வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை விரும்புவதற்கு, குடிமக்களுக்கு அதிகாரமளிக்க, வசதியான வாழ்விற்கான அவர்களது நகர அதிகாரிகளின் அடையாளக் குறியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 AUG 2018 11:29AM by PIB Chennai

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட வசதியான வாழ்விற்கான அடையாளக் குறியீடு நகர்ப்புற திட்ட நிபுணர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பரவலான ஆர்வத்தையும் ஈர்த்து பொது விவாதத்திற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது. இது தங்களது நகர நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட அடிப்படை தகவல்களால் பல்வேறு தரப்பட்ட மக்களின் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கான கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மதிப்பீடு தரத்தை நிர்ணயிக்கும் ஒரு நடவடிக்கை என்பது மட்டுமல்ல, 78  நகரப் பகுதிகளில் அடிப்படை புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆரம்பத்தை உருவாக்கும் என்பதோடு, ஆதாரத்தின் அடிப்படையிலான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு உத்வேகம் தரவல்லது. அதுமட்டுமல்லாது கவனத்தை உருவாக்குதல், ஒப்பீடு, பொது தளத்தின் குடிமக்கள் மற்றும் நிபுணர்களின் விமர்சனம் மற்றும் பகுப்பாய்வை உருவாக்குவதோடு, தரத்தின் அடிப்படையில் நகரங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டியை முன்னெடுத்துச் செல்கிறது.

 

                                           *****


(வெளியீட்டு அடையாள எண்: 1543175) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi