பாதுகாப்பு அமைச்சகம்
கவச வாகன எதிர்ப்பு வழித் துணையிடப்பட்ட ஏவுகணை (ஏ.டி.ஜி.எம்.) ஹெலினா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
19 AUG 2018 7:52PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரிலிருந்து ஏவக்கூடிய கவச வாகன எதிர்ப்பு வழித் துணையிடப்பட்ட ஏவுகணை ஹெலினா போக்ரான் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் தளத்திலிருந்து இன்று (19.08.2018) பிற்பகல் 2 மணிக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஆயுத அமைப்பு தனது முழு வரம்புக்குமாக சோதிக்கப்பட்டது. ஏவும் மேடையிலிருந்து சிக்கலின்றி செலுத்தப்பட்ட ஹெலினா ஆயுத அமைப்பு இலக்கு சென்ற பாதையில் தொடர்ந்து சென்று இலக்கினை மிகுந்த துல்லியத்துடன் தாக்கியது. இந்த ஆயுத அமைப்பின் அனைத்து செயல் திறன்களும் டெலிமெட்ரி நிலையங்கள் வழி கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் ஹெலிகாப்டர்களால் கண்காணிக்கப்பட்டன.
இந்த ஏவுகணை ஏவுவதற்கு முன்னதாக பூட்டப்படும் நிலையில் அகசிவப்பு கதிர் படப்பிடிப்பு கருவி மூலம் வழித் துணையிடப்பட்டது. உலகிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களில் இந்த ஏவுகணையும் ஒன்று. இந்த சோதனையின் போது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
நாட்டின் பாதுகாப்புத் திறன்களை மேலும் உயர்த்துவதற்கான இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
(रिलीज़ आईडी: 1543399)
आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English