மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பொறியியல் படிப்புக்கான கூட்டு நுழைவுத் தேர்வின் மேல்நிலை தேர்வுக்கு தயாரிப்பதற்கான “IIT – PAL” என்ற மென்பொருள் நீட்டிக்கப்பட்டு ஸ்வயம் வலைதளத்தில் கிடைக்கும் – திரு. பிரகாஷ் ஜவ்டேகர்

Posted On: 20 AUG 2018 5:23PM by PIB Chennai

இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் சபையின் 52 ஆவது கூட்டம் இன்று (20.08.2018) புதுதில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேகர் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொறியியல் படிப்புக்கான கூட்டு நுழைவுத் தேர்வின் மேல்நிலை தேர்வுக்கு தயாரிப்பதற்கென மாணவர்களுக்கு உதவும்  IIT - PAL என்ற மென்பொருள் நீட்டிக்கப்பட்டு ஸ்வயம் வலைதளத்தில் கைபிடித்து அழைத்துச் செல்லும் ஆதரவுடன்  கிடைக்கும் என்று கூறினார். 

சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் வருமாறு:

  • நாட்டின் பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஐ.ஐ.டி-க்கள் தங்கள் அருகில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகளுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்கும்.
  • ஐ.ஐ.டி-க்களில் பட்டப்படிப்புக்கு வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் மாற்றம் இல்லை.
  • சர்வதேச மாணவர்களை பொறுத்தவரை கல்விக் கட்டணத்தை ஐ.ஐ.டி-களின் ஆளுநர்கள் வாரியம் முடிவு செய்யும்.
  • கூட்டு நுழைவுத் தேர்வு (மேம்பட்ட நிலை) அமைப்பில் மேற்கொண்டு மாற்றங்கள் ஏதும் செய்யப்படாது.
  • ஐ.ஐ.டி-க்களில் வளாகங்கள் அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான தரங்களை பரிந்துரை செய்ய தில்லி, ஐதராபாத், திருப்பதி ஐ.ஐ.டி-க்களின் இயக்குநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.
  • ஐ.ஐ.டி-க்கள் தாங்கள் உருவாக்கிய புதுமைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை செயல் விளக்கமாக காட்டுவதற்கு ஆண்டுதோறும் தொழில்நுட்ப விழாக்கள் நடத்தப்படும்.  இவற்றில் முன்னணி பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
  • எம்.டெக் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் பிரச்சினை குறித்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் பெரிய பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
  • ஐ.ஐ.டி-க்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி-யின் ஆளுநர்கள் வாரியம் முடிவு செய்யும்.


(Release ID: 1543448) Visitor Counter : 94


Read this release in: English , Bengali