சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ரத்தசோகையற்ற இந்தியா மற்றும் வீடுகளில் இளம் குழந்தைகள் பராமரிப்பு பற்றிய தேசிய தகவல் பரப்பு பயிலரங்கை திரு.அஸ்வினி குமார் சவுபே தொடங்கி வைத்தார்

Posted On: 18 SEP 2018 3:15PM by PIB Chennai

ரத்தசோகையற்ற இந்தியா மற்றும் வீடுகளில் இளம் குழந்தைகள் பராமரிப்பு பற்றிய தேசிய தகவல் பரப்பு பயிலரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவுபே இன்று (18.09.2018) புதுதில்லியில் தொடங்கி வைத்தார். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தத் திட்டத்தை தொடங்கி அமல்படுத்த மாநில திட்ட மேலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.சவுபே, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இந்த இரண்டு  முக்கிய திட்டங்களான ரத்த சோகையற்ற இந்தியா, வீடுகளில் இளம் குழந்தைகள் பராமரிப்பு ஆகியவன தொடங்கப்படுவதாக தெரிவித்தார். இந்திய மக்களின் ஊட்டச்சத்து, நிலைமையை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து (போஷான் அபியான்) இயக்கத்தை வலுப்படுத்த இந்த இரண்டு திட்டங்கள் உதவும் என்றார்.

 நாட்டில், பேருகால இறப்பு விகிதாச்சாரத்தைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட பெரும் நடவடிக்கைகள்,  பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் , இவற்றுடன் ரத்த சோகை , குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார்.  ஊட்டச்சத்துக்கான மக்கள் இயக்கத்தினை உருவாக்குமாறு கேட்டுக் கொண்ட திரு சவுபே, இந்தியாவின் எதிர்காலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கிய மேம்பாட்டை உறுதி செய்ய பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  நிகழ்ச்சியில் ரத்த சோகையற்ற இந்தியா மற்றும் வீடுகளில் இளம் குழந்தை பராமரிப்புத் திட்டத்திற்கான கருவி பேழையை திரு. அஸ்வினி குமார் சவ்பே வெளியிட்டார்.

------



(Release ID: 1546578) Visitor Counter : 100


Read this release in: English