குடியரசுத் தலைவர் செயலகம்
தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபை நூற்றாண்டு விழாவைக் குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2018 1:17PM by PIB Chennai
புது தில்லியில் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இன்று (செப்டம்பர் 22) புது தில்லியில் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “மொழிகள் மக்களை இணைக்கின்றன. இந்தியாவில் ஏராளமான மொழிகளும் கிளை மொழிகளும் உள்ளன. அவை அனைத்துக்கும் தனித்தனி சிறப்பு இருக்கிறது. இந்தப் பன்முகத் தன்மை இந்தியாவின் பல்வேறு கலாசார, வாழ்க்கை முறையில் ஓர் அங்கமாகியுள்ளது. தட்சிண ஹிந்தி பிரசார சபை போன்ற நிறுவனங்கள் நம் நாட்டின் உணர்வுபூர்மான ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன.
இந்த ஹிந்தி பிரசார சபை 20 ஆயிரம் பிரசாரகர்களைக் கொண்ட மிகப் பெரிய வலைப்பின்னலை (network) உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு இந்தியனும் ஏதாவது ஓர் இந்திய மொழியைக் கற்க முயல வேண்டும். இந்தி மொழி பேசும் இளைஞன் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றால் நம் நாட்டின் வளமான பாரம்பரியத்தை அறிந்துகொள்வார். இந்த அறிவு தனி நபர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1546942)
வருகையாளர் எண்ணிக்கை : 220