தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு பிரிவின் தலைமைப் பொது மேலாளராக வி. ராஜூ பொறுப்பேற்றார்
Posted On:
02 AUG 2018 5:31PM by PIB Chennai
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைமைப் பொது மேலாளராக திரு. வி. ராஜூ ஐ.டி.எஸ். ஆகஸ்ட் முதல் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரு. வி. ராஜூ இந்திய அரசின் இந்திய தொலைத்தொடர்பு சேவைப் பணியில் 1983-ஆம் ஆண்டில் சேர்ந்தார். இதற்கு முன்பு திருச்சி, குவஹாத்தியி்ல் முதன்மைப் பொது மேலாளராகவும், அந்தமான் நிகோபார் தீவுகளில் தலைமைப் பொது மேலாளராகவும், திருநெல்வேலியில் பொது மேலாளராகவும், புதுதில்லி பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலகத்தில் இணை துணைத் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
திரு. வி. ராஜூ சென்னைப் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தி்ல் மின்னணு பொறியியலில் பி.டெக். பட்டம் பெற்றார். ஐதராபாத் ஜே.என்.டி. பல்கலைக் கழகத்தி்ல் டிஜிட்டல் சிஸ்டம்ஸ் மற்றும் கணினி பொறியியல் பிரிவி்ல் எம்.டெக். பட்டத்தை அவர் பெற்றார். குருகிராம் மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தில் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மைப் பிரிவில் முதுநிலை பட்டயப் படிப்பிலும் அவர் தேர்ச்சி பெற்றார். அவர் ஜெர்மனியில் உள்ள சீமென்ஸ் நிறுவனத்தின் தொழி்ல் நிலைப் பயிற்சியும், வாஷிங்டன் ஜார்ஜ் மேஸன் பல்கலைக் கழகத்தில் மேலாண்மைப் பயிற்சியும் பெற்றார். மேலாண்மைத் துறையில் அவர் தற்போது பி.எச்.டி. பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
கல்வித்துறையில் சிறந்து விளங்கிய திரு. வி. ராஜூ, பலவேறு தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த தொலைத்தொடர்பு பராமரிப்பு ஆகியவற்றுக்காக பல்வேறு அகில இந்திய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த நூல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அந்த நூலுக்கு முகவுரை எழுதிய மத்திய தொடர்புத்துறை அமைச்சர் அதனை வெளியிடவும் செய்தார்.

வி. ராஜூ
*****
ரெசின்
(Release ID: 1541340)
Visitor Counter : 192