பாதுகாப்பு அமைச்சகம்

பெல் நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு 50,000 கோடியைத் தாண்டியுள்ளது

Posted On: 05 SEP 2018 6:06PM by PIB Chennai

பொதுத்துறையின் நவரத்தினா நிறுவனங்களில் ஒன்றான பாரத மின்னணு நிறுவனம் (பெல்) தரையிலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்து செல்லும் ஏழு தொலைதூர ஏவுகணைகளை பாதுகாப்புத் துறைக்கு வழங்குவதற்கான ரூ.9,200 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது.  இதன்மூலம் இந்த நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆர்டரின் மதிப்பு ரூ.50,000 கோடியை தாண்டியுள்ளது. 

 

மசகான் கப்பல் நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் கட்டுதல் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் ஆகியவை உருவாக்கவுள்ள ஏழு கப்பல்களில் பொருத்துவதற்கான ஏவுகணைகளை தயாரிப்பதற்கு பெல் நிறுவனம் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.  இந்த நிறுவனம் இதுவரை பெற்ற ஆர்டர்களிலேயே அதிக மதிப்பிலான ஒற்றை ஆர்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.  பெல் நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப் பிரிவு) திருமதி. ஆனந்தி ராமலிங்கம் கப்பல் கட்டும் இரண்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

 

‘இந்தியாவில் உற்பத்தி’ என்ற முன்முயற்சிப் பாதையில் உள்நாட்டு உற்பத்திக்கான முயற்சியில் பெல் நிறுவனம் தொடர்ந்து ஈடுபடுகிறது.  போட்டி, தொழில்நுட்பத் தரத்தின் பராமரிப்பு, மின்னணு சாதனங்கள் தயாரிப்பு உத்தியில் தனது தலைமை நிலையை நிலைநிறுத்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.

******


(Release ID: 1545050) Visitor Counter : 116
Read this release in: English