியில் ஆயுதப்போட்டியை தடுப்பதற்கான பலதரப்பு ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தங்களுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

50. இவ்வாண்டு ஜூன்மாதம் 4ஆம் தேதியன்று பிரிடோரியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர்களின் கூட்டத்தை வரவேற்கிறோம். இவ்வமைச்சர்கள் உலக அளவிலான அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுவான நிதிப் பிரச்சினைகள் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு விவகாரஙகள் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர்களின் கூட்டத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறோம்.

51. இவ்வருடம் ஜூன் மாதம் 28 மற்றும் 29ஆம் தேதி டர்பனில் நடந்த பாதுகாப்பிற்கான பிரிக்ஸ் நாடுகளின் உயர் பிரதிநிதிகளின் எட்டாவது கூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகளாவிய பாதுகாப்புச்சூழல், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முக்கியமான சர்வதேச மற்றும்  மண்டல பிரச்சினைகள் நாடுகளுக்கு இடையேயான அமைப்பு ரீதியான குற்றங்கள், அமைதி, மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கிடையேயான தொடர்பு ஆகியவை குறித்து பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான உரையாடல் மேம்படுத்தப்படுவதை பாராட்டுகிறோம்.

52. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் ஐ நா அமைதிப்படையின் முக்கியமான பங்களிப்பையும், பிரிக்ஸ் நாடுகளின் பங்கேற்பையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதியைக் காப்பதில் பிரிக்ஸ் நாடுகளின் பணிக்குழுவிற்கு ஐ.நா. மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன் முயற்சிகளும், பரஸ்பர தகவல் பரிமாற்றம் மற்றும் ஒற்றுமையில் பிரிக்ஸ் நாடுகளின் அவசியத்தையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

53. ஆப்பிரிக்க கண்டத்தில் நிலவும் பிரச்சினைகளை சமாளிப்பதில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதோடு ஐ நா பாதுகாப்பு சபைக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு சபைக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். 2020ஆம் ஆண்டுக்குள் துப்பாக்கிகள் மவுனமாவதற்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கடப்பாட்டை நாங்கள் பாராட்டுவதோடு, ஆப்பிரிக்க அமைதி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறோம்.

54. உலகப்பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதை நாம் வரவேற்கிறோம். அதே சமயம் வளர்ச்சி ஒருங்கிணைக்கப்படாததையும் இன்னும் சில அபாயங்கள் நீடிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வர்த்தக சிக்கல்கள், அரசியல் குழப்பங்கள் நுகர்பொருள் விலையில் ஏற்ற இறக்கம், தனியார் மற்றும் பொதுத்துறையில் காணப்படும் உயரிய கட்டுப்பாடுகள், சமத்துவமற்ற நிலைமை, போதிய உள்ளீடான வளர்ச்சியின்மை ஆகிய பல்வேறு சவால்களை இது பிரதிபலிக்கிறது. வளர்ச்சியின் வாயிலாக கிடைக்கும் பயன்கள் மேலும் உள்ளார்ந்த வகையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். உலக வர்த்தகம்  நீடித்த வளர்ச்சியை பெறுவதற்கு ஏற்ற வகையிலான வெளிச்சூழலை ஏற்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை நாம் மேலும் வலியுறுத்துகிறோம்.

55. பிரிக்ஸ் பொருளாதார நாடுகள், உலகப் பொருளாதார  விரிவாக்க கண்ணோட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. நீடித்த, சமன்பாடான, வலுவான உள்ளார்ந்த வளர்ச்சிக்கு, நிதி மேலாண்மை தொடர்பான  அமைப்பு ரீதியிலான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சில வளர்ந்த பொருளாதார நாடுகளில் மேற்கொள்ளப்படும் குறு பொருளாதார கொள்கை நடவடிக்கைகளால், வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதாரம், நிதி விஷயங்களில் ஏற்ற இறக்கம் உருவாகி, அந்த நாடுகளின் முன்னேற்றத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுவது பற்றி நாம் கவலை தெரிவிக்கிறோம். ஏற்கெனவே வளர்ச்சியடைந்த, வேகமாக வளரந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் ஜி-20, நிதிநிலை வாரியம் மற்றும் இதர அமைப்புகளின் தீர்மானங்களுக்கு ஏற்ப, கொள்கைப் பேச்சு வார்த்தை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

56. நான்காவது தொழிற்புரட்சி, பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல் தொழி்ல்நுட்பம், தொழில் அமைச்சர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற்றில் ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாடு கவனம் செலுத்துவதை குறிப்பிடுவதுடன், புதிய தொழில்புரட்சி குறித்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த அமைப்பு முழுமையாக செயல்படத் தொடங்குவதற்கு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் பிரிக்ஸ் நாடுகளின் தொழி்ல்துறை அமைச்சர்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் ஆலோசனையுடன் இது அமைக்கப்படும். இதன் முதல் நடவடிக்கையாக, நான்காவது தொழில்புரட்சியின் முன்னுரிமைகளுடன் கூடிய விதிமுறைகள், செயல்திட்டம் ஆகியவை வகுக்கப்பட்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். டிஜிட்டல் மயமாக்கம், தொழில்மயமாக்கம், புதிய கண்டுபிடிப்புகள், ஆகியவற்றை உள்ளடக்கிய முதலீடு, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, நான்காவது தொழில்புரட்சியின் மூலம் எழும் சவால்களை சமாளிப்பது போன்றவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஆழ்ந்த வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே புதிய தொழில்புரட்சி கூட்டாண்மையின் நோக்கமாகும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும். இதன்  மூலம் நீடித்த தொழில் உற்பத்தித் திறனை வலுப்படுத்தவும், அறிவியல் பூங்காக்கள் கட்டமைப்பை உருவாக்கவும், தொழில்நுட்பம் அதிகமாக தேவைப்படும் இடங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு அளிப்பதும்  இந்த கூட்டாண்மையின் கடமையாகும். இந்த கட்டமைப்புகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள், ஆக்கப்பூர்வமான வழியை நோக்கி எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் என்று  நாம் நம்புகிறோம்.

57. உலகம் முழுவதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துவதில் இணையம் ஆக்கப்பூர்வமான, முக்கியமான பங்கை ஆற்றுவதை நாம் அங்கீகரிக்கிறோம். இந்த விஷயத்தில், பாதுகாப்பான, வெளிப்படையான, அமைதியான ஒத்துழைப்பில் தற்போதுள்ள நடைமுறைகளின் மூலம் வழங்கி தொடர்ந்து பாடுபட நாம் உறுதி பூணுகிறோம். நிர்வாகத்தில் இணையத்தையும் தகவல் தொழில்நுட்பத்தையும் முறையாக பயன்படுத்துவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கும் பொறுப்புணர்வும், பங்கும் இருப்பதை உணர்த்த வேண்டும்.

58. உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்தவும், நீடித்த வளர்ச்சியை உறுதிபடுத்தவும்,  அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் அமைப்பு அவசியம் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளில் பிரிக்ஸ் நாடுகளின் மாறிவரும் முன்னேற்றத்தை வரவேற்பதுடன் இந்த விஷயத்தில் நவீன கூட்டு முயற்சிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நான்காவது தொழில்புரட்சியின் சவால்களை சமாளிக்க, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளில் ஒருங்கிணைப்பு தேவை என்பதை நாம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

59. பிரிக்ஸ் அறிவுசார் சொத்துரிமை ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே மேம்பாட்டிற்கான தொழி்ல்நுட்ப பரிமாற்றத்தின் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். இதன் மூலம் சமுதாயத்திற்கு முழுமையான பயன் கிடைக்கச் செய்யும் அறிவுசார் சொத்துரிமை குறி்த்த புதிய தொழில்நுட்பங்கள் விஷயத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றும் நாம் உணர்ந்துள்ளோம்.

60.  வர்த்தகமும் தொழில்நுட்பமும்  உள்ளார்ந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆதாரங்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம். நீடித்த மற்றும் நியாயமான வழிமுறைகளுக்கான உலக பொருளாதார ஒருங்கிணைப்பு இதற்கு அவசியமாகும். மக்களின் வருமானம், பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு தொழி்ல்நுட்ப முன்னேற்றம் முக்கியமாகும். தொழி்ல்நுட்ப முன்னேற்றத்தின் வாயிலாக வளர்ந்து வரும் நாடுகள் பயன்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் உரிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.  இதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகள் பயனடைய வாய்ப்புள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு அதனைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில், உரிய வழிமுறைகளுடன் கூடிய கொள்கைகளை வகுப்பது அவசியமாகும்.

61. தொழில்நுட்பமும், விசாலமான அறிவும் அதிகரித்து கொண்டுவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், புதிய திறமைகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நாம் வலுவாக ஆதரிக்கிறோம்.  தற்கால பொருளாதார மாற்றத்தின் வேகம்,அளவு மற்றும் வாய்ப்புகள் மேலும் சவால்கள் மிகுந்ததாக அமைந்துள்ளன. இந்த விஷயத்தில், ஜி.20 நாடுகளின் முன்முயற்சி, கொள்கை, பரிந்துரைகளை நாம் வரவேற்கிறோம். இதன் மூலம் தரமான பயி்ற்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வறுமை ஒழிப்புக்கான பிரிக்ஸ் நாடுகளின் செயல் திட்டம், தொழிற்பயிற்சி, திறன் மேம்பாடு, வாழ்நாள் முழுவதும் கற்றல், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு தேவையான, துரிதகதியிலான மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

62. உலக வர்த்தக அமைப்பு வரையறுத்துள்ள விதிமுறை சார்ந்த வெளிப்படையான பாகுபாடற்ற பன்னோக்கு வர்த்தக முறையை மேற்கொள்ள நாம் உறுதி பூண்டுள்ளோம். உலக சுகாதார அமைப்பின் கீழ் வர்த்தகச் சூழலை மேம்படுத்த முடியும். பன்னோக்கு வர்த்தக முறையை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் இதன் மூலம் எடுக்கப்படும்.

63. பன்னோக்கு வர்த்தக முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். வெளிப்படையான உலகப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துள்ளோம். உலக மயமாக்கலின் பயன்களை அனைத்து நாடுகளும், மக்களும் பெறும் வகையில் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை கையாள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

64. உலக வர்த்தக அமைப்பின் பிரச்சினை தீர்வு முறை, பன்னோக்கு வர்த்தக முறை அடிப்படையாகும். சர்வதேச வர்த்தகத்தின் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மேல்முறையீட்டு அமைப்பு உறுப்பினர்களின் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை கவலை அளிப்பதாக உள்ளது. இதனால், பிரச்சினை தீர்வு முறை முடங்க நேரிடும். இதனட காரணமாக அனைத்து உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும். அதனால் அனைத்து உறுப்பினர்களும். இந்த சவாலை எதிர்கொள்ள  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முன்னுரிமை அடிப்படையில் ஈடுபடவேண்டும்.

65. உலக சுகாதார அமைப்பின் சமசர செயல்பாட்டு முறையை பராமரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பன்னோக்கு வர்த்தக முறையின் சட்டப்பூர்வமான கட்டமைப்பை மேலும் மேம்படுத்த நாம் ஒப்புக் கொண்டுள்ளோம். உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் நலன்களையும், கவலைகளையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம்.

66. ஆப்பிரிக்காவின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்கின்றோம். அதுபோல, ஆப்பிரிக்காவின் மேம்பாட்டுக்கான புதிய கூட்டாண்மை, ஆப்பிரிக்க மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டம் ஆகியவற்றின் மூலமாக, கட்டமைப்பு விஷயத்தில் சவால்களை அடையாளப்படுத்தும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளையும் நாம் அறிவோம். தொழில் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, ஆப்பிரிக்காவின் நீடித்த வளர்ச்சியின் மூலம் பரஸ்பர பயனளிக்கும் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் முக்கியத்துவத்தை நாம் வரவேற்கிறோம். அதனால், உள்கட்டமைப்பு நிதி பற்றாக்குறையைச் சமாளிப்பது உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என நாம் உறுதி கூறுகிறோம்.

உலகளாவிய பொருளாதார மீட்பு, நிதி மற்றும் பொருளாதாரத்தின் உலகளாவிய ஆளுகை நிறுவனங்களின் சீர்திருத்தம், நான்காவது தொழிற்புரட்சி ஆகியவற்றுக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை

67. ஆப்பிரிக்காவின் தொழில் மயமாதலின் அவசியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செயல்திட்டம் 2063 ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனத்தில் கொண்டு, ஆப்பிரிக்கக் கண்ட சுதந்திர வர்த்தக பகுதியைக் கையொப்பமிட்டதையொட்டி, நாம் ஆப்பிரிக்க நாடுகளையும் ஆப்பிரிக்க ஒன்றியத்தையும் பாராட்டுகிறோம். ஆப்பிரிக்கக் கண்ட சுதந்திர வர்த்தக பகுதியானது இந்தக் கண்டத்தின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஒரு முக்கியமான படியாகும். இது ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான பிரமாண்ட வர்த்தகத் திறனைத் திறந்துவிட்டுள்ளதுடன், அதன் சமூக-பொருளாதாரச் சவால்களையும் சமாளித்துள்ளது. இது தொடர்பாக, நாம் 2063 செயல்திட்டத்திற்கு நமது ஆதரவையும், கண்ட ஒருங்கிணைப்பையும் மேம்பாட்டையும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளையும் வலியுறுத்துகிறோம்.

68. பொறுப்புப் பங்கு அடிப்படையிலான சர்வதேச நாணய நிதியத்தை அதன் மையத்தில் கொண்டுள்ள , போதுமான வளத்துடன் கூடிய ஒரு வலிமையான உலகளாவிய நிதிப் பாதுகாப்பு வலைப்பின்னலை நாம் பரிந்துரைக்கிறோம். இதற்காக, 2019 வசந்தகாலக் கூட்டத்தில், 2019 வருடாந்திரக் கூட்டத்திற்கு முன்பாக, ஏழை நாடுகளின் குரலைப் பேணிக்காக்கும் பொழுதில் ஒரு புதிய பொறுப்புப் பங்குச் சூத்திரம் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் 15 ஆவது பொறுப்புப் பங்குகளைப் பொதுப் பரிசீலனை செய்வதை நிறைவு செய்வதற்கான நமது உறுதியை நாம் மேற்கொள்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைச் சீர்திருத்தங்களானது, சஹாரா கீழமை ஆப்பிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஏழை நாட்டு உறுப்பினர்களின் குரலையும் பிரதிநிதித்துவத்தையும் வலிமைப்படுத்த வேண்டும்.

69. சர்வதேச நாணயம் மற்றும் நிதிக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கியின் கவர்னர் லெசிட்ஜாக்கான்யகோவை நாம் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

70. பிரிக்ஸ் கட்டுப்பாட்டு ரிசர்வ் ஏற்பாட்டின் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொள்கிறோம். கட்டுப்பாட்டு ரிசர்வ் ஏற்பாட்டு நடைமுறையின் இணைப்பற்ற பகுதியின் சோதனையோட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை நாம் வரவேற்கிறோம். கட்டுப்பாட்டு ரிசர்வ் ஏற்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை நாம் ஊக்குவிக்கிறோம்.

71. பிரிக்ஸ் உள்ளூர் நாணயப் பத்திர நிதியத்தை நிறுவுவதில் சாதித்துள்ள முன்னேற்றத்தை நாம் மனநிறைவுடன் கவனத்தில் கொள்கிறோம்.

72. கணக்குத் தரத்தின் குவிப்பில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பிரிக்ஸ் நாடுகளின் கணக்குத்  தணிக்கைக் கவனக்குறைவு மற்றும் இவற்றில் மேலும் ஒத்துழைப்பை அளிக்கவும் நாம் ஒப்புக்கொள்கிறோம்.

73. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தமட்டில் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதை நாம் வரவேற்கிறோம். இணையத் தொழில்நுட்பம் உருவாவதை ஏற்றுக் கொள்வதில் நமது ஒத்துழைப்புக்கு இந்தப் பணி பங்களிப்பு நல்கும் என நாம் நம்புகிறோம்.

74. உள்கட்டமைப்பு, முதலீடு, சர்வதேச மேம்பாட்டு உதவித் திட்டங்கள் ஆகியன நீடித்த பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அவை உற்பத்தியை அதிகரித்து ஒருமைப்பாட்டுணர்வை உயர்த்துகிறது. நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேண உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருமைப்பாடு  ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

75. பொது உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்குத் தனியார்த் துறை நிதியளிப்பை ஊக்குவித்துச் செயல்பட்டுவரும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின், குறிப்பாகப் புதிய மேம்பாட்டு வங்கிகளின், பாத்திரத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

76. சமூகம், பொருளாதாரம் மற்றும் நமது நாடுகளின் சூழலியல் வாய்ப்புவளங்கள் போன்றவற்றிற்குப் புதிய மேம்பாட்டு வங்கிகளால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் நாம் மனநிறைவு கொண்டுள்ளோம். அதற்கான திட்டத் தயாரிப்பு நிதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆப்பிரிக்க மண்டல மையத்திற்கு இணையாக சாவோ பாவ்லோ, பிரேஸில் ஆகியவற்றில் அமெரிக்காவின் மண்டல அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளதை நாம் வரவேற்கிறோம். இது அந்த கண்டங்களில் புதிய மேம்பாட்டு வங்கி தனது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள உதவும். மாறிவரும் உலகளாவிய சூழலில் புதிய மேம்பாட்டு வங்கியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, மேம்பாட்டுக்கான புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிக்க, சீனாவின் ஷாங்காய் நகரில் மே மாதம் 28-29 தேதிகளில் 3ஆவது வருடாந்திரக் கூட்டத்தின், புதிய மேம்பாட்டு வங்கியின் கவர்னர்கள் குழுக் கூட்ட விவாதங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

77. பிரிக்ஸ் நாடுகளின் மேம்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றவும் உண்மைப் பொருளாதாரத்திற்குச் சிறந்த முறையில் சேவை புரியவும் பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக, நிதி நிறுவன வலைப்பின்னலை முன்னேற்றுவதன் மூலம் நிதிச் சந்தை ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நாம் நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம். பிரிக்ஸ் நாடுகள் ஒவ்வொன்றின் நிதிச் சேவையின் தற்போதைய ஒழுங்குமுறை சட்டகம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு, சேவைகள் வர்த்தகத்தில் பொது ஒப்பந்தம் சலுகைகள், சிறந்த தொடர்பு நிதித் துறை ஒழுங்காற்றுனர்களிடயேயான ஒத்துழைப்பு ஆகியவை இது சம்பந்தப்பட்டதாகும். நாணய ஒத்துழைப்பை உயர்த்துவது, ஒவ்வொரு மத்திய வங்கியின் தொடர்ந்த சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றைத் தொடர்வோம், ஒத்துழைப்பின் மேலும் பரிமாணங்களைக் கண்டறிவோம். பசுமை நிதிநல்கையை மேலும் விரிவுபடுத்துவோம். அதனால், பிரிக்ஸ் நாடுகளின் நீடித்த மேம்பாட்டை முன்னேற்றலாம்.

78. சட்டவிரோதமான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நிதிச் செயல்பாடுகள் அதிரடிப் படை, உலகச் சுங்க அமைப்பு உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்கு ஆதரவு தருவதில் நமது உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்துவோம். இது தொடர்பாக, அதிகரித்துவரும் பரஸ்பரப் பரிமாற்றம் மற்றும் தரவுப் பகிர்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துவோம். நிதிச் செயல்பாடுகள் அதிரடிப்படையின் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் அதன் முக்கியத்துவத்தை உயர்த்திப்பிடிப்பது ஆகியவற்றை வலியுறுத்துவோம். அவற்றை அமல்படுத்துவதில் நமது ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவோம். பண மோசடி, தீவிரவாதிகளுக்கு நிதியளிப்பது ஆகியற்றை ஒடுக்குவதில் துணைநிற்போம். 

79. மாநிலங்களின் சட்ட முறைகளை வலுவிழக்கச் செய்யும் செயல்கள் உள்ளிட்ட நீடித்த தாக்கத்துடன் கூடிய ஓர் உலகளாவிய சவாலாக ஊழல் இருந்துவருகிறது. ஒரு நாட்டின் அவசியத் தேவையான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை முறியடிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு இது அச்சுறுத்தலாகவும் உள்ளது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் நான்காவது பிரிவு எடுத்துரைத்தபடி சர்வதேச ஒத்துழைப்புக்கு நாம் உறுதி ஏற்கிறோம். அதன்படி, ஊழலுக்கு எதிரான ஒத்துழைப்பின் பிரிக்ஸ் வேலைத்திட்டக் குழுவின் பிரகாரம் சர்வதேச  ஒத்துழப்பைப் பலப்படுத்தவும் உறுதி ஏற்கிறோம். நமது உள்ளூர் சட்டவிதிகளின் படி ஊழலுக்கு எதிரான சட்ட அமலாக்கத்திற்கு நாம் ஒத்துழைப்பு அளிப்போம். நாட்டை விட்டுத் தப்பியோடியவர்கள், பொருளாதார, ஊழல் பேர்வழிகள் சொத்து மீட்பு தொடர்பாகத் தஞ்சம் புகுந்தோர், பிற கிரிமினல் மற்றும் கிரிமினல் அற்ற விவகாரங்களில் ஈடுபட்டோர் போன்றவர்களைப் பிடித்துத் தருவோருக்கு உதவி புரிவோம். பரஸ்பர புரிதலை அதிகரிப்பதற்காக அனுவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றைக் கடந்த காலத்தைப் போலவே தொடர்ந்து செய்வோம். தகவல் பரிமாற்றம் மூலம் பலதரப்புத் தளங்களைப் பயன்படுத்தி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊழலை ஒழிப்பதற்கான ஆண்டாக 2018 ஆம் ஆண்டைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு நமது பாராட்டுகள்.

II.  பன்முகத்தன்மையை வலுப்படுத்தி, சர்வதேச ஆளுமையில் சீர்திருத்தம் செய்வதுடன், பொதுவான சவால்களை எதிர்கொள்ளுதல்.

11. ஐநா சபைக்கு நாம் அளித்துள்ள உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, சர்வதேச பன்முக அமைப்பிடம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொறுப்பையும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

12. ஐநா சாசனத்தில் வகுக்கப்பட்டுள்ள நோக்கம் மற்றும் கொள்கைகளில் நமது உறுதிப்பாட்டை நிலைநாட்டும் விதமாக, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொறுப்பையும், நீடித்த வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதை உறுதி செய்வதுடன், அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பும், சர்வதேச அரசாங்களுக்கு இடையிலான அமைப்பான ஐநா சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

13. சர்வதேச ஆளுமை அமைப்புகள், சர்வதேச சவால்களை விரிவாக எதிர்கொள்ளும் வகையில் பன்னாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவது என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது அவசியம்.  

