குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

தூய்மையே சேவை இயக்கத்தை செப்டம்பர் 15 தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2018 6:17PM by PIB Chennai

தூய்மையே சேவை 2018 என்ற தூய்மைக்கான மக்கள் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்காவது ஆண்டில் வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை கடைபிடிக்கப்படுகிறது. மாண்புமிக பிரதமர் தலைமையில் கடந்த ஆண்டு தூய்மையே சேவை 2017 பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தூய்மையே சேவை 2018 இயக்கம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும் மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டுடன் நிறைவடையும். தூய்மைஆன இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் மக்கள் இயக்கத்தை விரைவுபடுத்துவது தூய்மையே சேவை இயக்கத்தின் நோக்கமாகும். குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் செயலர் திரு. பரமேஸ்வரன் ஐயர், இந்த இயக்கத்தின் சிறப்பம்சங்களை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு: pib.nic.in

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1545305) வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu