உள்துறை அமைச்சகம்

காஷ்மீர் எல்லையில் அதிநவீன வேலி அமைக்கும் திட்டம்: உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2018 5:00PM by PIB Chennai

இந்திய – பாகிஸ்தான் சர்வேதச எல்லையில் அதிநவீன வேலி (smart fencing) அமைப்பதற்கான இரு முன்னோடித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஜம்முவில் இன்று தொடங்கிவைத்தார்.  நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எல்லையில் பாதுகாப்பு முறைகளை வலுவாகவும் உறுதியாகவும் ஆக்குவதற்காக மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்தை அதிக அளவில் செயல்படுத்துவதி வருகிறது என்று குறிப்பிட்டார்.

எல்லையில் அதி நவீன வேலி அமைப்பது எல்லை மாநிலங்களில் பாதுகாப்புப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வு என்றும் ஜம்மு பகுதியில் இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் தலை 5 கி.மீ. தூரத்திற்கு இரு திட்டப் பணிகள் முன்னோடித் திட்ட நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இந்த நவீன வேலை அமைப்பதன் மூலம் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் உயிரிழப்பது பெருமளவுக்குக் குறைவதுடன், அவர்களிடையில் மன அழுத்தம் அதிக அளவுக்குக் குறையும் என்றும் திரு. ராஜ்நாத் சிங் கூறினார்.

நிகழ்ச்சியில் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு. கே.கே. சர்மா, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், “எல்லையில் குறையில்லாத பாதுகாப்புதான் அரசின் முன்னுரிமையாகும். நாட்டின் எல்லையில் சுமார் 2,026 கி.மீ. தூரம் அச்சுறுத்தலுக்கு உரியது. எல்லைகளின் மிக தூரத்துக்கு டிஜிட்டல் வேலைத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்” என்றார்.

ஜம்முவிற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அங்கு நடைபெறும் தூய்மை இந்தியா இயக்கத்தில் பங்கேற்று, எல்லைக் காவல் படை அதிகாரிகள், வீரர்களுக்கு தூய்மை உறுதிமொழியை செய்துவைத்தார்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1546424) வருகையாளர் எண்ணிக்கை : 142
இந்த வெளியீட்டை படிக்க: English