மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வியறிவின்மையை போக்குவதில் குழந்தைகளுக்கு முக்கிய பங்கு: திரு. பிரகாஷ் ஜவடேகர்
Posted On:
08 SEP 2018 7:46PM by PIB Chennai
52வது சர்வதேச எழுத்தறிவு தினத்தை கொண்டாடும் வகையில் தேசிய அளவிலான விழா புதுதில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்தும் அதிக எண்ணிக்கையிலான கல்வியறிவற்ற மக்களை காண்பதற்கு வருத்தமாக உள்ளது என்றார். நாட்டில் இருந்து கல்வியறிவின்மையை ஒழிக்க எழுத்தறிவு இயக்கம் நாடு முழுவதும் சமூக இயக்கமாக இருக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் புதிய இந்தியா கல்வியறிவு பெற்ற இந்தியாவாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். உரிய நேரத்தில் இந்த இலக்கு எட்டப்படும் வகையில் தூயமை இந்தியா இயக்கம் போல் ஒரு தேசிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றார் அவர்.
நமது நாட்டில் இருந்து கல்வியறிவின்மையை போக்குவதில் குழந்தைகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். அனைத்து மாணவர்களும் எழுத்தறிவில்லா தனது குடும்பத்தினருக்கு கல்வி புகட்ட முனவரவேண்டும் என்றும் இதனால் அவர்களும் படிக்கவும் எழுதவும் முடியும். வரும் ஆண்டுகளில் முழு எழுத்தறிவு என்ற இலக்கை நாம் எட்ட வேண்டும் என்றால் கல்வித் துறையில் நாம் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார். எழுத்தறிவற்றோர் கற்றல் வேகத்தை அதிகரிக்க, பாடங்கள் மற்றும் பயிற்றுவிக்கும் முறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதனால் அவர்களும் எளிதாக பயில முடியும் என்றும் அவர் யோசனை கூறினார்.
நாம் கல்வித் துறையை முழுமையான அளவில் மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் இதற்காக சமாக்ரா சிக்ஷா என்ற பள்ளிக் கல்விக்கான மாநிலங்களுக்கு அளிக்கும் ஆதரவை ஆரம்ப பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை விரிவாக்கம் செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம் என அமைச்சர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் பள்ளிகளுக்கு ரூ. 5000 முதல் 20000 வரை நூலக மானியம் அளிக்கப்பட்டு நூலகங்கள் வலுப்படுத்தப்படும். சமாக்ரா சிக்ஷாவின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் விளையாட்டு கருவிகள் கிடைக்கும் என்றும் தொடக்கப்பள்ளிக்கு ரூ. 5000, நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 10000 மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் ரூ. 25000 அளிக்கப்படும். பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா 6-8 வகுப்புகளில் இருந்து 8-12 வகுப்புகளாக விரிவுபத்தப்படும் என திரு. ஜவடேகர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு : pib.gov.in
(Release ID: 1545486)