பாதுகாப்பு அமைச்சகம்

எம்.பி.ஏ.டி.ஜி.எம்.-ன் இரண்டாவது சோதனை வெற்றி

Posted On: 16 SEP 2018 4:15PM by PIB Chennai

இன்று அகமத்நகர் மலைத்தொடரிலிருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின் (எம்.பி.ஏ.டி.ஜி.எம்.) சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. திட்டத்தின் அனைத்து குறிக்கோள்களும் எட்டப்பட்டுள்ளது. 2018, செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களில் நிகழ்த்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், அதிகபட்ச தூரத் திறன் உள்ளிட்ட பல்வேறு தூரங்களுக்கான சோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டன.

எம்.பி.ஏ.டி.ஜி.எம். ஆயுத அமைப்பின் இரண்டு வெற்றிகளுக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனக் குழுவினரையும், இந்திய இராணுவத்தினரையும் மற்றும் தொடர்புடைய தொழிற்சாலையினரையும் பாராட்டினார்.

 


(Release ID: 1546427)
Read this release in: English