14. விரிவான பன்னாட்டு அமைப்பின் நோக்கங்களுக்கு ஆதரவாக மண்டல அளவிலான முன்முயற்சிகளுக்கான உள்ளார்ந்த வலிமையை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

15.  .நா. சாசனத்தில் வகுக்கப்பட்டுள்ள சர்வதேச கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் நடுநிலைத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா. சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச சட்ட நெறிமுறைகள் அடிப்படையிலான, சர்வதேச நடைமுறை ஒன்றின் அடிப்படையில் செயல்பட வேண்டியதன்  அவசியத்தை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அப்படி செய்தால்தான், பல்முனை ஒழுங்குடன் கூடிய ஒத்துழைப்பு மற்றும் நிலைப்பாட்டை ஏற்படுத்த முடியும். அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக ஐ.நா. சபையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

16. நமது ஒத்துழைப்பு தேவைப்படும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில், மனித குலத்திற்கு பயனளிக்கக் கூடிய பிரதிநிதித்துவத்துடன் கூடிய பல்முனை சர்வதேச ஒழுங்குமுறையை மேலும் நியாயமான முறையில் வடிவமைக்க நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்ய  வேண்டியுள்ளது.  இந்த நடைமுறையின்படி, படைப்பிரயோகத்தை  பொதுவாக தடைசெய்வது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதுடன், ஐ.நா. சாசனத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்பின் பிரிக்கப்படாத தன்மையை வலியுறுத்துவதுடன், எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் தங்களது பாதுகாப்பை அதிகரிக்கக் கூடாது.

17. 2005 ஆம் ஆண்டு உலக மாநாட்டின் முடிவுகளை கருத்தில் கொள்வதுடன், பாதுகாப்பு சபை உட்பட, ஐ.நா. சபையில் விரிவான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலமே வளரும் நாடுகளுக்கு வலுவான திறமையான கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க முடியும். அப்படி செய்தால்தான், உலகளாவிய சவால்களை ஐ.நா. சபையால் உடனுக்குடன் எதிர்கொள்ள முடியும். சர்வதேச விவகாரங்களில், பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சீனாவும், ரஷ்யாவும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்திருப்பதுடன், ஐ.நா. சபையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற இந்த நாடுகளின் விருப்பத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளன.

18. .நா. சபையை மேலும் வலுவான, திறமையான அமைப்பாகவும், கடமைகளை செயல்படுத்தக் கூடிய அமைப்பாகவும் மாற்றத் தேவையான நீடித்த முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நிர்வாகம் மற்றும் செலவினம் தொடர்பாக, ஐ.நா சபையை நிதி ஆதாரம் மிகுந்த அமைப்பாக மாற்றுவதில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் உறுப்பு நாடுகளால் இயக்கப்படும் ஐ.நா. அமைப்பின் தன்மையை பாதுகாப்பதுடன், அந்த அமைப்பு அதன் கடமைகளிலிருந்து விலகிச் செல்லாத வகையிலும், வலுவான அமைப்பாக மாற்றுவதையும் உறுதி செய்யலாம்.

19. பன்னாட்டுப் பிரச்சினைகளில், பரஸ்பர நலன் ஏற்படுத்தக் கூடிய அம்சங்களில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு தொடர ஆதரவு அளிக்கப்படும்.

20. சமமான, உள்ளார்ந்த, வெளிப்படையான, அனைத்து துறைகளிலும் புதிய கண்டுபிடிப்பு சார்ந்த, பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களின் அடிப்படையிலான நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான, 2030 ஆம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைவது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.  இந்த உறுதிப்பாடு, 2030 ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பது என்ற உறுதியான இலக்கை அடைய,   ஏற்றத்தாழ்வுகளற்ற, ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். உறுப்பு நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கான வளர்ச்சித் திட்டத்துடன் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நா. சபையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நீடித்த வளர்ச்சிக்கான உயர்மட்ட அரசியல் அமைப்பு உள்ளிட்ட இடங்களில் ஐ.நா. சபை முக்கிய பங்கு வகிப்பதற்கான ஆதரவு உறுதிபடுத்தப்படுகிறது. தாங்கள் உறுதியளித்தபடி, வளர்ச்சிக்கான உதவி நிதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக வழங்குவதுடன், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு கூடுதல் உதவி அளிப்பதென்ற உறுதிமொழியை நிறைவேற்றுமாறு வளர்ந்த நாடுகளை வலியுறுத்துகிறோம்.

21. பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, பாரீஸ் உடன்படிக்கையின்படி, பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதோடு, 2018 டிசம்பரில் போலந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கைக்கான 24-வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளைத் தொடர ஆதரவு அளிக்கப்படும். பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரீஸ் உடன்படிக்கையை முழுமையாக அமல்படுத்தும்படி உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. அதேவேளையில், மாறுபட்ட பொறுப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் திறமை அடிப்படையிலான பொதுவான கொள்கைகளின்படி இதனை அமல்படுத்துவதோடு, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப மற்றும் திறன் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், வளரும் நாடுகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஆதரவு அளிக்க வேண்டும்.

22. எரிசக்தித் துறையில் பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த, குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சர்வதேச நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு ஏற்ற எரிசக்தி  முறைக்கு மாறுவதற்கும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சி மற்றும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மக்களின் சமூகப் பொருளாதார நலன் பயக்கும் அம்சங்களில் கூட்டாக செயல்படவும் தீர்மானிக்கப்படுகிறது. உலகளாவிய எரிசக்தி அணுகுமுறை, எரிசக்தி பாதுகாப்பு, குறைந்த கட்டணத்தில் எரிசக்தி கிடைக்கச் செய்தல், புகை மாசுவை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது. எரிசக்தி வழங்குவதற்கான ஆதாரங்களை மாற்றியமைத்தல், புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைவான கரிம எரிபொருட்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல், எரிசக்தி மற்றும் எரிசக்தி கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்தல், எரிசக்தி தொழில் மற்றும் சந்தை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், அடிப்படை எரிசக்தி ஆதாரங்களை அணுகுவதில் பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பைத் தொடரவும், எரிசக்தி பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்யப்படுகிறது.

23. எரிசக்தி சிக்கனத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்வதோடு, சிக்கனமான எரிசக்தி பயன்பாடுடைய வாழ்க்கை முறையை பிரபலப்படுத்தவும், எரிசக்தி பாதுகாப்புக்காக பாடுபடவும், தொழில் போட்டி, புகை மாசின் அளவைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிற துறைகளிலும் உரிய பங்களிப்பை செலுத்துவது.

24. பிரிக்ஸ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டமைப்பை ஏற்படுத்த பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் மேற்கொண்ட முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், அந்த கூட்டமைப்பின் செயல்பாட்டு வரம்பு மற்றும் அந்த நோக்கத்தை அடைவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பது.

25. இந்தியாவால் 2016 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆதரவு அளிப்பது. ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும்  உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மைப் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை முக்கியத்துவத்தை பாராட்டுகிறோம்.  மாறிவரும் சூழலில் வேளாண்மை மற்றும் உணவு நடைமுறைகளை கூட்டாக விரிவுபடுத்துவதற்கு பிரிக்ஸ் நாடுகளிடையே வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகளை வலுப்படுத்த ஆதரவளிக்கப்படும். வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் குறிக்கோள் மற்றும் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை ஆதரிக்கிறோம். அடிப்படை வேளாண் தகவல் பரிமாற்ற நடைமுறை மற்றும் வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் செயல்பாட்டு வரம்புகள் அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.

26. நீடித்த பயன்பாடு மற்றும் உற்பத்தி என்ற அடிப்படையில், பிரிக்ஸ் நாடுகளிடையே சுற்றுப் பொருளாதாரம் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற நோக்கத்துடன் நடைபெற்ற பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 4-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. சுற்றுப் பொருளாதார அணுகுமுறை, கழிவுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பாற்றக் கூடிய வகையில், பொருளாதாரத்தை மாற்றியமைக்கும்.

27. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப அமைப்பு, தூய்மையான நதிகளுக்கான அடிப்படைத் திட்டம் மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழலுக்கான நிலையான முன்முயற்சிகள் பற்றிய பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்ட முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பிரிக்ஸ் சுற்றுச்சூழல் ஒலி தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகள், செய்முறை மற்றும் முடிவு சார்ந்த மற்றும் பங்குதாரர்கள், அறிவியல் அமைப்புகள், பொதுமக்கள் அமைப்புகள், தனியார் மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படும். 

III. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பிரிக்ஸ் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒன்றுபடுத்துவது

39. பல்வேறு தாவாக்களுக்கு அரசியல் மற்றும் ராஜாங்க வழிமுறைகளின் மூலமாக அமைதியான தீர்வு காணும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு எங்களது கடப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை  பராமரிப்பதில் ஐ.நா பாதுகாப்பு சபையின் முதன்மை பொறுப்பையும், பங்களிப்பையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

40. மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகும் சண்டைச் சூழல் மற்றும் உச்சக்கட்ட பதற்றம் குறித்த எங்களது அக்கறையை வெளிப்படுத்துகிறோம். எந்த பிரச்சினையிலும் வெளிதலையீடு அல்லது சட்ட விரோதமான பலப்பிரயோகத்திற்கும் இடமில்லை என்ற எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும், எல்லைகளின் முக்கியத்துவமும் மற்றும் சுதந்திரத்திற்கு உரிய மதிப்பு வழங்கிட, விரிவான உள்ளடக்கிய தேசிய பேச்சுவார்த்தை மட்டுமே இறுதியான, நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க முடியும் என்பதே எங்களது உறுதிப்பாடாகும். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு நாட்டின் குடிமக்கள் குறிப்பாக இஸ்ரேல் பாலஸ்தீன் நிலைமையில் தங்களது சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உள்ளவர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

41. மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவின் இதரப் பகுதிகளில் நிலவும் சண்டைச்சூழல் குறிப்பாக பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்சினைப் போன்று நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட கூடாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். .நா. தீர்மானங்கள், மாட்ரிட் கொள்கைகள் மற்றும் அரபு அமைதி முன்முயற்சிகளோடு முந்தைய ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான  ஒருங்கிணைந்த தீர்வைக் காணவும் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும், புதுப்பிக்கப்பட்ட ராஜாங்க முயற்சிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதி மற்றும் பாதுகாப்போடு, இஸ்ரேலுடன் சுதந்திர பாலஸ்தீனிய நாடு சாத்தியமாவதற்கான அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இறுதி அந்தஸ்த்து பிரச்சினைகள் என்று விவரிக்கப்படுபவைகளில் ஒன்றான ஜெருசலேத்தின் அந்தஸ்த்தை நாங்கள் மீண்டும் வலியுத்துகிறோம். காஸா நிலைமையை பொறுத்தவரை பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு மற்றும் ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்தை ஆதரிப்பதோடு, அதன் முழுமையான செயல்பாட்டிற்கும் எங்களது ஆதரவைத் தெரிவிக்கிறோம்.

42. கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண மற்றும் பணி முகமைக்கு நாங்கள் எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். 5.3 மில்லியன் பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதார கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை வழங்கும் இதன் முக்கியமான பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இப்பகுதியில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இவ்வமைப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுவதோடு, மேலும் போதிய முன் யோசனையோடு கூடிய தொடர்ந்த நிதி ஆதாரத்தை இந்த அமைப்பு பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

43. ஏமன் குடியரசில் நிலவும் சண்டைச் சூழலும் பெரும் அளவிலான மனிதாபிமான நெருக்கடியும், எங்களது அக்கறைக்கான காரணம் ஆகும். ஏமனில் அனைத்துப் பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவி இடையூறு இல்லாமல் சென்று சேர வேண்டும் என்று கூறுகிறோம் என்பதோடு, சர்வதேச சமுதாயம் இப்பகுதிக்கு தேவையான உதவியை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். ஏமன் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண ஏமன் தலைமையிலான உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நடப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும். சண்டைக்கான அணுகுமுறையைக் கைவிட்டு ஐ.நா.முயற்சியுடன் நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

44. வளைகுடா பகுதியில் நிலவும் ராஜாங்க நெருக்கடியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகளின் மூலமாக தங்களது வேறுபாடுகளை கடந்து குவைத்தின் முயற்சிகளை வரவேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

45. தேசிய அமைதி மற்றும் சமாதான வழிமுறைகளுக்கான “ஆப்கான் தலைமையின், ஆப்கானுக்கு உரித்தான” வழிமுறைகளுக்கு எங்களது ஆதரவை வலியுறுத்துகிறோம். ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் நிலை குறிப்பாக ஆப்கான் தேசிய படைகள், அரசு மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கையும் வீரியமும் அதிகரித்து வருவதற்கு எங்களது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்.  அமைதி காண்பதற்கு ஆப்கான் அரசுக்கும் மக்களுக்கும் சர்வதேச சமுதாயம் உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலையும் நாங்கள் வரவேற்கிறோம்.

46. சிரியா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற எங்களது கடப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இது 2015ஆம் ஆண்டின் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் மற்றும் சோச்சியில் நடைபெற்ற சிரியா தேசிய கலந்துரையாடல் மாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில் சிரியாவின் இறையாண்மை, சுதந்திரம், எல்லைப்பாதுகாப்பு ஆகியவற்றின் சிரியா தலைமையிலான சிரியாவிற்கு உரித்தான வழிமுறைகளைக்கொண்டு எட்டப்பட வேண்டும். ஐ.நா.வின் ஜெனிவா வழிமுறை முறை மற்றும் சமரசத்திற்கு எங்களது ஆதரவை வலியுறுத்துகிறோம். அதோடு களத்தில் நேர்மறை முன்னேற்றத்திற்கான ஆஸ்தானா வழிமுறை என்ற இரண்டிற்கும் எங்களது ஆதரவை வழங்குகிறோம். சிரியா பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில் அரசியல் வழிமுறைகளுக்கு பங்களிப்பு வழங்காத ஐ.நா. பிரகடனம், ஐ.நா. பாதுகாப்புச்சபையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். சிரியாவில் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை பின்பற்றுவதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டியுள்ளோம். எந்த சூழலிலும், எந்த காரணத்திற்காகவும், எத்தரப்பினரும், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இதுபோன்று நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து விரிவான, பாரபட்சமற்ற, சுதந்திர, வெளிப்படைத் தன்மைக்கொண்ட விசாரணையைக் கோருகிறோம். அவசர புனரமைப்புக்கான அவசியம் கருதி சிரியா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும்.

47. ஈரானின் அணு ஆயுதம் திட்டம் பற்றிய விரிவான கூட்டு நடவடிக்கைக்கான திட்டத்திற்கு (ஜேசிபிஓஏ) அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும் என்பதை நினைவு கூர்ந்து, சர்வதேச மாகாண அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இத்திட்டத்தின் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதில் அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

48. வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க கொரிய தீபகற்பத்தை அணுஆயுதங்கள் அற்ற பகுதியாக உருவாக்கும் சமீபத்திய நடவடிக்கைகளை வரவேற்கிறோம். இந்நிலைக்கு அமைதியான ராஜாங்க அரசியல் தீர்வுக்கான எங்களது கடப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

49. விண்வெளியில் ஆயுதப்போர் உருவாவது மற்றும் விண்வெளி ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு களமாக மாறுவதற்கான வாய்ப்பு  குறித்தும் எங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். விண்வெளியில் ஆயுதங்கள் உட்பட ஆயுதப்போட்டியை தடுப்பதன் மூலம் சர்வேதச அமைதிக்கும் பாதுகாப்புக்கிற்கான அபாயம் தடுக்கப்படும் என்று வலியுறுத்துகிறோம். விண்வெளியை அமைதிக்கு பயன்படுத்தும் தற்போதைய சட்டப்பூர்வமான நடவடிக்கை உறுதியோடு பின்பற்றப்படுவதற்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். விண்வெளியில் ஆயுதங்கள் மீதான தடை உட்பட விண்வெளியில் ஆயுதப்போரை தடுப்பதற்கு சட்ட அதிகாரம் கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அரசு நிபுணர்களின் குழுவை நாங்கள் வரவேற்கிறோம். விண்வெளியில் ஆயுதங்களைத் தடுக்க நடைமுறையிலான வெளிப்படைத்தன்மை, மற்றும் நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளின் பங்களிப்பையும் வழங்க முடியும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒருதரப்பான அணுஆயுத தடுப்பு பேச்சுவார்த்தை பேரவை, விண்வெளியில் ஆயுதப்போட்டியை தடுப்பதற்கான பலதரப்பு ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தங்களுக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

50. இவ்வாண்டு ஜூன்மாதம் 4ஆம் தேதியன்று பிரிடோரியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர்களின் கூட்டத்தை வரவேற்கிறோம். இவ்வமைச்சர்கள் உலக அளவிலான அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுவான நிதிப் பிரச்சினைகள் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு விவகாரஙகள் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர்களின் கூட்டத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறோம்.

51. இவ்வருடம் ஜூன் மாதம் 28 மற்றும் 29ஆம் தேதி டர்பனில் நடந்த பாதுகாப்பிற்கான பிரிக்ஸ் நாடுகளின் உயர் பிரதிநிதிகளின் எட்டாவது கூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகளாவிய பாதுகாப்புச்சூழல், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முக்கியமான சர்வதேச மற்றும்  மண்டல பிரச்சினைகள் நாடுகளுக்கு இடையேயான அமைப்பு ரீதியான குற்றங்கள், அமைதி, மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளுக்கிடையேயான தொடர்பு ஆகியவை குறித்து பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான உரையாடல் மேம்படுத்தப்படுவதை பாராட்டுகிறோம்.

52. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் ஐ நா அமைதிப்படையின் முக்கியமான பங்களிப்பையும், பிரிக்ஸ் நாடுகளின் பங்கேற்பையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதியைக் காப்பதில் பிரிக்ஸ் நாடுகளின் பணிக்குழுவிற்கு ஐ.நா. மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன் முயற்சிகளும், பரஸ்பர தகவல் பரிமாற்றம் மற்றும் ஒற்றுமையில் பிரிக்ஸ் நாடுகளின் அவசியத்தையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

53. ஆப்பிரிக்க கண்டத்தில் நிலவும் பிரச்சினைகளை சமாளிப்பதில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதோடு ஐ நா பாதுகாப்பு சபைக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு சபைக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். 2020ஆம் ஆண்டுக்குள் துப்பாக்கிகள் மவுனமாவதற்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கடப்பாட்டை நாங்கள் பாராட்டுவதோடு, ஆப்பிரிக்க அமைதி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறோம்.

54. உலகப்பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதை நாம் வரவேற்கிறோம். அதே சமயம் வளர்ச்சி ஒருங்கிணைக்கப்படாததையும் இன்னும் சில அபாயங்கள் நீடிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வர்த்தக சிக்கல்கள், அரசியல் குழப்பங்கள் நுகர்பொருள் விலையில் ஏற்ற இறக்கம், தனியார் மற்றும் பொதுத்துறையில் காணப்படும் உயரிய கட்டுப்பாடுகள், சமத்துவமற்ற நிலைமை, போதிய உள்ளீடான வளர்ச்சியின்மை ஆகிய பல்வேறு சவால்களை இது பிரதிபலிக்கிறது. வளர்ச்சியின் வாயிலாக கிடைக்கும் பயன்கள் மேலும் உள்ளார்ந்த வகையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். உலக வர்த்தகம்  நீடித்த வளர்ச்சியை பெறுவதற்கு ஏற்ற வகையிலான வெளிச்சூழலை ஏற்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை நாம் மேலும் வலியுறுத்துகிறோம்.

55. பிரிக்ஸ் பொருளாதார நாடுகள், உலகப் பொருளாதார  விரிவாக்க கண்ணோட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. நீடித்த, சமன்பாடான, வலுவான உள்ளார்ந்த வளர்ச்சிக்கு, நிதி மேலாண்மை தொடர்பான  அமைப்பு ரீதியிலான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சில வளர்ந்த பொருளாதார நாடுகளில் மேற்கொள்ளப்படும் குறு பொருளாதார கொள்கை நடவடிக்கைகளால், வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதாரம், நிதி விஷயங்களில் ஏற்ற இறக்கம் உருவாகி, அந்த நாடுகளின் முன்னேற்றத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுவது பற்றி நாம் கவலை தெரிவிக்கிறோம். ஏற்கெனவே வளர்ச்சியடைந்த, வேகமாக வளரந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் ஜி-20, நிதிநிலை வாரியம் மற்றும் இதர அமைப்புகளின் தீர்மானங்களுக்கு ஏற்ப, கொள்கைப் பேச்சு வார்த்தை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

56. நான்காவது தொழிற்புரட்சி, பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல் தொழி்ல்நுட்பம், தொழில் அமைச்சர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற்றில் ஜோகன்னஸ்பர்க் உச்சி மாநாடு கவனம் செலுத்துவதை குறிப்பிடுவதுடன், புதிய தொழில்புரட்சி குறித்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த அமைப்பு முழுமையாக செயல்படத் தொடங்குவதற்கு ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் பிரிக்ஸ் நாடுகளின் தொழி்ல்துறை அமைச்சர்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் ஆலோசனையுடன் இது அமைக்கப்படும். இதன் முதல் நடவடிக்கையாக, நான்காவது தொழில்புரட்சியின் முன்னுரிமைகளுடன் கூடிய விதிமுறைகள், செயல்திட்டம் ஆகியவை வகுக்கப்பட்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். டிஜிட்டல் மயமாக்கம், தொழில்மயமாக்கம், புதிய கண்டுபிடிப்புகள், ஆகியவற்றை உள்ளடக்கிய முதலீடு, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, நான்காவது தொழில்புரட்சியின் மூலம் எழும் சவால்களை சமாளிப்பது போன்றவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஆழ்ந்த வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே புதிய தொழில்புரட்சி கூட்டாண்மையின் நோக்கமாகும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும். இதன்  மூலம் நீடித்த தொழில் உற்பத்தித் திறனை வலுப்படுத்தவும், அறிவியல் பூங்காக்கள் கட்டமைப்பை உருவாக்கவும், தொழில்நுட்பம் அதிகமாக தேவைப்படும் இடங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு அளிப்பதும்  இந்த கூட்டாண்மையின் கடமையாகும். இந்த கட்டமைப்புகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள், ஆக்கப்பூர்வமான வழியை நோக்கி எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் என்று  நாம் நம்புகிறோம்.

57. உலகம் முழுவதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துவதில் இணையம் ஆக்கப்பூர்வமான, முக்கியமான பங்கை ஆற்றுவதை நாம் அங்கீகரிக்கிறோம். இந்த விஷயத்தில், பாதுகாப்பான, வெளிப்படையான, அமைதியான ஒத்துழைப்பில் தற்போதுள்ள நடைமுறைகளின் மூலம் வழங்கி தொடர்ந்து பாடுபட நாம் உறுதி பூணுகிறோம். நிர்வாகத்தில் இணையத்தையும் தகவல் தொழில்நுட்பத்தையும் முறையாக பயன்படுத்துவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கும் பொறுப்புணர்வும், பங்கும் இருப்பதை உணர்த்த வேண்டும்.

58. உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்தவும், நீடித்த வளர்ச்சியை உறுதிபடுத்தவும்,  அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் அமைப்பு அவசியம் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளில் பிரிக்ஸ் நாடுகளின் மாறிவரும் முன்னேற்றத்தை வரவேற்பதுடன் இந்த விஷயத்தில் நவீன கூட்டு முயற்சிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நான்காவது தொழில்புரட்சியின் சவால்களை சமாளிக்க, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளில் ஒருங்கிணைப்பு தேவை என்பதை நாம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

59. பிரிக்ஸ் அறிவுசார் சொத்துரிமை ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே மேம்பாட்டிற்கான தொழி்ல்நுட்ப பரிமாற்றத்தின் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். இதன் மூலம் சமுதாயத்திற்கு முழுமையான பயன் கிடைக்கச் செய்யும் அறிவுசார் சொத்துரிமை குறி்த்த புதிய தொழில்நுட்பங்கள் விஷயத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றும் நாம் உணர்ந்துள்ளோம்.

60.  வர்த்தகமும் தொழில்நுட்பமும்  உள்ளார்ந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆதாரங்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம். நீடித்த மற்றும் நியாயமான வழிமுறைகளுக்கான உலக பொருளாதார ஒருங்கிணைப்பு இதற்கு அவசியமாகும். மக்களின் வருமானம், பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு தொழி்ல்நுட்ப முன்னேற்றம் முக்கியமாகும். தொழி்ல்நுட்ப முன்னேற்றத்தின் வாயிலாக வளர்ந்து வரும் நாடுகள் பயன்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் உரிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.  இதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகள் பயனடைய வாய்ப்புள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு அதனைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில், உரிய வழிமுறைகளுடன் கூடிய கொள்கைகளை வகுப்பது அவசியமாகும்.

61. தொழில்நுட்பமும், விசாலமான அறிவும் அதிகரித்து கொண்டுவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், புதிய திறமைகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நாம் வலுவாக ஆதரிக்கிறோம்.  தற்கால பொருளாதார மாற்றத்தின் வேகம்,அளவு மற்றும் வாய்ப்புகள் மேலும் சவால்கள் மிகுந்ததாக அமைந்துள்ளன. இந்த விஷயத்தில், ஜி.20 நாடுகளின் முன்முயற்சி, கொள்கை, பரிந்துரைகளை நாம் வரவேற்கிறோம். இதன் மூலம் தரமான பயி்ற்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வறுமை ஒழிப்புக்கான பிரிக்ஸ் நாடுகளின் செயல் திட்டம், தொழிற்பயிற்சி, திறன் மேம்பாடு, வாழ்நாள் முழுவதும் கற்றல், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு தேவையான, துரிதகதியிலான மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

62. உலக வர்த்தக அமைப்பு வரையறுத்துள்ள விதிமுறை சார்ந்த வெளிப்படையான பாகுபாடற்ற பன்னோக்கு வர்த்தக முறையை மேற்கொள்ள நாம் உறுதி பூண்டுள்ளோம். உலக சுகாதார அமைப்பின் கீழ் வர்த்தகச் சூழலை மேம்படுத்த முடியும். பன்னோக்கு வர்த்தக முறையை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் இதன் மூலம் எடுக்கப்படும்.

63. பன்னோக்கு வர்த்தக முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். வெளிப்படையான உலகப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துள்ளோம். உலக மயமாக்கலின் பயன்களை அனைத்து நாடுகளும், மக்களும் பெறும் வகையில் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை கையாள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

64. உலக வர்த்தக அமைப்பின் பிரச்சினை தீர்வு முறை, பன்னோக்கு வர்த்தக முறை அடிப்படையாகும். சர்வதேச வர்த்தகத்தின் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மேல்முறையீட்டு அமைப்பு உறுப்பினர்களின் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை கவலை அளிப்பதாக உள்ளது. இதனால், பிரச்சினை தீர்வு முறை முடங்க நேரிடும். இதனட காரணமாக அனைத்து உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும். அதனால் அனைத்து உறுப்பினர்களும். இந்த சவாலை எதிர்கொள்ள  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முன்னுரிமை அடிப்படையில் ஈடுபடவேண்டும்.

65. உலக சுகாதார அமைப்பின் சமசர செயல்பாட்டு முறையை பராமரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பன்னோக்கு வர்த்தக முறையின் சட்டப்பூர்வமான கட்டமைப்பை மேலும் மேம்படுத்த நாம் ஒப்புக் கொண்டுள்ளோம். உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் நலன்களையும், கவலைகளையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம்.

66. ஆப்பிரிக்காவின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிக்கின்றோம். அதுபோல, ஆப்பிரிக்காவின் மேம்பாட்டுக்கான புதிய கூட்டாண்மை, ஆப்பிரிக்க மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டம் ஆகியவற்றின் மூலமாக, கட்டமைப்பு விஷயத்தில் சவால்களை அடையாளப்படுத்தும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளையும் நாம் அறிவோம். தொழில் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, ஆப்பிரிக்காவின் நீடித்த வளர்ச்சியின் மூலம் பரஸ்பர பயனளிக்கும் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் முக்கியத்துவத்தை நாம் வரவேற்கிறோம். அதனால், உள்கட்டமைப்பு நிதி பற்றாக்குறையைச் சமாளிப்பது உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என நாம் உறுதி கூறுகிறோம்.

உலகளாவிய பொருளாதார மீட்பு, நிதி மற்றும் பொருளாதாரத்தின் உலகளாவிய ஆளுகை நிறுவனங்களின் சீர்திருத்தம், நான்காவது தொழிற்புரட்சி ஆகியவற்றுக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை

67. ஆப்பிரிக்காவின் தொழில் மயமாதலின் அவசியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செயல்திட்டம் 2063 ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனத்தில் கொண்டு, ஆப்பிரிக்கக் கண்ட சுதந்திர வர்த்தக பகுதியைக் கையொப்பமிட்டதையொட்டி, நாம் ஆப்பிரிக்க நாடுகளையும் ஆப்பிரிக்க ஒன்றியத்தையும் பாராட்டுகிறோம். ஆப்பிரிக்கக் கண்ட சுதந்திர வர்த்தக பகுதியானது இந்தக் கண்டத்தின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஒரு முக்கியமான படியாகும். இது ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான பிரமாண்ட வர்த்தகத் திறனைத் திறந்துவிட்டுள்ளதுடன், அதன் சமூக-பொருளாதாரச் சவால்களையும் சமாளித்துள்ளது. இது தொடர்பாக, நாம் 2063 செயல்திட்டத்திற்கு நமது ஆதரவையும், கண்ட ஒருங்கிணைப்பையும் மேம்பாட்டையும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளையும் வலியுறுத்துகிறோம்.

68. பொறுப்புப் பங்கு அடிப்படையிலான சர்வதேச நாணய நிதியத்தை அதன் மையத்தில் கொண்டுள்ள , போதுமான வளத்துடன் கூடிய ஒரு வலிமையான உலகளாவிய நிதிப் பாதுகாப்பு வலைப்பின்னலை நாம் பரிந்துரைக்கிறோம். இதற்காக, 2019 வசந்தகாலக் கூட்டத்தில், 2019 வருடாந்திரக் கூட்டத்திற்கு முன்பாக, ஏழை நாடுகளின் குரலைப் பேணிக்காக்கும் பொழுதில் ஒரு புதிய பொறுப்புப் பங்குச் சூத்திரம் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் 15 ஆவது பொறுப்புப் பங்குகளைப் பொதுப் பரிசீலனை செய்வதை நிறைவு செய்வதற்கான நமது உறுதியை நாம் மேற்கொள்கிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைச் சீர்திருத்தங்களானது, சஹாரா கீழமை ஆப்பிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஏழை நாட்டு உறுப்பினர்களின் குரலையும் பிரதிநிதித்துவத்தையும் வலிமைப்படுத்த வேண்டும்.

69. சர்வதேச நாணயம் மற்றும் நிதிக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கியின் கவர்னர் லெசிட்ஜாக்கான்யகோவை நாம் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

70. பிரிக்ஸ் கட்டுப்பாட்டு ரிசர்வ் ஏற்பாட்டின் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொள்கிறோம். கட்டுப்பாட்டு ரிசர்வ் ஏற்பாட்டு நடைமுறையின் இணைப்பற்ற பகுதியின் சோதனையோட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை நாம் வரவேற்கிறோம். கட்டுப்பாட்டு ரிசர்வ் ஏற்பாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை நாம் ஊக்குவிக்கிறோம்.

71. பிரிக்ஸ் உள்ளூர் நாணயப் பத்திர நிதியத்தை நிறுவுவதில் சாதித்துள்ள முன்னேற்றத்தை நாம் மனநிறைவுடன் கவனத்தில் கொள்கிறோம்.

72. கணக்குத் தரத்தின் குவிப்பில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பிரிக்ஸ் நாடுகளின் கணக்குத்  தணிக்கைக் கவனக்குறைவு மற்றும் இவற்றில் மேலும் ஒத்துழைப்பை அளிக்கவும் நாம் ஒப்புக்கொள்கிறோம்.

73. டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தமட்டில் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதை நாம் வரவேற்கிறோம். இணையத் தொழில்நுட்பம் உருவாவதை ஏற்றுக் கொள்வதில் நமது ஒத்துழைப்புக்கு இந்தப் பணி பங்களிப்பு நல்கும் என நாம் நம்புகிறோம்.

