நிதி அமைச்சகம்

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 94,000 கோடி

Posted On: 01 SEP 2018 5:42PM by PIB Chennai

2018 ஆகஸ்ட் மாதம் ரூ. 93,960 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி. ரூ. 15,303 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 21,154 கோடி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி. ரூ. 49,876 கோடி ஆகும். (இறக்குமதிகளின் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,512 கோடி இதில் அடங்கும். மேலும் தீர்வையாக ரூ. 7,628 கோடி (இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ. 849 கோடி உட்பட) வசூலிக்கப்பட்டுள்ளது. 2018 ஆலஸ்ட் 31ம் தேதி வரை ஜூலை மாத்த்திற்கான தாக்க்ல் செய்யப்பட்ட ஜி.எஸ்>டி.ஆர். 3பி கணக்குகள் எண்ணிக்கை 67 லட்சமாகும். 2018 ஜூலை 31 வரை தாக்கல் செய்யப்பட்ட ஜூன் மாத கணக்குகளின் எண்ணிக்கையான 66 லட்சத்தை விட இது கூடுதலாகும். ஜூலை மாத கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள் கேரள மாநிலத்திற்கு அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தீர்வுத் தொகையான ரூ. 12000 உட்பட தீர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கான மொத்த வருவாய் ஆகஸ்ட் மாத்த்தில் ரூ. 36963 கோடி மற்றும் ரூ. 41136 கோடியாகவும் உள்ளது. ஜூன் – ஜூலை ஆகிய இரு மாத காலத்திற்கு மாநிலங்களுக்காக இழப்பீடாக ரூ. 14930 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

2018 ஆகஸ்ட் மாத வசூலிக்கப்பட்ட வருவாய் ஜூலை மாதம் வசூலிக்கப்பட்ட ரூ. 96483 கோடி மற்றும் ஜூன மாதம் வசூலிக்கப்பட்ட ரூ. 95610 கோடியை விட சிறிதளவு குறைவாகும். நடப்பு ஆண்டில் வருவாய் போக்கை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.

 

***



(Release ID: 1544870) Visitor Counter : 123


Read this release in: English