மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இம்பிரிண்ட்-2 திட்டத்தின் கீழ் 112 கோடி ரூபாய் செலவில் 112 கோடி ரூபாய் நிதியுதவிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 122 இரண்டு புதிய ஆராய்ச்சி திட்ட முன்மொழிவுகள் – மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர்
புதுதில்லியில் நடைபெற்ற இம்பிரிண்ட்-2 உயர்நிலை கமிட்டியின் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
05 AUG 2018 2:06PM by PIB Chennai
உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இம்பிரிண்ட்-2 திட்டத்தின் கீழ் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் 112 கோடி ரூபாய் செலவில் 122 புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர், 2155 முன்மொழிவுகளில் 122 சிறந்த முன்மொழிவுகள் இம்பிரிண்ட்-2-ன் கீழ் வெட்டு முனை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நிதியுதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இம்பிரிண்ட் முன்மொழிவுகள் தற்போது போட்டி மனப்பான்மையை உருவாக்க, தனியார் நிறுவனங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களிலும் கொண்டு வரப்படுகின்றன.
முதல் முறையாக அனைத்து இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் கூட்டு முன்முயற்சி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் ஆதரவோடு தற்போது தனியார் நிறுவனங்களிலும் இம்பிரிண்ட் ஒரு பங்கு வகிக்கிறது. இந்தியா எதிர்கொண்டுள்ள முதன்மையான அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த சவால்களை சமாளிப்பது மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சுய சார்பை பெறுவதற்கு நாட்டை வலுப்படுத்தி அதிகாரமளித்து வழிவகுப்பதாகும்.
(रिलीज़ आईडी: 1541665)
आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English