74. உள்கட்டமைப்பு, முதலீடு, சர்வதேச மேம்பாட்டு உதவித் திட்டங்கள் ஆகியன நீடித்த பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அவை உற்பத்தியை அதிகரித்து ஒருமைப்பாட்டுணர்வை உயர்த்துகிறது. நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேண உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருமைப்பாடு  ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

75. பொது உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்குத் தனியார்த் துறை நிதியளிப்பை ஊக்குவித்துச் செயல்பட்டுவரும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின், குறிப்பாகப் புதிய மேம்பாட்டு வங்கிகளின், பாத்திரத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

76. சமூகம், பொருளாதாரம் மற்றும் நமது நாடுகளின் சூழலியல் வாய்ப்புவளங்கள் போன்றவற்றிற்குப் புதிய மேம்பாட்டு வங்கிகளால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் நாம் மனநிறைவு கொண்டுள்ளோம். அதற்கான திட்டத் தயாரிப்பு நிதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆப்பிரிக்க மண்டல மையத்திற்கு இணையாக சாவோ பாவ்லோ, பிரேஸில் ஆகியவற்றில் அமெரிக்காவின் மண்டல அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளதை நாம் வரவேற்கிறோம். இது அந்த கண்டங்களில் புதிய மேம்பாட்டு வங்கி தனது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள உதவும். மாறிவரும் உலகளாவிய சூழலில் புதிய மேம்பாட்டு வங்கியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, மேம்பாட்டுக்கான புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிக்க, சீனாவின் ஷாங்காய் நகரில் மே மாதம் 28-29 தேதிகளில் 3ஆவது வருடாந்திரக் கூட்டத்தின், புதிய மேம்பாட்டு வங்கியின் கவர்னர்கள் குழுக் கூட்ட விவாதங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

77. பிரிக்ஸ் நாடுகளின் மேம்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றவும் உண்மைப் பொருளாதாரத்திற்குச் சிறந்த முறையில் சேவை புரியவும் பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக, நிதி நிறுவன வலைப்பின்னலை முன்னேற்றுவதன் மூலம் நிதிச் சந்தை ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நாம் நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம். பிரிக்ஸ் நாடுகள் ஒவ்வொன்றின் நிதிச் சேவையின் தற்போதைய ஒழுங்குமுறை சட்டகம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு, சேவைகள் வர்த்தகத்தில் பொது ஒப்பந்தம் சலுகைகள், சிறந்த தொடர்பு நிதித் துறை ஒழுங்காற்றுனர்களிடயேயான ஒத்துழைப்பு ஆகியவை இது சம்பந்தப்பட்டதாகும். நாணய ஒத்துழைப்பை உயர்த்துவது, ஒவ்வொரு மத்திய வங்கியின் தொடர்ந்த சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றைத் தொடர்வோம், ஒத்துழைப்பின் மேலும் பரிமாணங்களைக் கண்டறிவோம். பசுமை நிதிநல்கையை மேலும் விரிவுபடுத்துவோம். அதனால், பிரிக்ஸ் நாடுகளின் நீடித்த மேம்பாட்டை முன்னேற்றலாம்.

78. சட்டவிரோதமான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நிதிச் செயல்பாடுகள் அதிரடிப் படை, உலகச் சுங்க அமைப்பு உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்கு ஆதரவு தருவதில் நமது உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்துவோம். இது தொடர்பாக, அதிகரித்துவரும் பரஸ்பரப் பரிமாற்றம் மற்றும் தரவுப் பகிர்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துவோம். நிதிச் செயல்பாடுகள் அதிரடிப்படையின் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் அதன் முக்கியத்துவத்தை உயர்த்திப்பிடிப்பது ஆகியவற்றை வலியுறுத்துவோம். அவற்றை அமல்படுத்துவதில் நமது ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவோம். பண மோசடி, தீவிரவாதிகளுக்கு நிதியளிப்பது ஆகியற்றை ஒடுக்குவதில் துணைநிற்போம். 

79. மாநிலங்களின் சட்ட முறைகளை வலுவிழக்கச் செய்யும் செயல்கள் உள்ளிட்ட நீடித்த தாக்கத்துடன் கூடிய ஓர் உலகளாவிய சவாலாக ஊழல் இருந்துவருகிறது. ஒரு நாட்டின் அவசியத் தேவையான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை முறியடிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு இது அச்சுறுத்தலாகவும் உள்ளது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் நான்காவது பிரிவு எடுத்துரைத்தபடி சர்வதேச ஒத்துழைப்புக்கு நாம் உறுதி ஏற்கிறோம். அதன்படி, ஊழலுக்கு எதிரான ஒத்துழைப்பின் பிரிக்ஸ் வேலைத்திட்டக் குழுவின் பிரகாரம் சர்வதேச  ஒத்துழப்பைப் பலப்படுத்தவும் உறுதி ஏற்கிறோம். நமது உள்ளூர் சட்டவிதிகளின் படி ஊழலுக்கு எதிரான சட்ட அமலாக்கத்திற்கு நாம் ஒத்துழைப்பு அளிப்போம். நாட்டை விட்டுத் தப்பியோடியவர்கள், பொருளாதார, ஊழல் பேர்வழிகள் சொத்து மீட்பு தொடர்பாகத் தஞ்சம் புகுந்தோர், பிற கிரிமினல் மற்றும் கிரிமினல் அற்ற விவகாரங்களில் ஈடுபட்டோர் போன்றவர்களைப் பிடித்துத் தருவோருக்கு உதவி புரிவோம். பரஸ்பர புரிதலை அதிகரிப்பதற்காக அனுவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பிரிக்ஸ் ஊழல் எதிர்ப்பு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றைக் கடந்த காலத்தைப் போலவே தொடர்ந்து செய்வோம். தகவல் பரிமாற்றம் மூலம் பலதரப்புத் தளங்களைப் பயன்படுத்தி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊழலை ஒழிப்பதற்கான ஆண்டாக 2018 ஆம் ஆண்டைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு நமது பாராட்டுகள்.

80. பிரிக்ஸ் பொருளாதார  கூட்டாண்மைக்கான செயல்பாட்டு உத்தியில் 8-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட ஆக்கபூர்வ முடிவுகளை நாம் வரவேற்கிறோம்பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்கள் குறித்த பிரிக்ஸ் தொடர்புக்குழு நடவடிக்கைகளை அது ஆதரிப்பதாக உள்ளது.   பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் குறித்த பிரிக்ஸ் செயல்திட்டத்தை அமலாக்குவதில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தையும் நாம் வரவேற்கிறோம். மதிப்புக்கூட்டு நடவடிக்கைகளை நாம் ஊக்குவிக்கிறோம். தொழில் மற்றும் விவசாயம் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே மதிப்புக்கூட்டு வர்த்தகத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள நிலையில், பிரிக்ஸ் மின்னணு வர்த்தக பணிக்குழு, வர்த்தக மேம்பாட்டு பணிக்குழு ஆகியவற்றை மீண்டும்  கூட்டுவதை பாராட்டுகிறோம். பிரிக்ஸ் மதிப்புக்கூட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த கூட்டு வர்த்தக ஆய்வை, மேற்கொள்வதையும் நாம் வரவேற்கிறோம். 8-வது வர்த்தக அமைச்சர்களின்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான முடிவுகளை நாம் வரவேற்கிறோம்வர்த்தகம், சேவையில் வணிகம், மின்னணு வர்த்தகத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பம் ஒழுங்குமுறை தரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் மாதிரி மின்னணு துறைமுகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

81. பிராந்திய விமானப்போக்கு வரத்துக் குறித்து பிரிக்ஸ் நாடுகளுக்குஇடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதை நாம் வரவேற்கிறோம்இணைப்பு மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் பிரிக்ஸ் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக  நாம் நம்புகிறோம்.

82. பிரிக்ஸ் சுங்கத்துறை நிர்வாகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும்தொலைநோக்கு உத்திகளை அமல்படுத்தவும்  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நாம் பாராட்டுகிறோம். பிரிக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயல்படுத்துவோர் திட்டம் 2022-ம் ஆண்டுக்குள்  இயங்கும் வகையில்ல் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான சுங்கம் தொடர்பான பரஸ்பரம் நிர்வாக உதவி ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. இந்த வகையில் பிரிக்ஸ் சுங்க செயல்திட்டத்தை நாம் வரவேற்கிறோம். பல்வேறு இலக்குகளையும், நோக்கங்களை எட்டுவதற்கு இந்த செயல்திட்டம் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சியால்  அமல்படுத்தப்பட வேண்டும். பிரிக்ஸ் சுங்க ஒத்துழைப்புக் குழுவின் ஆற்றலை நாம் அங்கீகரிக்கிறோம். சட்ட அமலாக்கம், வர்த்தக மேம்பாடு, ஆகியவற்றில் நவீன தகவல்  தொழில்நுட்பத்தையும், திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும்.

83.  உலகம் முழுவதும் நியாயமான வெளிப்படையான வரிவிதிப்பு முறையை அடைவதற்கு பிரிக்ஸ் வருவாய் அதிகாரிகளுக்கு சர்வதேச முன்முயற்சிகளை மேற்கொள்ள அளிக்கப்படும் ஆதரவை நாம் அங்கீகரிக்கிறோம். டிஜிட்டல் பொருளாதாரத்தின் பயன்களுடன் சர்வதேச வரிவிதிப்பு நடைமுறையில் நியாயமான அணுகுமுறையை மேற்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம். வரி தகவல்களை பரிமாறிக்கொள்வது, ஆதாயத்தை மாற்றிக் கொள்வது, வளரும் நாடுகளில் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு இந்த முயற்சி மிகவும் அவசியமாகும். பிரிக்ஸ் நாடுகள் வரிவிதிப்பு விஷயங்களில் தங்களது அனுபவங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ள நாம் உறுதிபூண்டுள்ளோம். பிரிக்ஸ் அதிகாரிகளிடையேதிறன் மேம்பாட்டு முறையை உருவாக்குவதை நாம் வரவேற்கிறோம்.

84.  பிரிக்ஸ் வர்த்தக குழு மற்றும் அதன் 5-வது ஆண்டு அறிக்கையின் பங்களிப்பை நாம் வரவேற்கிறோம். பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு, உள்கட்டமைப்பு, உற்பத்தி, எரிசக்தி, வேளாண் வர்த்தகம், நிதி சேவைகள், பிராந்திய விமானப்போக்குவரத்து, தொழில்நுட்பத்தரம், திறன்மேம்பாடு ஆகியவற்றில் வர்த்தக ஒத்துழைப்பை  மேம்படுத்த இந்த பங்களிப்பு அவசியமாகும். பிரிக்ஸ் வர்த்தக குழுவின் வரைமுறைகளுக்கு ஏற்ப, டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு அமைக்கப்பட்டதை நாம் வரவேற்கிறோம்.

85. நாடுகளின்  நிலைத்த பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கு சுற்றுலா மிகச் சிறந்த காரணியாகும். இதை அங்கீகரிக்கும் அதே வேளையில் சுற்றுலாக் குறித்த பிரிக்ஸ் பணிக்குழுவை அமைக்கும் முன்முயற்சிகளை நாம் வரவேற்கிறோம். இந்தப் பணிக்குழு பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே, விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், மக்களுக்கிடையே உறவுகளை  விரிவாக்கவும் அவசியமாகிறது. சுற்றுலா குறித்த ஞானம், அறிவு, அனுபவம், சிறந்த நடைமுறைகள், பயண வர்த்தகம், விமான போக்குவரத்து, சுற்றுலா உள்கட்டமைப்பு, கலாச்சாரம், மருத்துவ சுற்றுலா, சுற்றுலாசந்தைக்கு வரம்புகள். சுற்றுலா பாதுகாப்பு, நிதி ஆதரவு, காப்பீடு, மருத்துவம் ஆகியவற்றை பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலா செயல்பாடு, உள்ளடக்கியதாக இருக்கிறது. உலகப் பொருளாதார சரிவுக்கு இடையே பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து திருப்தியை நாம் குறிப்பிடுகிறோம்.

V. PEOPLE-TO-PEOPLE COOPERATION
மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு

86. பிரிக்ஸ் அமைப்பு மற்றும் அதன் திட்டங்களின் மக்களின் மையப்பங்கை வலியுறுத்தி விளையாட்டு, இளைஞர் நலம், திரைப்படங்கள், கல்வி, சுற்றுலா ஆகிய துறைகளில்  ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் மற்றும் பரிமாற்றங்களைப் பாராட்டுகிறோம்.

87. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளிட்ட வளர்ச்சியில் மக்களை மையப்படுத்தும் அணுகுமுறைக்கான எங்களது கடப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

88. தென் துருவத்தில் முதல் முறையாக உலகின் மிகப்பெரிய நீர் சார்ந்த நிகழ்வான பிரேசிலியாவில் நடந்த 8ஆவது உலக நீர் பேரவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இது உலக அளவில் நீருக்கு முன்னுரிமை தரப்படுவதற்கு தனது பங்களிப்பை வழங்கியது.

89. விண்வெளி சம்பந்தப்பட்ட  விவகாரங்களில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை நாங்கள் வலியுறுத்துவதோடு, இத்துறையில் தற்போதைய முன் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான எங்களது ஆதரவையும் உறுதி செய்கிறோம்.

90. பிரிக்ஸ் நாடுகளின் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கு உறுதி கொண்டுள்ளோம். மேலும் பிரிக்ஸ் தடுப்பூசி,  ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை அமைப்பதற்கான திட்டத்தை வரவேற்கிறோம்.

91. தேவையான வளர்ச்சிக்கான காலகட்டத்தில் காசநோய் ஒழிப்பிற்கு உலக சுகாதார அமைப்பின் முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டை வரவேற்கிறோம். 2017-ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற பல்துறை எதிர்வினை முயற்சி அதன் விளைவாக வெளியிடப்பட்ட காசநோயை ஒழிப்பதற்கான மாஸ்கோ பிரகடனம், காசநோய் ஒழிப்பிற்காக நடத்தப்படவிருக்கும் ஐ.நா.பொதுச்சபையின் முதலாவது உயர்நிலை கூட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பரவாத நோய்களின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த ஐ.நா. பொதுச்சபையின் மூன்றாவது உயர்நிலை கூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

92. நான்காவது தொழில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் கலாச்சாரத்தின் பங்கை அங்கீகரிக்கும் நாங்கள், அது வழங்கும் பொருளாதார வாய்ப்புக்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

93. மூன்றாவது பிரிக்ஸ் திரைப்படவிழாவை ஏற்பாடு செய்வதை பாராட்டும் நாங்கள் இத்துறையின் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டியதன் தேவையையும் அங்கீகரிக்கிறோம். திரைப்படத்துறையில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் பிரிக்ஸ் நாடுகளின் வேறுபட்ட கலாச்சாரத்தை காட்சிப்படுத்தவும்  திரைப்படங்களின் கூட்டு தயாரிப்பு பற்றிய பிரிக்ஸ் நாடுகளுக்கான வரைவு ஒப்பந்தத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.

94. ஆக்கப்பூர்வமான மற்றும் தேவையான கலாச்சார ஒத்துழைப்பிற்கு பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கலாச்சாரத்துறைக்கான ஒத்துழைப்புக்கான திட்டத்தின் வழிகாட்டுதலை வலியுறுத்துகிறோம்.

95. 2018ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற நிர்வாகம் பற்றிய 2ஆவது பிரிக்ஸ் கருத்தரங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் பிரக்ஸ் நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களைக் கொண்ட 3ஆவது கூட்டத்தை நடத்துவதில் பிரேசிலின் நோக்கத்தையும் அங்கீகரிக்கிறோம்.

96. சிந்தனையாளர் குழு, கல்வியாளர் பேரவை, பிரிக்ஸ் நாடுகளின் பொதுமக்கள் பேரவை, இளம் ராஜாங்க அதிகாரிகளின் பேரவை, இளைஞர்களின் உச்சிமாநாடு மற்றும் இளம் அறிவியலாளர்களின் பேரவை ஆகியவற்றுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான கலந்துரையாடல், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கு எங்களது திருப்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.

97. பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்களின் கலந்துரையாடலுக்கான தென்னாப்பிரிக்காவின் முன் முயற்சியை ஏற்றுக்கொள்கிறோம்.

98. தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாக ஏற்பாடு செய்த 3ஆவது பிரிக்ஸ் விளையாட்டுப்போட்டிகளை வரவேற்கிறோம். பிரிக்ஸ் விளையாட்டு கவுன்சிலை அமைப்பதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்கிறோம்.

99.  பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரக்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான பரிமாற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம் என்பதோடு, பிரிக்ஸ் பரிமாற்றங்கள் மேலும் வலுவடைவதை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

100. உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பெண்களின் பங்கை வலியுறுத்தி பிரிக்ஸ் மகளிர் பேரவை மற்றும் பிரிக்ஸ் மகளிர் வர்த்தக கூட்டணி ஆகியவை அமைப்பது குறித்து தற்போது பரிசீலனை  செய்யப்பட்டு வருவதை கவனத்தில் கொள்கிறோம்.

101. தென்னாப்பிரிக்காவின் தலைமையில் 2018-ஆம் ஆண்டில்  நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு  பாராட்டுத் தெரிவிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள், ஜோகன்னஸ்பர்க்கில் 10ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடத்தப்பட்டதற்கு தென்னாப்பிரிக்க அரசுக்கும் மக்களுக்கும் தங்களது உள்ளார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றன.

102. 2019-ஆம் ஆண்டில் பிரேசில் தலைமையில் நடைபெறவிருக்கும் 11ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்குறிப்பு I செயல்பாட்டிற்கான ஜோகன்னஸ்பர்க் திட்டம்

10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு – 25- 27 – ஜூலை (ஜோகன்னஸ்பர்க்)

ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டிற்கு முன்பு தென்னாப்பிரிக்க பிரி்க்ஸ் தலைமையின் கீழ் நடந்த கீழ்கண்ட கூட்டங்களின் முடிவுகளை பதிவு செய்கிறோம்.

அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள்:

  • பிரிக்ஸ் நிதி பிரதிநிதிகள் கூட்டம் – மார்ச் 17 முதல் 20 வரை (ப்யூனோஸ் எயர்ஸ்)
  • பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் – ஏப்ரல் 18 முதல் 20 வரை (வாஷிங்டன் டிசி)
  • பிரிக்ஸ் நிதி பிரதிநிதிகள் கூட்டம் – ஏப்ரல் 18 முதல் 20 வரை (வாஷிங்டன் டிசி)
  • பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மாநாடு – மே 18 (டர்பன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை/சர்வதேச உவுகளுக்கான அமைச்சர்களின்  கூட்டம் – ஜூன் 4 (பிரடோரியா)
  • பிரிக்ஸ் நாடுகள் வருவாய் ஆணைய தலைவர்கள் ஜூன் 15 முதல் 21 வரை (ஜோகன்னஸ்பர்க்)
  • பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் மற்றும் வேளாண் மேம்பாட்டுத் துறை அமைச்சர்களின் எட்டாவது கூட்டம் (புமலங்கா)
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 8-வது கூட்டம் ஜுன் 28, 29 (டர்பன்)
  • பிரிக்ஸ் எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டம் ஜூன் 28, 29 (கவ்டெங்)
  • பிரிக்ஸ் நாடுகளின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்கள் மாநாடு ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை (கிழக்கு லண்டன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் துறை அமைச்சர்களின் 6-வது கூட்டம் ஜூலை 3 (டர்பன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை அமைச்சர்களின் 3-வது கூட்டம் ஜூலை 4 (கவ்டெங்)
  • பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் 9‘-வது கூட்டம் ஜூலை 5 (மகலிஸ்பெர்க்)
  • பிரிக்ஸ் நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்களின் கூட்டம் ஜூ 10 (கேப்டவுன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் ஜூலை 19 முதல் 22 வரை (அர்ஜென்டினா)
  • பிரிக்ஸ் நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களின் 8-வது கூட்டம் ஜூலை 20 (டர்பன்)

மூத்த அலுவலர்கள் மற்றும் துறை சார் கூட்டங்கள்

  • பிரிக்ஸ் நாடுகளின் ஷெர்பாஸ் மற்றும் செஸ்-ஷெர்பாஸ்களின் முதல் கூட்டம் – பிப்ரவரி 4 முதல் 6 வரை (கேப் டவன்)
  • ப்ரிக்ஸ் நாடுகளின் ஊழல் எதிர்ப்பு குழுவின் முதல் மாநாடு – பிப்ரவரி 26 (புவேனோஸ் எயர்ஸ், அர்ஜென்டினா)
  • பொருளாதார மற்றும் வர்த்தக சிக்கல்கள் பற்றிய தொடர்பு குழுவின் 17வது கூட்டம் பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை (ஜோகன்னஸ்பர்க்)
  • பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் துறை அலுவலகங்களின் 9-வது தொழில்நுட்ப மாநாடு மார்ச் 13 முதல் 17 வரை (பிரிட்டோரியா)
  • பிரிக்ஸ் ஒப்பந்த நிதி செயற்குழு கூட்டம் மார்ச் 17 முதல் 20 வரை (புவேனோஸ் எயர்ஸ்)
  • சுங்கத்துறை வல்லுநர்களின் கூட்டம் ஏப்ரல் 16, 17 (டர்பன்)
  • சுங்க ஒத்துழைப்பு குழுவின் 2-வது கூட்டம் ஏப்ரல் 18, 19 (டர்பன்)
  • பிரிக்ஸ் ஒப்பந்த நிதி செயற்குழு மற்றும் எதிர்பாரா செலவினங்களுக்கான கையிருப்பு ஏற்பாட்டு நிலைக்குழு – ஏப்ரில் 18 – 20 (வாஷின்டன் டிசி)
  • பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழு – ஏப்ரில் 19-20 (வைட் ரிவர், நெல்ஸ்பிருயிட்)
  • பிரகஸ் செர்பாஸ்/செஸ் செர்பாஸ்களின் இரண்டாவது கூட்டம் (பெலபெலா, லிம்போபோ)
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயற்குழுவின் முதல் கூட்டம் – மே 7-10 (புமலங்கா)
  • பிரிக்ஸ் அறிவுசார் சொத்துரிமை ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டாவது கூட்டம் – மே 10 (கிழக்கு லண்டன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் இணைய வர்த்தக செயற்குழுவின் இரண்டாவது கூட்டம் – மே 10 (கிழக்கு லண்டன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக ஊக்குவிப்பு செயற்குழுவின் முதல் கூடம் – மே 10 (கிழக்கு லண்டன்)
  • தொழில்நுட்ப ஒழுங்குமுறை, தரம், ஒப்புமை மதிப்பீடு, அளவியல் மற்றும் அங்கீகார துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டம் – மே 10 (கிழக்கு லண்டன்)
  • சேவை துறைகளின் புள்ளிவிவர வர்த்தகம் தொடர்பான பயிலரங்கு – மே 10 (கிழக்கு லண்டன்)
  • பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரச்சனைகள் குறித்த தொடர்பு குழுவின் 18வது கூட்டம் – மே 11-12 (கிழக்கு லண்டன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் விவகாரங்கள் செயற்குழுவின் கூட்டம் (பிரடோரியா)
  • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டின்போதான பாதுகாப்பு தொடர்பான செயற்குழு – மே 16-17 (கேப் டவுன்)
  • சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான பிரக்ஸ் மூத்த அலுவர்களின் கூட்டம் – மே 17 (டர்பன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் எரிசக்தி திறன் மற்றும் எரிசக்தி சேமிப்பு செயற்குழுவின் கூட்டம் – மே 17-18 (கேப் டவுன்)
  • பிரிக்ஸ் நாடுகளின் சிந்தனையாளர்கள் மன்றத்தின் கூட்டம் – மே 28 (பார்க் டவுன்)
  • பிரிக்ஸ் கல்வி மன்றம் – மே 28-31 (ஜோகன்னஸ்பர்க்)
  • தரமான உட்கட்டமைப்பு (தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் அளவியல் உடல்கள்) கூட்டம் – மே 16 (கவுட்டங்)
  • உலக சுகாதார சபையின் நெறிமுறைகளுக்கு உட்பட்ட சுகாதாரம் பற்றிய பிரிக்ஸ் கூட்டம் – மே (ஜெனிவா, சுவிச்சர்லாந்து)

