பிரதமர் அலுவலகம்

இந்திய&திபெத் எல்லைக் காவல் படை சுற்றுலா குழுவில் இடம்பெற்றிருந்த சிக்கிம் மற்றும் லடாக் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 06 FEB 2018 6:23PM by PIB Chennai

இந்திய திபெத் எல்லைக் காவல்படையின் இரண்டு சுற்றுலாக் குழுவில் இடம்பெற்றுள்ள சிக்கிம் மற்றும் லடாக்கைச் சேர்ந்த 53 மாணவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். பிரதமருடன் கலந்துரையாடிய அவர்கள் வளமான, ஊழலற்ற இந்தியா குறித் தங்களது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்டனர். இந்தத் தொலைநோக்கு பார்வையை அடையும் வகையில் பணியாற்றுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். அதிக ஆக்கப்பூர்வமாக செயல்படும் வகையில், அதற்குரிய தகுதியுடன் இருக்குமாறு மாணவர்களை அவர் வலியுறுத்தினார். இதற்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கற்றலின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய பிரதமர், எப்போதும் கற்றுக்கொள்பவராக இருப்பதற்கான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனைகள் குறித்தும் மாணவர்கள் தங்களது ஆர்வத்தை தெரிவிக்க அது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நேரடி மானிய மாற்றம் எவ்வாறு சாமானிய மக்களுக்கு பயன் அளிக்கிறது என்றும் பிரதமர் விவரித்தார்.

மாணவர்கள் தேவையற்ற மன அழுத்தம் இன்றி வாழவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் எழுதியஎக்சாம் வாரியர்ஸ்புத்தகம் பற்றியும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

*****



(Release ID: 1543860) Visitor Counter : 77


Read this release in: English , Assamese , Kannada