பாதுகாப்பு அமைச்சகம்
“ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை”
Posted On:
22 SEP 2018 4:39PM by PIB Chennai
“பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை யாருக்கு அளிக்க வேண்டும் இறுதி செய்வதில் அரசுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை” என்று இந்திய அரசு மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அத்தகைய வணிக நடைமுறை ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தக முடிவுக்கே விடப்பட்டது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை விவரம்:
இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள டாசால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு விமான உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக பல நிறுவனங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் சுமார் நூறு நிறுவனங்களுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த வழிகாட்டுதல்களின்படி விற்பனை செய்யும் நிறுவனம் எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப் போகிறோம் என்ற விவரத்தை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இதைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு, “எந்த நிறுவனத்துக்குப் போர் விமானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை. அது முழுக்க முழுக்க ஆயுதங்கள், தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலாந்த் கூறியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்த அறிக்கை எந்த சூழ்நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபருக்கு நெருக்கமானவர்கள் குறித்து பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் சில பிரச்சினைகளை எழுப்பியுள்ளன. அதுதொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். .
இந்நிலையில், எந்த நிறுவனத்துக்குத் தளவாடங்களை விற்பனை செய்வது என்று தேர்ந்தெடுப்பதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.
பிரான்ஸ் நாட்டின் டாசால்ட் விமான நிறுவனத்துக்கும் ரிலயன்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் வர்த்தகக் கூட்டு 2017ம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்டது. இது இருவேறு தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான வணிக ஏற்பாடு, 2012-ம் ஆண்டு வெளியான ஊடகச் செய்திகளில், 126 விமானங்களைக் குறைந்த விலைக்கு முந்தைய அரசு கொள்முதல் செய்வதாக அறிவித்த டாசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்புத் துறை வணிகம் குறித்து உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டது.
இவ்வாறு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
*********
(Release ID: 1546968)
Visitor Counter : 271