சுற்றுலா அமைச்சகம்

“ சர்வதேச புத்தமதத்தவர் மாநாடு 2018 ” : குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்

Posted On: 23 AUG 2018 4:00PM by PIB Chennai

 குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்  சர்வதேச புத்தமதத்தவர் மாநாட்டினை  இன்று (23.08.2018) புதுதில்லியில்  தொடங்கிவைத்தார்.   

   இந்த மாநாட்டின் தொடக்கவிழாவிற்குத் தலைமை வகித்துப் பேசிய திரு. கே. ஜே. அல்ஃபோன்ஸ், பகவான் புத்தரின் வாழ்க்கையோடு இணைந்த பல முக்கியமான இடங்களுடன் வளமிக்க தொன்மையான புத்தமத பாரம்பரியங்களை இந்தியா கொண்டிருக்கிறது என்றார்.

  ஆகஸ்ட் 23 தொடங்கி 26வரை புதுதில்லியிலும், அஜந்தாவிலும் (மகாராஷ்டிரா) நடைபெறும் 4 நாள் மாநாட்டிற்கு மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேச மாநிலங்களுடன் இணைந்து மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

  புத்தமதம் சார்ந்த இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த மாநாட்டின்போது “முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கும்” சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

                                          ============


(Release ID: 1543736) Visitor Counter : 141
Read this release in: Bengali , English