குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் ஆன்மிக மற்றும் கலாச்சார வேர்களை மறந்துவிடக் கூடாது: குடியரசு துணைத் தலைவர்

புதிய மற்றும் எழுச்சிமிக்க இந்தியாவை உருவாக்க இயன்றதை அளியுங்கள்
அமெரிக்காவில் உள்ள பல்வேறு தெலுங்கு அமைப்பு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்

Posted On: 09 SEP 2018 1:34PM by PIB Chennai

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தங்களது ஆன்மிக மற்றும் கலாச்சார வேர்களை மறக்கக்கூடாது என்றும் புதிய மற்றும் எழுச்சி கொண்ட இந்தியாவுக்கு தங்களால் இயன்றதை நன்கொடையாக அளிக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் அவர் இன்று அமெரிக்காவில் செயல்படும் 21 தெலுங்கு சங்கங்களின் உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் திரு. நவ்தேஜ் சர்னா மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

இந்தியாவின் முக்கிய மதிப்புகள் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல், கவனித்துக் கொள்ளுதல் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குடும்பமாக – வசுதைவ குடும்பமாக கருதும் நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர்களை குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். இந்தியா உலகின் ஆன்மிக தலைநகரமாக திகழ்கிறது என சுட்டிக்காட்டிய அவர், உயிர்ப்புடன் திகழும் நாகரீகங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று கூறியதுடன், கடந்த பல நூற்றாண்டுகளில் பல்வேறு துறைகளில் பூஜ்யம் முதல் யோகா வரை இந்தியர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

உங்களது தாய்மொழி, சொந்த கிராமம், தாய்நாடு, பெற்றோர் மற்றும் உங்கள் வெற்றிக்கு பொறுப்பான குருவை மறக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் ஒருபோதும் தங்களது கடந்தகாலத்தை மறக்கக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்கவின் முன்னேற்றத்திற்காக பங்காற்றிய தெலுங்கு சமூகத்தை பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புக்களில் தெலுங்கர்கள் இருப்பது பெருமிதமளிப்பதாகும் என்றார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறந்த நடைமுறைகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றை தனதாக்கிக் கொண்டபோதிலும்,  இந்தியாவின் வளமிக்க கலாச்சார மற்றும் பாரம்பரியத்த்துடன் வேரூன்றி இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். நாம் நமது பண்டிகைகளை கொண்டாடுவதுடன் நமது மரபுகளைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என அவர் கூறினார். அதே நேரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை பலப்படுத்துவதற்கு தெலுங்கர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இதர இந்தியர்கள் பாலமாக திகழ்ந்துள்ளனர். நட்பின் இணக்கத்தை பலப்படுத்த மக்களுக்கு இடையிலான தொடர்புகள் அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், அடுத்த 10-15 ஆண்டுகளில் உலகின் முன்னணி பொருளாதாரமாக திகழ்வதற்கான பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்தியாவை நோக்கி உலகம் தனது பார்வையை செலுத்துகிறது என்றார். “இந்தியாவின் வேகமான வளர்ச்சிக் கதையில் நீங்களும் இணைய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 32 மில்லியன் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாக கூரிய அவர், வெளிநாடுகளில் உள்ள தெலுங்கர்கள், இந்தியா மற்றும் இந்தியர்களின் அடையாளத்தை மேம்படுத்தும் வகையில் எப்போதும் பாடுபட வேண்டும் என்றார். தங்களது சொந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொண்டு அவை மாதிரி கிராமங்களாக உருவெடுக்கச் செய்ய வேண்டும் என அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

***



(Release ID: 1545487) Visitor Counter : 194


Read this release in: English