பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல்கள்
प्रविष्टि तिथि:
19 SEP 2018 10:55AM by PIB Chennai
- தற்போது செயலாளர் நிலையில் உள்ள திரு. அனிந்தோ மஜூந்தார் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவருக்கு செயலாளர் அந்தஸ்தும், ஊதியமும் வழங்கப்படும்.
- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக உள்ள திரு. கமலேஷ் நீல்கந்த் வியாஸ், அணுசக்தி துறையின் செயலாளர் மற்றும் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 64 வயதுவரை அதாவது 03.05.2021 வரையிலான அல்லது மறு உத்தரவு வரும் வரையிலான காலத்தில் எது முந்தையதோ அந்த காலம்வரை இவர் பதவி வகிப்பார்.
************
(रिलीज़ आईडी: 1546610)
आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English