ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
தால்ச்சர் உர நிறுவனத்தில் ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உர நிறுவனத்தின் சம பங்குகளை முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
19 SEP 2018 1:31PM by PIB Chennai
ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உர நிறுவனத்தால் தால்ச்சர் உர நிறுவனத்தில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி வாயு அடிப்படையிலான உரத் தயாரிப்புத் திட்டத்திற்கு ஆகும் மொத்த செலவில் சுமார் 29.67 சதவீதமான ரூ.1033.54 கோடி சமபங்கு முதலீடு செய்யும் உரத் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தால்ச்சர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்வது, பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் அரசிடமிருந்து உரப் பிரிவுக்கு பெரும் முதலீடு கிடைப்பதை உறுதிச் செய்வதாக இருக்கும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாநிலம் மற்றும் கிழக்கு மண்டல பொருளாதாரத்தை அதிகப்படுத்தும். இந்த உர நிறுவனத்தை மறுசீரமைப்பது, யூரியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதை உறுதி செய்வதோடு, யூரியாவின் தற்சார்புக்கும் வழிவகுக்கும்.
********
(रिलीज़ आईडी: 1546674)
आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English