வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பசுமையும், நெகிழ் திறனும் கொண்ட புதிய நகர்ப்புற பகுதிகளின் உருவாக்கம்; பசுமைத்தன்மையும் தொடர்ந்த தேவையும் தில்லிக்கான வளர்ச்சியின் நோக்கம் – ஹர்தீப் எஸ். பூரி

தில்லியில் சுமார் 20,000 மரங்களை நடும் வனமஹோத்சவ் தினத்தை கொண்டாடியது தில்லி வளர்ச்சி ஆணையம்
தில்லியில் இவ்வருடம் 10 லட்சம் மரங்களை நடவிருக்கிறது தில்லி வளர்ச்சி ஆணையம்

Posted On: 05 AUG 2018 9:59AM by PIB Chennai

நகர்ப்புற பகுதிக்கான உருவாக்கம் பசுமைத்தன்மை மற்றும் நெகிழ்வுத் திறனை கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை இணையமைச்சர் ஹர்தீப் எஸ்.பூரி கூறியுள்ளார். தற்போது தில்லியின் வளர்ச்சிக்கான வழிமுறைகள் பசுமைத்தன்மை மற்றும் தேவையின் அடிப்படையை நோக்கமாக கொண்டவை என்றார் அமைச்சர். தில்லி வளர்ச்சி ஆணையம் தில்லியெங்கிலும் சுமார் 20,000 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்திருந்த வனமஹோத்சவ் விழாவை தொடங்கி வைத்தார் பூரி.

நகரின் இயற்கை பாரம்பரியத்தை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் தில்லி வளர்ச்சி ஆணையத்தின் குறிப்பிடத்தக்க பங்கை குறிப்பிட்டு பேசிய அமைச்சர், தில்லியில் பசுமைப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான 783 பூங்காக்கள் மற்றும் 6 பல்லுயிர் பூங்காக்கள், 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. மண்டல பூங்காக்கள், நகர பூங்கா, மாவட்ட பூங்காக்கள், சமுதாய பூங்காக்கள் மற்றும் குடியிருப்பு பூங்காக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை  பெரும் திட்டத்தின் வழிமுறைகளின் அடிப்படையில் தில்லி வளர்ச்சி ஆணையம் முன்னெடுத்து செல்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான மரம் நடுதலில் தில்லி வளர்ச்சி ஆணையத்தின் முன்முயற்சியை பாராட்டினார் அமைச்சர். இதுவரை 1.70 லட்சம் மரங்களை நட்டுயிருக்கும் தில்லி வளர்ச்சி ஆணையம் தமது இலக்கான 10 லட்சம் மரங்களை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் எட்டவிருக்கிறது.



(Release ID: 1541664) Visitor Counter : 126


Read this release in: English