|
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காளிகளுக்கு வசதியாக இணையப் பயன்பாடுகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
23 AUG 2018 2:39PM by PIB Chennai
வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காளிகளுக்கு வசதியாக பலவித இணையப் பயன்பாடுகளை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், இணைய நீதிமன்ற முன்முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், இணைய செயல்பாடுகளை பயன்படுத்துவோருக்கான விவரக் குறிப்புகளோடும், இணைய நீதிமன்றத் திட்டத்தை விளம்பரப்படுத்தி, அதன் மூலம் வழங்கப்படும் சேவைகளைத் தெரியப்படுத்தவும், இந்த சேவைகள் குறித்து வழக்காளிகளும், வழக்கறிஞர்களும், சம்பந்தப்பட்ட பிறரும் அறிந்துகொள்ளவுமான, கையேடுகளை வெளியிட்டார்.
டிஜிட்டல் நீதிமன்ற சேவைகள் பல திருப்பங்களை காண்பதற்கு இணைய நீதிமன்றத் திட்டத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் உச்சநீதிமன்ற மின்னணுக் குழுவின் பொறுப்பு நீதிபதி திரு. எம்.பி. லோக்கூர், இணைய செயல்பாடுகளின் சிறப்பு அம்சங்களையும், பயன்களையும் விவரித்தார்.
efiling.ecourts.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வழக்கறிஞர்களும், வழக்காளிகளும் மனுக்களைத் தாக்கல் செய்ய வசதியுள்ளது. இந்த இணைய செயல்பாடு மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும், எந்தவொரு நீதிமன்றத்திற்கும் ஒருவர் வழக்கைப் பதிவு செய்யமுடியும். இந்த இணையப் பக்கத்திலிருந்து வழக்காளிகளும், வழக்கறிஞர்களும் வழக்குகளின் வகைப்பாடு நிர்வாகத்தை அறியமுடியும். தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஆட்சேபத்திற்குரிய அல்லது நிராகரிக்கப்பட்ட வழக்குகள் பற்றிய அண்மை விவரங்களையும், அவ்வப்போது அறிந்து கொள்ளலாம். டிஜிட்டல் கையெழுத்துப் போடுவதற்கு அடையாளச் சீட்டினை பெற முடியாதவர்களுக்கு ‘இ-சைன்’ வசதி உள்ளது.
மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 16,089 கணினி மயமாக்கப்பட்ட மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களின் நீதித்துறை நடைமுறைகள், முடிவுகள் தொடர்பான தகவல்கள் இதில் கிடைக்கின்றன. வழக்குப் பதிவு, வழக்குப் பட்டியல், வழக்கின் நிலை, தினசரி உத்தரவுகள், இறுதித் தீர்ப்புகள் போன்ற விவரங்களை வழக்காளிகளுக்கு இந்த இணையப் பக்கம் வழங்குகிறது.
இணைய நீதிமன்றங்கள் திட்டத்தின்கீழ், பி.எஸ்.என்.எல் மூலம் ஒற்றை வலைப்பின்னல் தொகுப்பாக மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்கள் அனைத்தையும் இணைக்கின்ற, அகண்டப் பகுதி வலைப்பின்னல் (WAN) திட்டத்தை நீதித்துறை நிர்வகித்து வருகிறது. இணைய நீதிமன்றங்கள் திட்டத்தின்கீழ் ரூ.169.61 கோடி செலவில் இணையத் தொடர்பு இல்லாத 458 நீதிமன்ற வளாகங்கள் உட்பட 3064 நீதிமன்ற வளாகங்களுக்கு அகண்டப் பகுதி வலைப்பின்னல் தொடர்பை ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யவேண்டும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு கடந்த மே மாதம் நீதித்துறை பணி ஆணையை வழங்கியது.
==============
(रिलीज़ आईडी: 1543732)
|