பிரதமர் அலுவலகம்

பிரதமரின் சிங்கப்பூர் பயணத்தின் போது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 01 JUN 2018 1:00PM by PIB Chennai
  1. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டின் (CECA) 2-வது ஆய்வுக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
  2. செவிலியர் பணி தொடர்பான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம்
  3. கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்கள் (கப்பலில் கொண்டு செல்லப்படும் விமானப்போக்குவரத்து கருவிகள் உட்பட) ஆகியவற்றின் பயணத்தின் போது, பரஸ்பர ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, சேவைகள், ஆதரவு ஆகியவை குறித்த இந்திய கப்பற்படைக்கும், சிங்கப்பூர் குடியரசின் கப்பற்படைக்கும் இடையிலான அமலாக்க ஒப்பந்தம்.
  4. கணினி பாதுகாப்புக் குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும், சிங்கப்பூர் குடியரசின் கணினி பாதுகாப்பு முகமையான சிங்கப்பூர் கணினி அவசரகால நடவடிக்கை குழுவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விரிவாக்கம்.
  5. இந்தியாவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே போதை மருந்துகள், மனஎழுச்சியைத் தூண்டும் பொருட்கள் போன்றவற்றின் சட்டவிரோத கடத்தல் தடுப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  6. பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத்துறையில், இந்தியாவின் பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் மற்றும் சிங்கப்பூரின் பொதுச் சேவைப் பிரிவு ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  7. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நிதித் தொழில்நுட்பம் குறித்த கூட்டுப்பணிக்குழு அமைப்பதற்கு இந்தியாவின் பொருளாதார விவகாரங்கள் துறைக்கும் சிங்கப்பூரின் பண ஆணையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  8. திட்டமிடல் துறையில் ஒத்துழைப்பு பற்றி நிதி ஆயோக்கிற்கும், சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

-----



(Release ID: 1543862) Visitor Counter : 121


Read this release in: English