சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
“தவறான குற்றச்சாட்டு (நீதியின் குறைபாடு): சட்டரீதியான தீர்வுகள்” என்பது குறித்த சட்ட ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2018 5:53PM by PIB Chennai
“தவறான குற்றச்சாட்டு (நீதியின் குறைபாடு): சட்டரீதியான தீர்வுகள்” என்ற தலைப்பிட்ட தனது 277-வது அறிக்கையை இந்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் 30.08.2018 அன்று சமர்ப்பித்தது.
தவறான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட சட்ட அம்சங்களின் கீழ், தீர்வு காண சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தவறான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான கட்டமைப்பின் மூலம் நிதிஅளித்தல் வழியிலும், நிதிஅல்லாத (ஆலோசனை வழங்குதல், மனநல சேவைகள், தொழில்பயிற்சி / வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாடு போன்ற) பிற வழிகளிலும் நிவாரணம் வழங்கவும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தவறான குற்றச்சாட்டுகளுக்கான கட்டமைப்புக்கு சில முக்கியமான கோட்பாடுகளை இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது. அதாவது இழப்பீடு கோரும் வழக்குகளை பதிவு செய்தல், இந்த இழப்பீடு கோருதல் பற்றி முடிவு செய்ய தனி நீதிமன்றம் அமைத்தல், நடைமுறையின் தன்மை- உரிமை கோரல் பற்றி முடிவு செய்ய உள்ளிட்டவை இதில் அடங்கும். குறிப்பிட்ட சில வழக்குகளில் இடைக்கால இழப்பீட்டை தீர்மானிக்க நிதிநிலை மற்றும் பிற அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். தவறான வழக்கு / தண்டனை விஷயத்தில் தகுதி நீக்கம் செய்தல் போன்றவையும் பரிந்துரைகளில் உள்ளன. மேற்குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு வரைவு மசோதா - குற்றவியல் நடைமுறைச்சட்ட (திருத்த) மசோதா 2018 – இந்த அறிக்கையுடன் இணைப்பாக தரப்பட்டுள்ளது.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1544580)
வருகையாளர் எண்ணிக்கை : 249