  • செர்பாஸ்/செஸ்-செர்பாஸ்களின் 3வது பிரிக்ஸ் கூட்டம் – ஜூன் 2-3 (பிரெடோரியா)
  • வரி விதிப்பு துறை வல்லுனர்களின் கூட்டம் – ஜூன் 18-19 (கேப் டவுன்)
  • மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா தொடர்பான மூத்த அலுவலர்கள்/வல்லுனர்களின் 4-வது கூட்டம் – ஜூன் 19 (பிரடோரியா)
  • வேளாண் ஒத்துழைப்பு பணிக்குழுவின் 8வது கூட்டம் – ஜூன் 20 (நெல்ஸ்புருட்)
  • விவசாய வயல்களுக்கு பயணம் - ஜூன் 22
  • சிவில் சொசைட்டி அமைப்புகளுடன் சந்திப்பு  - ஜூன் 25-26 (ஜோகனஸ்பர்க்)
  • சிவில் பிரிக்ஸ் - ஜூன் 25-27 (பார்க் டவுன், ஜோகனஸ்பர்க்)
  • சுங்க ஒத்துழைப்புக் குழுவின் 3-வது கூட்டம்- ஜூன் 26 (பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்)
  • பிரிக்ஸ்  ஊழல் தடுப்புப் பணிக்குழுவின் 2-வது கூட்டம் - ஜூன் 26 (பாரிஸ், பிரான்ஸ்)
  • 4-வது இளம் தூதரக அமைப்பு -  ஜூன் 25 – 29 (பிரிட்டோரியா)
  • 3-வது பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் அமைப்பு - ஜூன் 25 – 29 (டர்பன்  ஐ.சி.சி)
  • பிரிக்ஸ் நட்புறவு நகரங்கள் மற்றும் உள்ளூர் அரசு ஒத்துழைப்பு அமைப்பு ஜூன் 28 – 29 ( கிழக்கு லண்டன்)
  • 4-வது பிரிக்ஸ் நிதிக்குழுக்களின் எஸ் டி ஐ பணிக்குழுக்கூட்டம் ஜூன் 30 (டர்பன்)
  • 8-வது  பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை (எஸ்.டி. ஐ) – ஜூலை 2 (டர்பன்)
  • தொழில் வல்லுநர்களின் 3-வது கூட்டம் ஜூலை 3 (மகலைஸ்பர்க்)
  • நிர்வாகம் குறித்த பிரிக்ஸ் 2-வது கருத்தரங்கம் ஜூலை 3 – 4 ( ஜோகனஸ்பர்க்)
  • பொருளாதாரம் மற்றும் வர்த்தக விஷயங்களுக்கான தொடர்பு குழுவின் 19-வது கூட்டம் - ஜூலை 2 – 4 (கவுட்டங்)
  • பிரிக்ஸ் கட்டமைப்பு பல்கலைக்கழக மாநாடு – ஜூலை 5 – 7 ( ஸ்டெல்லான்போச்)
  • கல்வி குறித்த பிரிக்ஸ மூத்த அதிகாரிகள் கூட்டம் - ஜூலை 9 (கேப்டவுன்)
  • போக்குவரத்து உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாடு- ஜூலை 9 -10 (பிரிட்டோரியா)
  • 4-வது பிரிக்ஸ் இளைஞர் உச்சிமாநாடு ஜூலை 16 -21 (புளோம்போன்டின், ப்ரீஸ்டேட்)
  • 3-வது பிரிக்ஸ் விளயாட்டுகள் – ஜூலை 17 – 22 ( ஜோகனஸ்பர்க்)
  • பிரிக்ஸ் சுகாதார மூத்த அதிகாரிகளின் கூட்டம் ஜூலை 18 -19 (டர்பன்)
  • பி பி எஃப் பணிக்குழுக் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் சி ஆர் ஏ  நிலைக்குழுக்கூட்டம் ஜூலை 19 – 22 ( அர்ஜென்டினா)
  • பிரிக்ஸ் வணிகக்குழு ஆண்டுக் கூட்டம் ஜூலை 22-23 (டர்பன்)
  • 3-வது பிரிக்ஸ்  திரைப்படவிழா 2018 – ஜூலை 22 – 28 (டர்பன்)
  • 4-வது பிரிக்ஸ் ஷெர்பா / சோயிஸ்- ஷெர்பா கூட்டம் - ஜூலை 20-24 (ஜோகனஸ்பர்க்)
  • பிரிக்ஸ் வணிகக்குழு எரிசக்தி அமைப்பு ஜூலை 24  (ஜோகனஸ்பர்க்)
  • பிரிக்ஸ் வணிக அமைப்பு ஜூலை 25 (சான்டன்)
  • பிரிக்ஸ் ஐ சி எம் தலைவர்கள் ஆண்டுக் கூட்டம்ஜூலை 25 -26 (கேப்டவுன்)
  • பிரிக்ஸ் நிதி அமைப்பு – ஜூலை 25-26 (கேப்டவுன்)

2018-ன் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ள தென்னாப்பிரிக்காவின் செயல்பாடுகள்

  • பிரிக்ஸ் தலைவர்களின்  சாதாரண முறையிலான கூட்டம்  (பியுனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா)

அமைச்சர்கள் கூட்டங்கள்

  • பிரிக்ஸ் விளையாட்டு அமைச்சர்கள் குழுக் கூட்டம்
  • பிரிக்ஸ் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் (டர்பன்)
  • 4-வது பிரிக்ஸ் தொடர்புத்துறை அமைச்சர்கள் கூட்டம்  (டர்பன்)
  • பிரிக்ஸ் வெளிவிவகாரம் / பன்னாட்டு உறவுகள் துறை அமைச்சர்கள் கூட்டம் (நியுயார்க், அமெரிக்கா)
  • பிரிக்ஸ் நிதியமைச்சர்கள் மற்றும் மைய வங்கி ஆளுநர்கள் கூட்டம்
  • பிரிக்ஸ் சுற்றுலா மூத்த அதிகாரிகள் கூட்டம் (கவுட்டங்)

மூத்த அதிகாரிகள் மற்றும் துறை ரீதியிலான கூட்டங்கள்

  • 2-வது தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பணிக்குழுக்கூட்டம் (டர்பன்)
  • பிரிக்ஸ் டி பி ஆராய்ச்சி கட்டமைப்பு (டர்பன்)
  • 3-வது பிரிக்ஸ் ஊடக அமைப்பு
  • 3-வது பிரிக்ஸ்  ஐ சி டி ஒத்துழைப்புக்கான பணிக்குழு
  • பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புக்கான மகளிர் அமைப்பு (பிரிட்டோரியா)  
  • வேளாண் வணிக சாலைக்காட்சி
  • ஆப்பிரிக்காவின் நிதி மேம்பாட்டுக்கான பிரிக்ஸ் மாநாடு (நெல்சன் மண்டேலா பல்கலைக்கழகம், போர்ட் எலிசபெத்)
  • பிரிக்ஸ் சட்ட அமைப்பு (கேப்டவுன்)
  • பிரிக்ஸ் கலாச்சார மூத்த அதிகாரிகள் கூட்டம்
  • பிரிக்ஸ் கலாச்சார விழா (பல்வேறு நகரங்கள்)
  • பிரிக்ஸ் பணிக்குழுக்களின் கூட்டங்கள் (பேட்டி)
  • போட்டி ஆணையங்களின் தலைவர்கள் கூட்டம் (பிரிட்டோரியா)
  • 3-வது பிரிக்ஸ் நிர்வாகம் மற்றும் சீர்த்திருத்தத்திற்கான எஸ் ஓ இ அமைப்பு  (டர்பன்)
  • 4-வது  தொழில் வணிக  ஆலோசனைக் கூட்டம் (டர்பன்)
  • 3-வது ஐசிடி  மூத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு பணிக்குழுக் கூட்டம் (டர்பன்)
  • 5-வது பிரிக்ஸ் ஷெர்பாஸ் / சோயிஸ் ஷெர்பாஸ் கூட்டம் (நியூயார்க், அமெரிக்கா)
  • 2-வது பிரிக்ஸ் திறன் போட்டி (ஜோகனஸ்பர்க்)
  • பிரிக்ஸ் சி ஆர் ஏ நிர்வாகக் குழுக் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் பி எஃப் பணிக்குழுக் கூட்டம் (பாலி, இந்தோனேஷியா)
  • 2-வது பிரிக்ஸ் உயிரி மருத்துவம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துக்கான எஸ் டி ஐ பணிக்குழுக்கூட்டம் (கேப்டவுன்)
  • 3-வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் -2018 (டர்பன்)
  • 4-வது சுற்று பிரிக்ஸ் கொள்கை திட்டமிடல் ஆலோசனைகள்
  • 3-வது பிரிக்ஸ் புவி வழி அறிவியல் மற்றும் அதன் விளைவுகள் குறித்த பணிக்குழுக் கூட்டம் (பிரிட்டோரியா)
  • 3-வது பிரிக்ஸ் இயற்கை பேரிடர்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குறித்த பணிக்குழுக் கூட்டம் (பிரிட்டோரியா)
  • பிரிக்ஸ் தேசிய புள்ளியியல் அலுவலகக் கூட்டம்
  • பிரிக்ஸ் விணவெளி முகமைகள் அமைப்பு (பிரிட்டோரியா)
  • பிரிக்ஸ் வானியியல் மாநாடு (சதர்லாந்து:தென்னாப்பிரிக்காவின் பெரிய தொலைநோக்கி)
  • 6-வது பிரிக்ஸ் ஷெர்பாஸ்  / சோயிஸ் ஷெர்பாஸ் கூட்டம் (பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா)
  • பிரிக்ஸ் எஸ் டி ஐ தரகு நிகழ்ச்சி
  • பிரிக்ஸ் அறிவியல் அகடமி பேச்சுவார்த்தை (ஜோகனஸ்பர்க்)
  • 3-வது பிரிக்ஸ் தண்ணீர் அமைப்பு (பிரிட்டோரியா)
  • பிரிக்ஸ் எஸ் டி ஐ ஆலோசனைக் குழுக்களின் வட்ட மேஜை (பிரிட்டோரியர)
  • பிரிக்ஸ் எஸ்டி ஐ தொழில்நுட்ப  பரிமாற்றம் மற்றும் எஸ் எம் எம் இ  அமைப்பு (பிரிட்டோரியா)
  • 7-வது ஷெர்பாஸ் / சோயிஸ் ஷெர்பாஸ் கூட்டம்
  • பிரிக்ஸ் மக்கள் தொகை விஷயங்கள் குறித்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கூட்டம் (பிளான்ஸ்பர்க், ரஸ்டன்பர்க்)

*******

(रिलीज़ आईडी: 1546970) आगंतुक पटल : 1673
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Gujarati