நிதி அமைச்சகம்

இந்தியாவில் எரிசக்தி திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு உதவும் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 28 AUG 2018 6:44PM by PIB Chennai

இந்தியாவில் எரிசக்தி திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு உதவும் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில்  இந்திய அரசும் உலக வங்கியும் புதுதில்லியில் கையெழுத்திட்டன. எரிசக்தி திறன் சேவை நிறுவனத்தினால் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம், குடியிருப்பு மற்றும் பொது துறைகளில் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும், இந்நிறுவனத்தின் திறனை வலுப்படுத்தும் மற்றும்  வர்த்தக நிதி அணுகுமுறையை மேம்படுத்தவும் உதவி செய்யும்.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு சார்பில், நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் திரு. ஷமீர் குமார் காரே மற்றும் உலக வங்கியின் சார்பில் அவ்வங்கியின்  இந்திய பிரிவின் தற்காலிக இயக்குநர் திரு. ஹிஷாம் ஆப்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இத்திட்டத்தின் கீழான முதலீடுகள் ஆயுட்கால பசுமை குடில்களிலிருந்து 170 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேறுவதைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு  10 ஜிகாவாட் கூடுதல் உற்பத்தி செய்வதைத் தவிர்ப்பதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் தேசிய நிர்ணயித்த பங்களிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய மேம்படுத்தப்பட்ட எரிசக்தித் திறன் இலக்கான 19.6 ஜிகாவாட்டில் 50 சதவீதத்திற்கும்  அதிகமாகும்.

                                          *****



(Release ID: 1544313) Visitor Counter : 83


Read this release in: English