குடியரசுத் தலைவர் செயலகம்

ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவரின் உரை

Posted On: 05 AUG 2018 1:17PM by PIB Chennai

ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்
7-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த்.

     நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் 2-வது தலைமுறை அமைப்பு என்கின்ற முறையில், ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் கடந்த கால மாதிரிகளில் இருந்து கற்க வேண்டியது முக்கியம் என்றார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நாம் உருவாக்கிய தொழில்துறை அடிப்படைகளைக் கொண்டு நமது இலக்குகளை கட்டுப்படுத்த வேண்டியது இல்லை. அதற்கு மாறாக ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகம் 4-வது தொழில் புரட்சிக்கு ஏதுவாக இருந்து, 21 ஆம் நூற்றாண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும்.

     சிறந்த அறிவியல் பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும், கற்றுக் கொடுக்கும் அங்காடிகளோ அல்லது பட்டம் வழங்கும் தொழிற்சாலைகளோ அல்ல. அவை புதுமைக்கான ஊற்றுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான விளைநிலங்கள் என்பதோடு புதிய தொழில் தொடங்குவதற்கான தொழில்நுட்ப ஊக்குவிகளாகும்.

     ஐதராபாத் நீண்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் செயல்பாட்டிற்கான பாரம்பரியத்தைக் கொண்ட நகரமாகும்.

     ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வெற்றி அதன் வீரியத்தையும், தாக்கத்தையும் கொண்டு நிர்ணயிக்கப்படுமே அன்றி ஒட்டு மொத்த ஐதராபாத்தின் அறிவியல் சூழலை கொண்டு அல்ல என்றார் அவர்.


(Release ID: 1541663) Visitor Counter : 181


Read this release in: English