நீர்வளத் துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரே நடுவர் மன்றம்
Posted On:
09 AUG 2018 1:19PM by PIB Chennai
காவிரி நடுவர் மன்றம் 2018-ஆம் ஆண்டு கூலை 16ஆம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் கலைக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு.அர்ஜூன் ராம் மெஹ்வால் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அளித்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி எந்த இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையை தீர்வுகாண ஒரே நடுவர்மன்றம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட ஐந்து நடுவர் மன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன.
*****
(Release ID: 1542239)
Visitor Counter : 187