நித்தி ஆயோக்

இந்திய இமாலயப் பகுதியில் நீடித்த வளர்ச்சிக்கான 5 முக்கிய அம்சங்களைக் கொண்ட அறிக்கைகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது

Posted On: 23 AUG 2018 4:05PM by PIB Chennai

இமாலயத்தின் தனித்துவத்தையும், நீடித்த வளர்ச்சிக்கான சவால்களையும் உணர்ந்து 5 முக்கிய அம்சங்களில் செயல்பாடுகளுக்கான திட்டத்தை உருவாக்க ஜூன் 2017-ல் ஐந்து பணிக் குழுக்களை நிதி ஆயோக் அமைத்தது. குடிநீர் பாதுகாப்புக்காக இமாலயத்தில் நீரூற்றுகளைக் கண்டறிதல் மற்றும் சீரமைத்தல், இந்திய இமாலயப் பகுதியில் நீடித்த சுற்றுலா, சாகுபடி முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அணுகுமுறை, இமாலயப் பகுதியில் திறன் மற்றும் தொழில் முனைவோர் எண்ணிக்கையை வலுப்படுத்துதல், முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ப, புள்ளி விவரங்கள் / தகவல் சேகரித்தல் ஆகியவை முக்கிய அம்சங்களில் அடங்கும். இமாலயப் பகுதிக்கு இவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. மலைப்பாங்கான இடங்களில் சமூக - பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு, கட்டிடங்கள் வலுவாக இருப்பதற்குக் குறிப்பிடத்தக்க தீர்வுகளைக் காண மலைகள்  தெரிவு அவசியமாகிறது. தனித்தன்மை, சவால்கள், செயல்பாட்டில் உள்ள நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி ஐந்து பணிக் குழுக்களின் அறிக்கை விவாதிக்கிறது.

  ஐந்து முக்கிய அம்சங்களிலும் உள்ள சவால்களை இந்த அறிக்கைகள் பட்டியலிட்டுள்ளன. மக்களுக்கு முக்கியத் தேவையான குடிநீர் பாதுகாப்பு அளிக்கும் சுமார் 30 நீரூற்றுகள் வறண்டுள்ளன. 50 சதவீதம் நீரூற்றுகளில் தண்ணீர்  வருவது குறைந்துள்ளது. இமாலயத்தில் வருடாந்திர சுற்றுலா 6.8 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் திடக்கழிவு, குடிநீர், போக்குவரத்து, பன்முக உயிரின இழப்பு தொடர்பான பெரிய சவால்கள் ஏற்படுகின்றன. 2025-வாக்கில் இந்திய இமாலயப் பகுதியை சேர்ந்த மாநிலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளோடு கூடுதலாக திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் கட்டுப்பாடு போன்ற முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ள அவசரமான செயல் திட்டங்கள் தேவைப்படுகின்றன.

==============



(Release ID: 1543740) Visitor Counter : 151


Read this release in: English , Bengali