அணுசக்தி அமைச்சகம்

இந்தியாவின் முதலாவது அணு உலை அப்சரா டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியது

Posted On: 11 SEP 2018 4:14PM by PIB Chennai

இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜே பாபா 1950 ஆம் ஆண்டு வாக்கில், “அணுசக்தி திட்டத்தின் முதுகெலும்பு ஆராய்ச்சி அணு உலைகள்தான்” என்று கூறினார்.  இதனையடுத்து, 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிராம்பே வளாகத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஆராய்ச்சி அணு உலை அப்சரா செயல்படத் தொடங்கியது.  50 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சியாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த இந்த உலை 2009 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

     இந்த அப்சரா அணுஉலை தரம் மேம்படுத்தப்பட்டு தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.  நீச்சல்குளம் போன்ற ஆராய்ச்சி அணு உலை “மேம்படுத்தப்பட்ட அப்சரா” உயர் திறனுடன் பிறந்தது. 2018 செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.41 மணி முதல் இந்த உலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்த அணுஉலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது, குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் (எல்.ஈ.யூ.) மூலகங்களைக் கொண்ட தகடு மாதிரியான எரிபொருளை பயன்படுத்துகிறது.  இதில் உள்ள உயர் நியூட்ரான் அடர்த்தி காரணமாக மருத்துவ பணிகளுக்கான கதிரியக்க ஐசோடோப்புகள் உள்நாட்டு உற்பத்தி 50%  அளவுக்கு உயரும். இவை அணு இயற்பியல், பொருள் அறிவியல், கதிரியக்க கவசம் ஆகியவை தொடர்பான ஆராய்ச்சியில் பெரிதும் பயன்படும்.

     இந்த அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கியதன் காரணமாக மருத்துவ பராமரிப்பு, அறிவியல் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நவீன வசதிகளை உருவாக்கும் திறன், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடம் உள்ளது என்பதை இந்த அணுஉலை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

*****



(Release ID: 1545703) Visitor Counter : 5133


Read this release in: English , Marathi